Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 26 நவம்பர், 2013

லப்பைகுடிக்காட்டில் பாதாள சாக்கடை திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். SDPI

SDPI கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் 24.11.2013 நேற்று மதியம் 3.00 மணிக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் A.சித்தீக் பாஷா வரவேற்புரை நிகழ்த்தினார்.மாவட்ட தலைவர் டாக்டர் A.முஹமது ரபீக் தலைமை தாங்கினார்.


மாவட்ட பொது செயலாளர் M.அபுபக்கர் சித்தீக் சிறப்புரை நிகழ்த்தினார்.மாவட்ட செயலாளர் இதயதுல்லா முன்னிலை வகித்தார்.மற்றும் பெரம்பலூர், வி களத்தூர், லப்பைகுடிக்காடு, வடகரை நகர தலைவர், நகர செயலாளர்கள் கலந்து கொண்டனர்.


இதில் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும், பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப் பட்டது.

அதில் டிசம்பர் 06 அன்று தலித்-முஸ்லிம் ஒற்றுமை போஸ்டர் பிரச்சாரம் மற்றும் வி களத்தூரில் கருத்தரங்கமும், லப்பைகுடிகாட்டில் ஆர்ப்பாட்டமும், பெரம்பலூர் மற்றும் வடகரை யில் தெருமுனை கூட்டமும் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

வி களத்தூர் கல்லாற்றில் வெள்ளத் தடுப்பனைகள் அமைக்க வேண்டும்.லப்பைகுடிக்கட்டில் பாதாள சாக்கடை திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். என பல்வேறு தீர்மானங்கள் இயறப்பட்டன.
இறுதியாக மாவட்ட பொருளாளர் ஹஜ்ரத் அய்யூப் நன்றி கூறினார்.

மின்னஞ்சல் மூலமாக
சரீப்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக