Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 13 நவம்பர், 2013

மனிதர்களின் முழங்காலில் இதுவரை கண்டறியப்படாத புதிய தசை நார்!

மனிதர்களின் முழங்கால் பகுதியில் முன்னெப்போதும் அறியப்படாத தசைநார் ஒன்று காணப்படுவதைக் கண்டறிந்துள்ளதாக பெல்ஜியத்தின் முழங்கால் மருத்துவ நிபுணர்கள் அறிவித்திருக்கின்றனர்.
தொடை எலும்புக்கு மேல்புறத்திலிருந்து முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடைப்பட்ட முன்னங்கால் வரையான பகுதி வரை இந்த தசைநார் அமைந்துள்ளதாக மருத்துவர் க்ளஸ் மற்றும் பேராசிரியர் ஜோஹன் பெல்லெமன்ஸ் ஆகிய மருத்துவ நிபுணர்கள் இருவரும் கண்டறிந்துள்ளனர்.

நாம் நடந்து செல்லும்போது திடீரென்று திசை மாற்றி கால்களை திருப்பி நகர்த்தும்போது இந்த தசைநார்கள்தான் கால்களுக்கான பாதுகாப்பு அரணாக அமைவதாக இவர்கள் கூறுகிறார்கள்.
இப்படி ஒரு தசைநார் முழங்காலை ஒட்டி அமைந்திருக்கும் என்று நீண்ட காலமாக கருத்துகள் இருந்து வந்த போதிலும் இப்போதுதான் அது பற்றிய ஒரு தெளிவு ஏற்பட்டிருக்கிறது என்று பிரிட்டனிலுள்ள முழங்கால் சிகிச்சை நிபுணரான ஜோயல் மெல்டன் கூறுகிறார்.
மருத்துவ பரிசோதனைக்கான உடல் உறுப்பு தானமாகக் கிடைத்த 41 பேரின் முழங்கால்களை நுண்ணோக்கி கருவி மூலம் ஆராய்ந்து பார்த்த விஞ்ஞானிகள், எல்லா முழங்கால் எலும்புகளில் இந்த தசைநார்கள் காணப்பட்டதை கண்டறிந்துள்ளனர். அதுவும் அவை எல்லாம் ஒரே வடிவமைப்பில் இருப்பதாகவும் இவர்கள் கண்டறிந்தார்கள்.
பொதுவாக விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படக்கூடிய முழங்கால் காயங்களின்போது, அவற்றை சரியாக புரிந்துகொள்ளவும் சிகிச்சை அளிக்கவும் இந்த தசைநாரின் அமைப்பு உதவும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
கால்பந்தாட்டம், கூடைப் பந்தாட்டம், பனிச்சறுக்கல், ஓட்டப் போட்டிகள் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடும் வீரர்கள் தங்களின் கால்கள் செல்லும் திசையை திடீரென்று மாற்றும்போதோ நிறுத்தும்போதோ இவ்வாறான முழங்கால் உபாதைகள் ஏற்படுகின்றன.
இவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகளால் முன்னேற்றம் ஏற்படுகின்ற போதிலும் 10 முதல் 20 வீதமானோருக்கு முழுமையான குணம் கிடைப்பதில்லை. கால்களின் முன் பக்கவாட்டில் இருக்கின்ற இந்த தசைநாரில் ஏற்படுகின்ற காயங்களும் அனேகமான முழங்கால் உபாதைகளுக்கு பகுதியளவில் காரணமாகின்றன என்று மருத்துவர் க்ளஸ் மற்றும் பேராசிரியர் ஜோஹன் பெல்லமன்ஸ் நம்புகின்றனர்.
முழங்கால் காயங்களால் பாதிக்கப்படுவோரை குணப்படுத்த இந்த புதிய கண்டுபிடிப்பை எந்தளவுக்கு பயன்படுத்த முடியும் என்று அறிய இன்னும் மேலதிக ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக