பெரம்பலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் முதல்வர் கோப்பைக்காக மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த 29ம் தேதி துவங்கி தொடர்ந்து நடைபெற்றது.
இதில் வேப்பந்தட்டை அருகே உள்ள அயன்பேரையூர் விஸ்டம் மெட்ரிக் பள்ளி மாணவிகள், 14 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கைப்பந்து போட்டியில் அபாரமாக ஆடி முதலிடத்தை வென்றனர். இதே போல், 17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கைப்பந்து போட்டியிலும் திறமையாக ஆடி முதலிடத்தை பெற்றனர். இதையடுத்து, இவர்கள் அனைவரும் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் நடைபெற உள்ள மண்டல அளவிலான கைப்பந்து போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இதைத் தொடர்ந்து கைப்பந்து போட்டிகளில் சாதனை படைத்த பள்ளி வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா பள்ளியின் சார்பில் நடைபெற்றது. விழாவுக்கு தலைமை வகித்த நிர்வாக இயக்குநர் ஜியாவுதீன், முன்னிலை வகித்த பள்ளித் தலைமையாசிரியர் பவுல் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் கண்ணன், ஆசிரியர் கலைச் செல்வன் உள்ளிட்ட பலர் மாணவிகளை மனதார வாழ்த்தினர்.
இதே போல், முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் செஸ் போட்டியிலும் பெரம்பலூர் மாவட்டம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பேரில் 6 பேர் விஸ்டம் பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களை பள்ளி ஆசிரியர்களும், பெற்றோர்- ஆசிரியர் கழகத்தினரும் பாராட்டினர்.
vazhthukkal n insha allah ithu thodarattum.
பதிலளிநீக்கு