Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 9 நவம்பர், 2013

நமதூரில் நாளை நடைபெறும் மருத்துவ முகாம்...

நமதூரில் நாளை நடைபெறும் மருத்துவ முகாம்...

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும் ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இந்த வருடம் நவம்பர் 01 முதல் 15 ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது.


தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மினி மாரத்தான், உடற்பயிற்சி வகுப்புகள், ஆரோக்கியம் தொடர்பான மருத்துவ முகாம்கள், இரத்த தான முகாம்கள், அரசு மருத்துவ மனைகளை தூய்மைப் படுத்துதல் போன்ற பல்வேறு நலப் பணிகள் முழுவீச்சில் மக்களின் பேராதரவுடன் நடைபெற உள்ளது.
இதன் ஒரு பகுதியாக நமதூரில் பல்வேறு நல பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அல்ஹம்துலில்லாஹ்... 
இதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நாளை(10.11.2013) காலை 10 மணியளவில் நமதூரில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த உள்ளது.
இதில் இதயம் , இரத்த கொதிப்பு மற்றும் சக்கரை நோய் ஆகியவைகள் சிறப்பு முகாமாக நடைபெற உள்ளது. இதில் நமதூரில் உள்ள மக்கள் பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு 
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா 
லெப்பைக்குடிக்காடு - கிளை
மின்னஞ்சல் மூலமாக
பாப்புலர் ஃப்ரண்ட் LBK

1 கருத்து:

  1. நமது ஊர் குடி தண்ணீரில் எதுவும் பெரச்சனை இருகின்றதா? சமிபத்தில் நமது ஊரில் அதிகமாக கான்செர் நோய் தாகி இருக்கின்றது அதை பத்தி யாருக்கேனும் ஐடியா இருக்கின்றதா? நமது ஊர் தண்ணீர் குடிபதற்கு ஏற்றதா? இதை பற்றி கொஞ்சம் அலசி அரயலமே.

    ராக்

    பதிலளிநீக்கு