Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 28 நவம்பர், 2013

எல்லோரும் எதிர்பார்த்த “எக்ஸ்போ 2020” (Expo 2020) துபைக்குக் கிடைத்தது! -

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த “எக்ஸ்போ 2020” வாக்கெடுப்பில் துபை வெற்றி பெற்றது.
எக்ஸ்போ 2020 கிடைப்பதற்காக துபை (யுஏஇ), பிரேசில் (ஸாவோ போலோ), எகடனின்பர்க் (ரஷ்யா), இஸ்மிர் (துருக்கி) ஆகிய நான்கு நகரங்கள் போட்டியிட்டன. முன்னதாக போட்டியில் பங்கெடுக்கும் நான்கு நாடுகளின் பிரதிநிதிகளும் ஏன் தங்கள் நாட்டு நகரத்திற்கு ஓட்டு போடவேண்டும் என்று விளக்கி (Presentation) பேசினர்.

முதல் விளக்கப் பேச்சை துபை சார்பாக அமீரக அமைச்சர் ரீம் அல் ஹாஷிமி நிகழ்த்தினார். அவருடைய சக்தி மிக்க பேச்சு அனைவரையும் கவர்ந்தது.


அடுத்ததாக, பிரேசிலின் சாவோ போலோ நகர மேயர் அந்நகருக்காகப் பேசினார். அவருக்கு அடுத்து, ரஷ்யாவின் எகடனின்பர்க் நகருக்காக ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெத்வெதேவ் பேசினார். அதற்கடுத்து, துருக்கியின் இஸ்மிர் நகருக்காக அதன் மேயர் பேசினார். ஆனால் நால்வரது பேச்சுகளில் அமீரகத்தின் ரீம் அல் ஹாஷிமியின் பேச்சே வெகு சிறப்பாக அமைந்தது.

168 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட Bureau International des Expositions என்ற அமைப்பு 2020ம் ஆண்டில் World Expo 2020 நடக்கப் போகும் நகரத்தைத் தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பை நடத்தியது. பாரிசில் OECD சென்டரில் வைத்து இந்தத் தேர்தலில் மொத்தம் 3 சுற்று வாக்கெடுப்புகள் நடைபெற்றன.

முதல் சுற்று வாக்கெடுப்பில் 163 நாடுகள் பங்கெடுத்தன. துபை 77 வாக்குகள் பெற்று மிக எளிதாக இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது. ரஷ்யா 37 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது. துருக்கி 33 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது. சாவோபோலோ 13 வாக்குகள் பெற்று மிகக் குறைந்த வாக்குகள் பெற்ற நகரம் என்ற அளவில் போட்டியை விட்டு வெளியேறியது.

முதல் சுற்றிலேயே துபைக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக தெரிந்தது.

அதற்கடுத்து நடந்த இரண்டாவது சுற்று வாக்கெடுப்பில் துபை 87 வாக்குகள் பெற்று பலமான நிலைக்கு முன்னேறியது. ரஷ்யா 41 வாக்குகள் பெற்று இரண்டாவது வந்தது. துருக்கி 36 வாக்குகள் பெற்று போட்டியின் தகுதியை இழந்து வெளியேறியது.

அதற்கடுத்து இறுதிச் சுற்றான மூன்றாது சுற்றுற வாக்கெடுப்பு ஆரம்பமானது. மூன்றாவது சுற்றுப் போட்டி நேரடியாக துபைக்கும், ரஷ்ய நகருக்கும் நடந்தது. ஆனால் துபை மொத்தம் 116 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. ரஷ்யா 47 வாக்குகளே பெற்றது.

“எக்ஸ்போ 2020” கிடைத்தது மூலம் துபையின் சுற்றுலா, வியாபாரம், முதலீடுகள் அனைத்தும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக