Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 15 நவம்பர், 2013

லெப்பைக்குடிக்காடு பேரூராட்சிப் பகுதியில் சிறப்பு குழந்தைகளுக்கு இனிப்பு துணைத் தலைவர் வழங்கினார்


குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, லெப்பைக்குடிக்காடு பேரூராட்சிப் பகுதியில் சிறப்பு குழந்தைகளுக்கு துணைத் தலைவர் இனிப்பு வழங்கினார்.  
பெரம்பலூர் மாவட் டம், லெப்பைக்குடிக்காடு  பேரூராட்சி அலுவலகம் பின்புறம்  மாற்றுத்திறனாளிகளுக்கான உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மைய பள்ளி உள்ளது. இங்கு குழந்தைகள் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, இங்குள்ள சிறப்பு குழந்தைகளுக்கு பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் முஹம்மது தஸ்லீம் (எ) முஹம்மது பாரூக் இனிப்பு வழங்கினார்.
விழாவில் மேற்கு மஹல்ல ஜமாத்தார் சம்சுதீன், அப்துல் காதர், பக்கீர் முஹம்மது, நாசர், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி (மேற்கு) தலைமையாசிரியர் ராமரத்தினம்,  உண்டு உறைவிடப் பள்ளி ஆசிரியைகள் கலைச்செல்வி, சுபத்ரா, சத்யா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

நன்றி தினகரன்

1 கருத்து:

  1. நமது ஊர் குடி தண்ணீரில் எதுவும் பெரச்சனை இருகின்றதா? சமிபத்தில் நமது ஊரில் அதிகமாக கான்செர் நோய் தாகி இருக்கின்றது அதை பத்தி யாருக்கேனும் ஐடியா இருக்கின்றதா? நமது ஊர் தண்ணீர் குடிபதற்கு ஏற்றதா? இதை பற்றி கொஞ்சம் அலசி அரயலமே.

    ராக்

    பதிலளிநீக்கு