அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு
கர்ப்பிணிகளுக்கு 12ஆயிரம் ரூபாய்:முஸ்லிம்கள் பயன் பெறுவார்களா...? தமிழ்நாட்டில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவிதிட்டம் செயல்படுத்தபடுகிறது. இந்தத் திட்டம் குறித்து முஸ்லிம்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. இந்தத் திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு 4ஆயிரம் ரூபாய்கள் மூன்று தவணைகளாக மொத்தம் 12ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதற்காக கிராம நிர்வாக அலுவலர் உட்பட எந்த அரசு அதிகாரியிடமும் கர்பிணிப் பெண்கள் எந்தச் சான்றும் பெறத் தேவையில்லை. கர்பமான 7வது மாதத்தில் நேரடியாக அரசு மருதுவமனை,ஆரம்ப சுகாதார நிலையம்,நகராட்சி அல்லது மாநகராட்சி மருதுவமனைகளில் கர்ப்பிணிகள் இலவச மருதுவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்த பரிசோதனையை அரசு சுகாதார நிறுவனங்களில் மட்டுமே செய்ய வேண்டும். இந்த பரிசோதனைகளை முடித்தவுடன் முதல் தவணையாக ரூபாய் 4ஆயிரம் பெற்று கொள்ளலாம். இந்தப் பரிசோதனையை முடித்து 4ஆயிரம் ரூபாய் பெற முடியும் என்ற விபரம் கூட தெரியாதவர்களாக ஏழை முஸ்லிம் தாய்மார்கள் இருக்கிறார்கள். அதன் பிறகு அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றவுடன் இரண்டவது தவணை தொகை 4ஆயிரமும், டி.பி.டி. மற்றும் பெண்டாலண்ட் தடுபூசி போட்ட பிறகு மூன்றாவது தவணை தொகையாக ரூ.4ஆயிரமும் கர்ப்பிணிப் பெண்களின் வங்கி கணக்குகளில் செலுத்தபடும். முதல் தவணைத்தொகை பெற்ற கர்ப்பிணிப் பெண்கள் அரசு மருதுவமனையில் குழந்தை பெறாமல் தனியார் மருத்துவமனைகளில் குழந்தை பெற்றால் 2-வது மற்றும் 3-வது தவணைத் தொகைகளைப் பெற இயலாது. எனவே 7மாத கர்ப்பிணிகளாக உள்ள முஸ்லிம் பெண்கள் அரசு மருத்துவமனைக்குச் சென்று இலவச பரிசோதனைகள் மேற்கொண்டு தமிழக அரசு தரும் 4ஆயிரம் ரூபாய் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக