Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 28 மார்ச், 2014

தொழுகையும் அதன் முக்கியத்துவமும்...

“அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள்.”      (அல்குர்ஆன் 2:3)

 நமதூரில் தொழுகையின் முக்கியத்துவத்தை அறிந்து த.மு.மு.க சார்பாக

ஆண்டு விழா .....


இன்று 28.03.2014 ஊ.ஒ.ந.நி.பள்ளியில் (சந்தையில்) ஆண்டு விழா நடைபெற்றன. இதில் வழக்கம் போல ஆடலும் , பாடலும் நிகழ்ச்சி

தேர்தல் அவசரம்...

நமதூரில் இன்று காலை (28.03.2014) தேர்தல் பரக்கும் படை அதிரடி வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில் வெளியில் இருந்து வரும் வாகனமும்

பேரூராட்சியின் அதிகாரம் யார்கையில் ?


 நாம் கடந்த காலங்களில் சுட்டி காட்டப்பட்ட சம்பவம். பல நாட்களாகவே கிடப்பில் கிடந்தன. இதனால் அப்பகுதி மக்கள் பட்ட துயரம் வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஏனெனில் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பார்கள்.

வியாழன், 27 மார்ச், 2014

வகுப்புவாத சக்திகளை தோற்கடிக்கவும் மாற்று அரசியலுக்கு வாக்களிக்கவும் மக்களுக்கு கோரிக்கை - பாப்புலர் ஃப்ரண்ட்

வருகின்ற பாராளுமன்ற தேர்தல் மக்களின் தீர்ப்பினை மீண்டும் எதிர்பார்த்து இருக்கிறது. இரண்டு முறை ஆட்சியில் தொடர்ச்சியாக அமர்ந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதிலிருந்து தோல்வி அடைந்துள்ளது. இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்த போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து மீள முடியாமல் முடங்கியது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தோல்வியானது தேசிய அளவில் மக்களிடையே ஒரு வித எதிர் அலையை ஏற்படுத்தியுள்ளது. துரதிருஷ்டவசமாக மக்களிடையே ஏற்பட்ட இந்த எதிர் அலையின் மூலம் அரசியல் இலாபம் அடைய முயற்சிப்பவர்கள் நமது நாட்டின் அடிப்படை அரசியல் கோட்பாடுகளுக்கே பெரும் அச்சுறுத்தலாக விளங்குபவர்கள் ஆவார்கள்.

குழந்தைகளுக்கான டயாபர் உபயோகிப்பதினால் கெடுதிகள் அதிகம்! மருத்துவர்கள் அறிவிப்பு!!

குழந்தை பிறந்த உடனே சில நாட்களிலேயே அவர்களுக்கு டயாபர்களை மாட்டி விடுகின்றனர். அடிக்கடி சிறுநீர், மலம் கழிப்பதால் குழந்தையின் பெட், துணி போன்றவைகளை துவைக்க சிரமப்படும்பெற்றோர்கள் டயாபர்களை மாட்டிவிட்டு பின்னர் தூக்கி எறிந்து விடுகின்றனர். இந்த டயாபர்களால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு, சுற்றுச் சூழலும் மாசடைகிறது. எனவே குழந்தைகளுக்குடயாபர் உபயோகிக்கும் பெற்றோர்கள் அதனால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி தெரிந்து கொண்டு உபயோகிக்க வேண்டும் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை குழந்தைகளுக்கு துணியினாலான, ‘டயாபர்’களே பயன்படுத்தப்பட்டன. பின்னர், பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும், ‘டயாபர்’கள் வரத் துவங்கின. இதன்பிரபலத்தால், துணி, ‘டயாபர்’களின் பயன்பாடு, படிப்படியாக குறைந்து விட்டது.

புதன், 26 மார்ச், 2014

அமீரகத்தில் அல்லாஹ்வின் ரஹ்மத்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அமீரகத்தில் இன்று அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்கிகொண்டுள்ளது. (அல்ஹம்துலில்லாஹ்)


நேற்று மாலை முதல் வானம் மேகமூட்டத்தோடு லேசான தூரல் தொடங்கியது. இன்று அமீரகத்தில் பரவலாக ரஹ்மத் இறங்கிக்கொண்டே உள்ளது. இதனால் தொழில்கள் பாதிப்பு ஏற்பட்டாலும் மக்கள் மத்தில் மிகுந்த

புரிஜ்ஜா சிந்தித்து பாருங்க....


களகட்டும் நமது மாவட்ட அரசியல் பிரச்சாரம்...


லப்பைகுடிக்காடு பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்த 2 பேர் கைது!

லப்பைகுடிக்காடு பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்த 2 பேர் கைது!

பெரம்பலூர் அருகே பறக்கும் படை தாசில்தார் நடத்திய அதிரடி சோதனையில், கள்ளத்தனமாக சாலையோரம் மதுபானம் விற்ற 2 பேர் கையும், களவுமாகப் பிடிபட்டனர். இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 46 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

செவ்வாய், 25 மார்ச், 2014

வெள்ளிக்கிழமை நமதூர் கடைவீதி

வெள்ளிக்கிழமை நமதூர் கடைவீதி

வெள்ளிக்கிழமை வந்துவிட்டாலே நமதூரில் ஒவ்வெறு வீட்டிலும் அசவை உணவு இல்லாமல் இருப்பதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் அன்று கடைவீதிகளுக்கு வந்தாலே கூட்டம் கடைகளில் நெரிவதை பார்க்க முடியும்.

ஆமாவா? இல்லையா?

கருத்துப்படம்



தாருஸ்ஸலாம் பள்ளிக்கூடம் நான்காம் ஆண்டு விழா

தாருஸ்ஸலாம் பள்ளிக்கூடம் நான்காம் ஆண்டு விழா


தாருஸ்ஸலாம் மழலையர் தொடக்கப்பள்ளி நான்காம் ஆண்டு விழா அழைப்பிதளாக இந்த துண்டு பிரசுகம் விநியோகம் செய்யப்பட்டது.

திங்கள், 24 மார்ச், 2014

சுவாமியின் வாக்குமூலம் நாஸிர் ஹுஸைனின் விடுதலைக்கு உதவியது!

சுவாமியின் வாக்குமூலம் நாஸிர் ஹுஸைனின் விடுதலைக்கு உதவியது!
nasir
புதுடெல்லி: தீவிரவாத வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோரைச் சார்ந்த முஸ்லிம் இளைஞர் நாஸிர் ஹுஸைன்(வயது32) விடுதலையானார்.
வெடிப்பொருட்களுடன் 2007-ஆம் ஆண்டு ஜூன் மாதம் லக்னோவில் ஒரு ஹோட்டல் அறையில் இருந்து ஹுஸைனை கைதுச் செய்ததாக உத்தரபிரதேச அதிரடிப்படை

ஞாயிறு, 23 மார்ச், 2014

பகைவனுக்கு பல்லக்கு துாக்குபவர்கள் கவணத்திற்கு!

பகைவனுக்கு பல்லக்கு துாக்குபவர்கள் கவணத்திற்கு!

நமதூர் மற்றும் நமதூர் மக்கள் மிகவும் பாரம்பரியமிக்வர்கள். இடைபட்ட சில காரணங்களினால் ஜமாத் ரீதியாகவோ! இயக்கங்கள் ரீதியாகவோ! அல்லது அரசியல் ரீதியாகவோ! கருத்து வேறுபாடுகள் நமக்குள் இருந்தாலும்,

இரு கனவுகள்... ஒரே செயல்திட்டம்!

இந்தியாவின் அடுத்த பிரதமர் மோடி அல்லது ஜெயலலிதா. முதன்முதலில் இப்படிச் சொன்னவர் சோ.

ஆருடமா, செயல்திட்டமா?
தேசிய அரசியலில் அன்றைக்கு மோடி இவ்வளவு செல்வாக்கானவர் இல்லை. பா.ஜ.க. அத்வானி கையில் இருந்தது. ஜெயலலிதாவும் இவ்வளவு உயரத்தில் இல்லை. முந்தைய தேர்தலில் ஜெயலலிதா, மாயாவதி, மம்தா மூவரையும் இணைத்து ‘15-வது மக்களவையைத் தீர்மானிக்கும் மூன்று சக்திகள்’ என்று தேசிய ஊடகங்கள் கட்டமைத்த பிம்பம் சுக்குநூறாகிவிட்டிருந்த நிலையில், ஜெயலலிதா அடுத்த பிரதமர் என்று அ.தி.மு.க. பொதுக்கூட்டப் பேச்சாளர்கள்கூட அன்றைக்குச் சொல்லத் தயங்கியிருப்பார்கள். சோ சொன்னார். தொடர்ந்து, ‘மோடி அல்லது ஜெயலலிதா’ எனும் முழக்கத்தைப்

புதன், 19 மார்ச், 2014

தீர்வை தேடி அழையும் பொதுமக்கள்

தீர்வை தேடி அழையும் பொதுமக்கள்

இன்று நமதூர் ஜெய்லானி தெருவில் சிலின்டருக்காக மக்கள் கூட்டம் கட்டுக்குள் அடங்காத நிலை காணப்பட்டது. ஒரே இடத்தில் நான்கு வண்டி சிலின்டர் வினியோகம்.

தட்டுப்பாடா அல்லது தரமறுப்பா?

மக்களின் குறையா? அல்லது விநியோகஸ்தர்களின் பிழையா?

மில்லத் கல்வி அரக்கட்டளை கல்வி விழிப்புணர்வு நோட்டீஸ்

மில்லத் கல்வி அரக்கட்டளை கல்வி விழிப்புணர்வு நோட்டீஸ்

முகநுால் செய்தி

முகநுால் செய்தி

இன்று சிங்கப்பூரிலிருந்து வந்த எனது மகளை அழைத்து வர திருச்சி ஏர்போர்ட் சென்றிருந்தோம்.பகல் ஒரு மணிக்கு வெளியான மகளுடன் உடனே புறப்பட்டு தஞ்சாவூர் வந்து சாப்பிட்டு விட்டு அங்கே டாக்டரிடம் என்

செவ்வாய், 18 மார்ச், 2014

10ம் வகுப்பு: வரும் கல்வியாண்டில் முப்பருவ முறை இல்லை

10ம் வகுப்பு: வரும் கல்வியாண்டில் முப்பருவ முறை இல்லை


வரும் கல்வியாண்டில் (2014-15) பத்தாம் வகுப்பில் முப்பருவ முறை அறிமுகம் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு முழுவதுக்கும் ஒரே புத்தகம், பொதுத்தேர்வு ஆகியவை அடுத்த கல்வியாண்டிலும் தொடரும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

திங்கள், 17 மார்ச், 2014

நமதூரின் எதிர்காலம் இனி யார்கையில்...

நமதூரின் எதிர்காலம் இனி யார்கையில்...

குன்னம்,: குன்னம் அருகே வருவாய்த் துறைக்கு சொந்தமான இடத்தில் மண்டபம் கட்டுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் இருதரப்பைச் சேர்ந்த 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள லப்பைக்குடிக்காடு கிராமத்தில் மேற்கு ஜமாத் பள்ளி வாசல் அருகே வருவாய்த் துறையினருக்கு சொந்தமான 10 சென்ட் இடத்தை அதே ஊரைச் சேர்ந்த அப்துல்சலீம் என்பவர் கடந்த 1997ம் ஆண்டு அனுபவ பாத்தியத்தில் பட்டா பெற்றார். 



ஞாயிறு, 16 மார்ச், 2014

ஹஜ் செல்ல விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு !

ஹஜ் செல்ல விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு !

ஹஜ் செல்ல விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 15–ந் தேதிலிருந்து மார்ச் 22-ந் தேதிவரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு ஹஜ் கமிட்டி சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

ஹஜ் 2014–ல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லிம்

முதலில் என் சமுதாயம் பிறகுதான் மற்றவை

முதலில் என் சமுதாயம் பிறகுதான் மற்றவை


ஒற்றை இலையோ அஸ்தம சூரியனோ யார் வேண்டுமானாலும் நாளை தாமரையை தலையில் சூடலாம்.
இது நாடறிந்த உண்மை.
அதை பேச இது நேரமில்லை…

வெள்ளி, 14 மார்ச், 2014

பறிபோன சுதந்திரம்!

30 அல்லது 40 ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டத்தை சிந்தித்துப் பார்க்கவே சிலருக்கு சோர்வாக தோன்றலாம்.குறிப்பாக கிராமப்பகுதிகளில்.போதிய கல்வி அறிவு இல்லாத பெற்றோர்கள், வழிகாட்டுதல்களை வழங்க யாரும் இல்லாத நிலை, குறைவான கல்வி ஸ்தாபனங்கள் இதுவெல்லாம் பலருக்கும் குறைபாடாக தோன்றலாம்.ஆனால்,

கலாட்டூனாகும் கார்ட்டூன்!

“என் குழந்தைகளை சினிமா பார்க்க நான் அனுமதிப்பதே கிடையாது” – இது பல கண்டிப்பு பெற்றோர்களின்  பலத்த குரல். ஆனால் குழந்தைகளை கார்ட்டூன் படங்களை பார்ப்பதற்கு அவர்கள் தடையேதும் ஏற்படுத்துவதில்லை என்பதை விட வசதி ஏற்படுத்துகின்றனர் என்பதுதான் ஆச்சர்யம்.
தனது வேலைகளில் கவனம் செலுத்த, குழந்தைகளின் கவனத்தை திசைதிருப்ப வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கத்தான் செய்கிறது. அதற்கு அவர்கள் பயன்படுத்தும் ஆயுதம்தான் ‘கார்ட்டூன் மூவி’. இப்படி இரண்டு வயது குழந்தைகளையும் தொலைக்காட்சிக்கு அடிமையாக்கிய பெருமை தாய்மார்களுக்கே சாரும்.

சத்தியம் வென்றது ! அசத்தியம் அழிந்தது!

சத்தியம் வென்றது ! அசத்தியம் அழிந்தது!

திருச்சியில் ஒரு இஸ்லாமிய பள்ளியில் பயிலும் மாணவி +2 தேர்வு எழுத வேறொரு பள்ளிக்கு சென்றுள்ளார். அந்த பள்ளியில் தேர்வு நடத்தும் ஆசிரியர் அந்த மாணவியை புர்காவுடன் தேர்வு எழுத தடை விதித்தனர்.

அந்த மனைவியோ புர்காவை கழற்ற மாட்டேன் என்று விவாதம் செய்துள்ளார்.இதனை யடுத்து அந்த மாணவி பயிலும் பள்ளியின் தாளாளர் தலையிட்டு Human Guidance and Welfare Center, Chennai கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

இறைவனின் கிருபையால் தேர்வு எழுதுவதற்க்காக இஸ்லாமிய அடையாளமான புர்காவை கழற்ற தேவையில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 46 ஆயிரம் பறிமுதல்

திருமாந்துறை சுங்கச் சாவடி பகுதியில் நேற்று உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 46 ஆயிரம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார்.
வாகன சோதனை

வியாழன், 13 மார்ச், 2014

அடுத்த கட்டத்தை நோக்கி நமது இணையதளம் - தலைமை நிருபர்.

புகழ் அனைத்தும் ஆற்றல் மிக்கவனும் வெற்றிக்கு நிரந்தர சொந்தக்காரனுமாகிய அல்லாஹ் ஒருவனுக்கே!

அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிற வேறொன்றும் நிச்சயமாக எங்களை அணுகாது. அவன்தான் எங்களுடைய இறைவன்” என்று நீங்கள் கூறுங்கள். நம்பிக்கையாளர்கள் அனைவரும் அல்லாஹ்விடமே பொருப்பை ஒப்படைக்கவும்
அத்தவ்பா 51.

நமது தளம் 2 ஆண்டுகள் கடந்து அல்லாஹ்வின் பேர் உதவியால் 3 ஆம் ஆண்டு மார்ச் 13 ல் அடியெடுத்து வைப்பதினால் நமது ஆசிரியர் குடும்பம் ஒன்று கூடி, நமது கடந்த கால நிகழ்வுகளை அலசி ஆராயப்பட்டது. மேலும் வரக்கூடிய காலங்களில் நாம் எப்படி எதைநோக்கி பயணிக்க வேண்டும் என்று தலைமை நிருபர் சிற்றுரையாற்றினார்.

புதன், 12 மார்ச், 2014

நமதூரில் உள்ள தேமுதிக மற்றும் IJK கட்சியில் உள்ளவர்கள் சிந்திப்பார்களா ?

மதவாத மற்றும் சிறுபான்மையினர்க்கு எதிரான பிஜேபியுடன் தேமுதிக கட்சி கூட்டணி அமைத்ததால் வி.களத்தூர் தேமுதிக கிளையில் உள்ள அனைத்து இஸ்லாமிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அடிப்படை

நில நடுக்கத்தை குறிப்பாக உணர்த்த வானில் தோன்றும் வெளிச்சக் கீற்றுகள்!-விஞ்ஞானிகள் ஆய்வு!

நியூயார்க்: நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பு வானில் தோன்றும் வெளிச்ச கீற்றுகள், பூமியில் ஏற்படும் அசைவுகளால் இருக்கலாம் என அமெரிக்கவிஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சமீபத்தில் சீனா மற்றும் இத்தாலியில் ஏற்பட்ட மாபெரும் நிலநடுக்கங்களுக்கு முன்பு வானில் வெளிச்சம் ஏற்பட்டது. பூமியில் இருக்கும் மண் படிமங்கள் நகர்வதால் மாபெரும் மின்சார சக்தி உருவாகி அதனால் இந்த வெளிச்சப் பொறிகள் உருவாகலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

விளம்பரங்கள் ஆபாசங்களாக மாறும்போது....

ஒரு காலகட்டம் வரை விளம்பரங்கள் மூலம் மக்களிடையில் செய்தியை கொண்டு போய் சேர்ப்பதில் நல்ல கருத்துகளையே முன் வைத்தார்கள். அதன் மூலம் ஒரு நிறுவனம் தாங்கள் தயாரிக்கும் பொருட்களை பற்றிய விளம்பரத்தை தயார் செய்து வெளியிடுவார்கள். இந்த விளம்பரத்தில் பல்வேறு யுக்திகளை கையாண்டு மக்களை ஈர்ப்பார்கள். இதன் மூலம் அவர்களின் பெருட்களின் பயன்பாடும், அதன் சிறப்பும் மக்களிடம் சேரும்.

திங்கள், 10 மார்ச், 2014

நீங்க தண்ணீர் குடிக்கிறீங்களா ?


“ஒட்டகம் தண்ணீர் குடிப்பது போன்று, ஒரே மூச்சில் நீங்கள் நீர் அருந்தாதீர்கள் என்றாலும், இரண்டு மூன்று முறை மூச்சு விட்டு அல்லது எடுத்து எடுத்து தண்ணீர் அருந்துங்கள். மேலும், நீர் அருந்தும் போது

ஞாயிறு, 9 மார்ச், 2014

சமுதாய வேட்பாள்களை ஆதரிக்கட்டும் ! இல்லையேல் ததஜ தானே களமிரங்கட்டும்!

கடந்த முறை ஜூலை 4ல் காட்டிய கூட்டத்தால் 
பிரதமரே எங்களை அழைத்தார் என பில்டப் காட்டிய
 ததஜ வை இந்த முறை காங்கிரஸ் 
கண்டு கொள்ளாததன் காரணம் என்ன?

ததஜ வும் மாநில இட ஒதுக்கீடு கோரிக்கையை
 தரும் வாய்ப்புள்ள  அதிமுக வை அணுகியது போல் 

மத்தியில் இட ஒதுக்கீடு கோரிக்கையை 
தரும் வாய்ப்பு உள்ள காங்கிரஸை அணுகாதது ஏன்?

UAPA சட்டத்தால் பாதிக்கப்பட்ட இம்ரானின் அனுபவங்கள்.


UAPA சட்டத்தால் பாதிக்கப்பட்ட இம்ரானின் அனுபவங்கள். படிக்கத் தவராதீர்கள்.

இன்று முழுவதும் டெல்லியில் UAPA சட்டத்திற்கு எதிரான மாநாடு. மாலைக் கருத்தரங்கில் சுமார் 5000 பேர் கலந்துகொண்டனர். ஏகப்பட்ட தலைவர்கள் இந்தக் கொடூர சட்டத்திற்கு எதிராகக் கண்டன உரையாற்றினர். காலையில் இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒரு உரையாடல் நடைபெற்றது. நானும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த வழக்குரைஞர் ஷப்னாவும் ஒரு பேனலில் இருந்தோம். மூன்று மணி நேரத்தில் நால்வரின் சோக அனுபவங்களுக்குக் காது கொடுக்க முடிந்தது.

ஒவ்வொன்றும் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய நெஞ்சை உருக்கும் அனுபவங்கள்தான். நேரமில்லை. ஒன்றை மட்டும் இங்கே பதிகிறேன். சென்ற வாரம் ஹைதராபாத் சென்றபோது சந்தித்த அந்தப் பையனை, அல்லது அழகிய தோற்றத்துக்குரிய இளைஞனை மீண்டும் பார்த்தபோது ஒரு கணம் துணுக்குற்றேன், ஆவலுற்றேன். ஓடிச்சென்று அவன் கைகளைப் பற்றிக் கொண்டேன்.

சனி, 8 மார்ச், 2014

இன்று உலக மகளிர் தினம் இஸ்லாம் பெண்களை அடிமை படுத்தவில்லை தினமலர் செய்தி


இன்று உலக மகளிர் தினம் இஸ்லாம் பெண்களை அடிமை படுத்தவில்லை தினமலர் செய்தி

பெண்கள் நாட்டின் கண்கள்!

சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டில் பெண்களின் உரிமைகளையும், அவர்களுக்கான சுதந்திரத்தையும் பேசி வரும் இத்தருணத்தில் பெண்களின் நிலையைப் பற்றி ஆராய வேண்டும்.
கடந்த காலங்களில் பெண்களுக்கு எதிராக நடந்த அநியாயங்களையும், அக்கிரமங்களையும் சற்று சிந்தித்துப் பார்த்தால், பெண்களின் நிலை எவ்வளவு மோசமாக இருக்கின்றது என்பதை நம்மால் அறிய முடியும். அதில், குறிப்பாக டெல்லியில் மருத்துவ மாணவியில் இருந்து, சமீபத்தில் நடந்த அனைத்து பாலியல் கொடூரங்களையும் பார்த்தால் நாம் பெண் சமூகத்தின் தற்கால நிலையைப் பற்றி அறிய முடியும்.

சீனா புறப்பட்ட மலேசிய விமானம் கடலில் விழுந்தது?

சீனா புறப்பட்ட மலேசிய விமானம் கடலில் விழுந்தது?

இறைவா எங்களையும், வெளி நாடுகளில் வாழும் எங்கள் சமுதாயத்தையும் பேர் ஆபத்திலிருந்து பாதுகாப்பாயாக!

வியாழன், 6 மார்ச், 2014

வாசகர்கள் கவணத்திற்கு.

வாசகர்கள் கவணத்திற்கு.

நாம் தூதராகிய அவருக்கு நீங்கள் உதவி செய்யாவிட்டால், அவருக்கு யாதொரு இழப்புமில்லை. இறைமறுப்பாளர்கள் அவரை (ஊரை விட்டு) வெளியேற்றிய போது, திண்ணமாக அவருக்கு அல்லாஹ் உதவி செய்தே இருக்கின்றான். இருவரும் குகையில் இருந்த போது, இருவருள் ஒருவர் தம் தோழரிடம், “ கவலைப் படாதீர்! திண்ணமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான் ” என்று கூறிய நேரத்தில், அவர்மீது அல்லாஹ் தன்னிடமிருந்து அமைதியை இறக்கி அருளினான். மேலும் நீங்கள் பார்க்கமுடியாத படைகளைக் கொண்டு அவரை வலுப்படுத்தினான். இறைமறுப்பாளர்களின் வாக்கை கீழாக்கினான். எப்போதும் அல்லாஹ்வின் வாக்ககுதான் மேலோங்கும். அல்லாஹ் மிகைத்தவன் ஞானமுள்ளவன்.
- அல்குர்ஆன் 9:40

கடந்த பல காலங்களாக நமது தளத்திற்கு குற்றச்சாட்டுகளும் மிரட்டல்களும் வந்த வண்ணம் இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் நாம் நம் வழியில் பயணித்து வந்திருக்கிறோம். ஆனால்

தேரா துபையில் ஏற்பட்ட தீ விபத்து.

தேரா துபையில் ஏற்பட்ட தீ விபத்து.

அமீரகத்தில் இன்று 06.03.2014 மதியம் சுமார் 2.30 மணியலவில் ATM பணம் பரிமாற்றும் வாகனம் திடீர் என்று இயந்திர கோலாறு காரணத்தினால் தீ பிடித்து எரிந்தது.

நமதூர் மக்கள் அதிகமாக வசித்துவரும் தேரா துபையில் ஒன்றை ஏக்கர் மற்றும் பர்கத் இல்லம் எதிரே

புதன், 5 மார்ச், 2014

அபுபக்கர் (ரலி) தெருவில் இருந்து நாம்.....

பொதுவாக ஒரு சம்பவத்தையே அல்லது மக்களுக்கு ஏற்படும் ஓர் இடையுரையே நேரில் பார்த்த ஒருவர் நடந்த சம்பவங்களை அச்சத்துடனும் திகிலுடனும் நம்முடன் பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பங்களில் நாமும் அதே உணர்வுகளுடன் நடந்த சம்பத்தை கேட்பதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு நீதி நிறுத்தப்பட வேண்டும் என்று ஒரு கொதி நிலைக்கு தள்ளப்படுவோம். இது தான் சாதாரண மனிதனின் இயல்பு. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வை தான் நாம் கடந்த நாட்களில் நமதூர் பேரூராட்சியின் பணிகளின் மக்கள் கருத்து !? என்ற தலைப்பில் நமது தளத்தில் வெளியிட்டு அந்த பகுதி மக்கள் படும் துன்பத்தை சுட்டிகாட்டியிருந்தோம்.

ஏப்ரல் 7.ல் மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் ஏப்ரல் 24-ஆம் தேதி வாக்குப்பதிவு!

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 7-ஆம் தேதி தொடங்கி 9 கட்டங்களாக நடைபெறும் என டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் அறிவித்தார்.
தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

செவ்வாய், 4 மார்ச், 2014

ஒரு முஸ்லிம் ஏமாற மாட்டான்...


கடந்த தேர்தலில் சொன்ன வாக்குறுதிகள்,


கட்டாய திருமண் சட்டத்தில் திருத்தம்,
வக்பு சொத்துக்களை மீட்ப்பொம்,
முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு அதிகரிப்பு

என சொன்ன எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல்,

இது பற்றி இயக்கங்கள் வைத்த கோரிக்கையை கண்டு கொள்ளாமல்,

சட்ட சபையில் உறுப்பினர்கள் பேசியதைக் கண்டு கொள்ளாமல்,

வி.களத்தூர் அருகே இந்து முன்னணி தீவிரவாதிகளின் வேலை பாரீர்!!


பெரம்பலூர் மாவட்டம்-வி.களத்தூர் அருகில் உள்ள  இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் வடகரை என்ற ஒரு சிறிய கிராமத்தில் நேற்று முன் தினம் இரவு(2-2-14) இந்து முன்னணி தீவிரவாதிகள் பாலன் மற்றும் அடையாளம் தெரியாத மற்றொரு தீவிரவாதி இருவரும் சேர்த்து கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை இஸ்லாமியர்கள் தான் வெடி வெடித்து கொண்டாடுகின்றனர் என்று மக்களை திசை திருப்புவதற்காக காட்டு பகுதிகளில் யாருக்கும் தெரியாமல் வான வேடிக்கைகளை நடத்தி உள்ளனர்.

திங்கள், 3 மார்ச், 2014

கல்வி தீபம் ஏற்றிய மௌலானா முஹம்மது பின் அலவி (ரஹ்)

கல்வி தீபம் ஏற்றிய மௌலானா முஹம்மது பின் அலவி (ரஹ்)

(பெரம்பலூர் மௌலான அவர்களை பற்றிய கட்டுரை)
பிறப்பு:

தோன்றின் புகழோடு தோன்றுக என்பர். நம் மௌலானா அவர்கள் அதற்கு இலக்கணமாகத் தோன்றினார்கள். இந்தியத் திருநாட்டின் தென்மேற்கு மாநிலமான கேரள மாநிலத்தில் மலப்புரம் மாவட்டம் மன்னார்காடு தாலுக்கா வெட்டத்தூர் என்ற அழகிய மலைகள் சூழ் கிராமத்தில் 1896-ஆம் ஆண்டு மிக ஏழ்மையான குடும்பத்தில் அலவி, பாத்திமா பீவி தம்பதியருக்கு மகனாக பிறந்தார். முஹம்மது குடும்பத்தின் முதல் குழந்தையான இவருக்கு ஜெய்னுலாப்தீன் என்ற தம்பியும் உம்மாத்தம்மாள் என்ற தங்கையும் உடன் பிறந்தவர்கள்  ஆவர். இவர்களின் குடும்பத்தை 'காராடன் குடும்பம்' என்று அப்பகுதி மக்கள் அழைத்து வந்தனர்.

ஞாயிறு, 2 மார்ச், 2014

நமதூர் பேரூராட்சின் பணிகளின் மக்கள் கருத்து..! ?


 ஊரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் மேற்கு ஜமாத் நிர்வாகிகள் பஞ்ஜாயத்து பேர்ட்டு தேர்தலில் முஹம்மது தஸ்லிம் ( பாருக் ) க்கு ஆதரவு கொடுத்து தலைவர் பதவியில் அமர்த்தி அழகு பார்த்து இருக்கிறது. ஆனால்,