Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 28 மார்ச், 2014

பேரூராட்சியின் அதிகாரம் யார்கையில் ?


 நாம் கடந்த காலங்களில் சுட்டி காட்டப்பட்ட சம்பவம். பல நாட்களாகவே கிடப்பில் கிடந்தன. இதனால் அப்பகுதி மக்கள் பட்ட துயரம் வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஏனெனில் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பார்கள்.


ஆனால் இன்று 27.03.2014 அன்று நமது நிருபர் மஃரிப் தொழுகை முடித்து விட்டு வந்த நேரம். ஒரு JCB வட்டி மேற்கு நடுத்தெருவில் நின்று கொண்டு இருந்தன. அதன் அருகில் பேரூராட்சி து.தலைவரும் இருந்தார். ஆம் இவை அனைத்தும் பல நாடகளாகவே மூடாமல் கிடப்பில் இருந்த அந்த சாக்கடை தான். இவர்கள் ஏன் திடீர் என்று இரவு நேரத்தில் அவசர கதியில் வேலை செய்கிறார்கள் என்பது அந்த பகுதி மக்களுக்கே ஆச்சர்யமாக உள்ளது.

அது மட்டும் இல்லாமல் கழிவு நீர் செல்ல சரியான வாட்டம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேரிக்கையாக உள்ளது. ஆனால் நமது நிருபர் விசாரித்த வகையில் ஏற்கனவே அங்கு கட்டப்பட்டுள்ள சிறிய தொட்டியை இடித்து விட்டு அவசர கதியில் வேலை நடைபெறுவதால் கழிவு நீர் செல்வதற்கு போதுமான வாட்டம் அங்கு இல்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

தேவையில்லாமல் நமது மக்களின் வரி பணம் எப்படி எல்லாம் வீண்விரயம் ஆகுது என்பதை நாம் எப்போது விழங்க போகின்றோம்.

குறிப்பு நேற்று ஒரு சில சமுக ஆர்வலர்கள் பேரூராட்சிக்கு சென்று செயல் அலுவர்களை சந்தித்து இதை பற்றி புகார் அளித்ததன் பெயரில் இன்று அவசர கதியாக வேலை நடைபெறுவதாக அதிகார பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

நமது நிருபர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக