Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 27 மார்ச், 2014

வகுப்புவாத சக்திகளை தோற்கடிக்கவும் மாற்று அரசியலுக்கு வாக்களிக்கவும் மக்களுக்கு கோரிக்கை - பாப்புலர் ஃப்ரண்ட்

வருகின்ற பாராளுமன்ற தேர்தல் மக்களின் தீர்ப்பினை மீண்டும் எதிர்பார்த்து இருக்கிறது. இரண்டு முறை ஆட்சியில் தொடர்ச்சியாக அமர்ந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதிலிருந்து தோல்வி அடைந்துள்ளது. இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்த போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து மீள முடியாமல் முடங்கியது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தோல்வியானது தேசிய அளவில் மக்களிடையே ஒரு வித எதிர் அலையை ஏற்படுத்தியுள்ளது. துரதிருஷ்டவசமாக மக்களிடையே ஏற்பட்ட இந்த எதிர் அலையின் மூலம் அரசியல் இலாபம் அடைய முயற்சிப்பவர்கள் நமது நாட்டின் அடிப்படை அரசியல் கோட்பாடுகளுக்கே பெரும் அச்சுறுத்தலாக விளங்குபவர்கள் ஆவார்கள்.


ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் முழு ஆதரவுடன் செயல்படும் மதவாத பாசிச சக்திகள் நமது நாட்டின் அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் மீட்பவராக நரேந்திர மோடியை முன்னிருத்துகிறார்கள். பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை ஆட்சியில் அமர்த்த சங்கபரிவாரங்கள் தங்களது முழு பலத்துடன் களம் இறங்கியுள்ளனர். நமது நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கியும் அழிவை நோக்கியுமே நரேந்திர மோடியால் கொண்டு செல்ல முடியும். நாட்டின் வளர்ச்சி என்று ஊடகங்களால் பூதாகாரமாக்கப்படும் மாயை அனைவரது கண்களையும் குருடாக்கி விடாது. பொருளாதார கொள்கையை பொறுத்தவரையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பொருளாதார கொள்கைக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொருளாதார கொள்கைக்கும் பெரிய வேறுபாடு இல்லை. எனவே இந்த இரு கூட்டணியில் எந்த கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும் நலிவடைந்த பிரிவினரின் அவலங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். பா.ஜ.க.வின் கொள்கைகள் முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரானவை அல்ல. மாறாக அவர்களுடைய சித்தாதந்தம் மற்றும் செயல்பாடுகளை உற்று நோக்கினால் அவர்கள் நமது நாட்டின் ஜனநாயக அமைப்பிற்கே பெரும் அச்சுறுத்தல் ஆவார்கள் என்பதை விளங்க முடியும். இத்தருணத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மக்களிடம் தங்களது ஜனநாயக உரிமையை அறிவுப்பூர்வமாக செயல்படுத்தவும் பா.ஜ.க. போன்ற கட்சிகளின் சதி திட்டங்களை வீழ்த்தவும் கோரிக்கை வைக்கிறது.

ஒரு நேர்மையான மற்றும் நம்பகத்தனமாக மூன்றாம் கூட்டணியும் நமது நாட்டில் அமையாதது துரதிஷ்டவசமானது. இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் இரண்டு கட்சிகளுக்கு இடையில் மட்டுமே அதிகார போராட்டம் நடப்பது நல்ல அறிகுறியல்ல. பிராந்திய கட்சிகள் பெரும்பாலும் உறுதியான எந்த கொள்கையும் இல்லாமலும் குறிப்பாக அவர்களது மதச்சார்பின்மை கொள்கை சந்தேகத்திற்கு உரியதாகவும் இருக்கிறது. பிராந்திய கட்சிகளை நம்ப முடியாது என்பதை கடந்த கால தேர்தல்கள் நமக்கு உணர்த்துகிறது.

தங்களை தாங்களே மாற்று அரசியலாக காண்பித்து கொண்டிருப்பவர்களும் நமது நாட்டில் தற்போது தலையெடுத்து வருகிறார்கள். ஊழல் எதிர்ப்பினை மட்டுமே கொள்கையாக வகுத்து செயல்படும் இத்தகைய அரசியல் கட்சிகள் நமது நாடு எதிர்நோக்கும் பல்வேறு சவால்களை சமாளிக்க இயலுமா என்ற சந்தேகம் எழுகிறது. மாற்று அரசியலை முன்வைக்கும் அரசியல் கட்சிகள், நமது நாட்டு எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் சவால்கள்களை பற்றிய தெளிவான நிலைப்பாடு இருக்க வேண்டும்.

இங்கு தான் ஷோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) பிற கட்சிகளில் இருந்து வேறுபடுகிறது. எந்த கட்சியும் நலிவடைந்த மக்களின் முக்கிய பிரச்சினைகளை பற்றி சிந்திக்காத நிலையில் தான் SDPI இத்தகைய மக்களுக்காக குரல் கொடுத்தது. சமூகத்தில் பெரும்பான்மையான மக்கள் நலிவடைந்தவர்களாக உள்ள நிலையிலும், கடந்த 6 சகாப்தங்களாக கட்சி வேறுபாடின்றி இத்தகைய மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் SDPI கட்சியால் முன்னிருத்தப்படும் முன்னேற்றத்திற்கான மாற்று கொள்கையை பாப்புலர் ஃப்ரண்ட் முழுமையாக அங்கிகரிக்கிறது. வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் இந்த மாற்று அரசியல் கொள்கையுடைய எஸ்டிபிஐ கட்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆதரவு அளிப்பதோடு தனது உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரயும் எஸ்டிபிஐ கட்சிக்கு ஆதரவு வழங்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறது. நமது நாட்டின் அனைத்து குடிமக்களும் தங்களது மேலான வாக்குரிமையை பயன்படுத்தி மதவாத கட்சிகளை தோற்கடித்து மதசார்பின்மை மற்றும் நாட்டின் பன்முகத்தன்மையை பாதுகாக்க உறுதி கொண்ட கட்சியினை ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும் என்று இத்தருணத்தில் கேட்டுகொள்கிறோம். இந்த தேசிய செயற்குழு கூட்டம் கோழிக்கோட்டில் தேசிய தலைவர் KM ஷரீப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. OMA சலாம், பேராசிரியர் பி கோயா, முஹம்மது அலி ஜின்னா, இலியாஸ் முகமது, அஷ்ரப் மெளலவி கரமனா, ஏ.எஸ். இஸ்மாயில், மற்றும் வாஹித் சேட் ஆகியோர் கூட்டத்தில் உரையாற்றினார்கள்.
 
 Popular Front LBK

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக