Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 4 மார்ச், 2014

ஒரு முஸ்லிம் ஏமாற மாட்டான்...


கடந்த தேர்தலில் சொன்ன வாக்குறுதிகள்,


கட்டாய திருமண் சட்டத்தில் திருத்தம்,
வக்பு சொத்துக்களை மீட்ப்பொம்,
முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு அதிகரிப்பு

என சொன்ன எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல்,

இது பற்றி இயக்கங்கள் வைத்த கோரிக்கையை கண்டு கொள்ளாமல்,

சட்ட சபையில் உறுப்பினர்கள் பேசியதைக் கண்டு கொள்ளாமல்,

இதற்காக இயக்கங்கள் நடத்திய போராட்டங்களை புறந்தள்ளிவிட்டு,

சட்டசபை நிதி நிலை அறிக்கையில் இதுபற்றி எதுவும் சொல்லாமல்,

தன்னுடைய கட்சி தேர்தல் அறிக்கையில் கூட எதுவும் சொல்லாமல்,

பன்னீர் செல்வம் தலைமையிலான அமைச்சர் குழுவிடம்
பல இஸ்லாமிய குழுக்க்களும் இறுதியாக வைத்த எச்சரிக்கையையும் ஏற்காமல்,

போகிற போக்கில் பொதுக்கூட்டத்தில் இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க ஆணையத்திடம் கருத்துக் கேட்டுள்ளோம்!
ஆகையால் முஸ்லிம்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும்!

என சொல்வதென்றால் என்ன நெஞ்சழுத்தம் இருக்க வேண்டும்!
இந்த சமுதாயத்தைப் பற்றி எவ்வளவு இழிவான எண்ணம் இருக்கவேண்டும்?

இதற்குப் பிறகும் இவரை ஆதரிக்க சில இயக்கங்கள் இருக்கும் வரைக்கும் இந்த சமுதாயத்தை எவனும் மதிக்க மாட்டான்!

முகநூலிலிருந்து

5 கருத்துகள்:

  1. 40kku 40 thohuthiyilum ADMK deposit ilakka muslim katchigal anaithum otrumaiyaga seyalpada vendum appoluthu thaan PURATCHI THALAIVI JAYALALITHAvirku muslimgal balam puriyum.

    பதிலளிநீக்கு
  2. அஸ்ஸலாமு அலைக்கும், உங்கள் செய்திகளில் நிறைய தமிழ் பிழைகள் இடம் பெறுகிறது.(உதாரணம்: ஏமார அல்ல ஏமாற) தலைப்பிலேயே தவறா? கவனம் தேவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுத்து பிழை சுட்டி காட்டியமைக்கு நன்றி.
      தலைப்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது

      நீக்கு
  3. இவ்வளவு நடந்தும் tntj ஆதிமுக விற்க்கு தனது அதரவினை தெரிவித்தது உள்ளதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொடுக்க வேண்டியதை கொடுத்தால் எல்லாம் நடக்கும் இன்னும் கொஞ்சம் கூடுதலாக கொடுத்தால் வீதியில் இறங்கி வீடு வீடாக சென்று இவர்களுக்காக கூடுதல் பிச்சைகேட்கவும் தயங்கமாட்டார்கள்.

      நீக்கு