Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 26 மார்ச், 2014

லப்பைகுடிக்காடு பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்த 2 பேர் கைது!

லப்பைகுடிக்காடு பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்த 2 பேர் கைது!

பெரம்பலூர் அருகே பறக்கும் படை தாசில்தார் நடத்திய அதிரடி சோதனையில், கள்ளத்தனமாக சாலையோரம் மதுபானம் விற்ற 2 பேர் கையும், களவுமாகப் பிடிபட்டனர். இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 46 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட லெப்பைகுடிக்காடு பகுதியில் தாசில்தார் கஜேந்திரன் தலைமையில் பறக்கும் படையினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் உள்ள சாலையோரம் அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் (33), சுப்பிரமணியன் (35) ஆகியோர் கள்ளத்தனமாக மது பாட்டில்களை விற்பனை செய்தது தாசில்தார் நடத்திய அதிரடி சோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களை கையும், களவுமாகப் பிடித்த போலீசார், அவர்களிடம் இருந்த 3 பீர் பாட்டில்கள், 43 பிராந்தி பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து தேர்தல் ஆணைய உத்தரவின் பேரில் டாஸ்மாக் கிட்டங்கிக்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர்.

1 கருத்து:

  1. What is going on in our village ? what are they doing all party / Jamath ( East & West - Sunnath Jamath & TNTJ,etc) ? This is exposed in our LBK City is Going on " Terrible / Horrible " Situation ?


    அணியாம் பகிரங்கமாக நடப்பதை தட்டிக்கேட்க ஆட்கள் / ஆண்மகன் ஒருவரும் இல்லையா ?
    கண்ணுக்கு முன்பே நடக்கும் ஹராமை தடுப்பது ஒவ்வொரு முக்மீனின் கடமை என்பது விலங்கவில்லையா ?
    நம்முடைய ஊரின் முன்னேற்றம் தேவைதான் , ஆனால் அது ஹரம்மான விசயமான விசயத்தில் இல்லை !
    அல்லாஹ் நம் ஆனைவரையும் முக்மீனாக வாழ்ந்து , தலை சிறந்த முக்மீனாக அவனிடம் சென்றடைய கிருபை செய்வானாக !

    பதிலளிநீக்கு