Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 9 மார்ச், 2014

சமுதாய வேட்பாள்களை ஆதரிக்கட்டும் ! இல்லையேல் ததஜ தானே களமிரங்கட்டும்!

கடந்த முறை ஜூலை 4ல் காட்டிய கூட்டத்தால் 
பிரதமரே எங்களை அழைத்தார் என பில்டப் காட்டிய
 ததஜ வை இந்த முறை காங்கிரஸ் 
கண்டு கொள்ளாததன் காரணம் என்ன?

ததஜ வும் மாநில இட ஒதுக்கீடு கோரிக்கையை
 தரும் வாய்ப்புள்ள  அதிமுக வை அணுகியது போல் 

மத்தியில் இட ஒதுக்கீடு கோரிக்கையை 
தரும் வாய்ப்பு உள்ள காங்கிரஸை அணுகாதது ஏன்?

கோடிக்கணக்கில் கொட்டி நடத்திய சிறை செல்லும் போராட்டத்தாலும்,

ஜெயலலிதா வுக்கு ஒரு வாரம் கெடு வைத்து மிரட்டியும்,

பன்னீர்செல்வம் குழுவை நேரில் சந்தித்து கெஞ்சிக் கேட்டும்,

இல்லையெனில்  அவசர செயற் குழுவை கூட்டி 
அதிமுக வுக்கு எதிராக முடிவு எடுப்போம் என மிரட்டியும்,

ஏன் ஜெயலலிதா கண்டு கொள்ள வில்லை!

ஒருவேளை ஏழரை லட்சம் என எண்ணிக் கொண்டிருந்த ஜெயலலிதா வுக்கு 
ஜனவரி 28 மூலம் வெறும் கையை விரித்து காட்டியதன் விளைவா?

அல்லது அரசியலில் அண்ணனுக்கு சிவாஜி ராசி!  
அவர் ஆதரிக்கும் அணி பெரும்பாலும் தோற்று விடும் 
என யாரும் சொல்லி இருப்பார்களோ என்னவோ?

ஆட்சியாளர்கள் அதிசயத்த பொதுக்குழு என பில்டப் காட்டிய 
பொதுக்குழுவில் எந்த முடிவும் எடுக்க முடியாமல்,

மறுபடியும் லட்சக்கணக்கில் செலவழித்து செயற்குழு நடத்தி 
அதிலும் முடிவெடுக்க முடியாமல், 

செயற்குழு வில் என்ன நடந்தது என்பதை இத்தனை நாளாக 
வெளியிட கூட முடியாத நிலையில் ததஜ தடுமாறிக் கொண்டிருகக்கும்
 நிலையைப் பார்த்தால் வருத்தமாக இருக்கிறது!

தயக்கத்தை தூக்கி எறிந்து விட்டு மோடிக்கு ஆதரவில்லை 
எனும் உறுதியைப் பெற்று, கட்சி வேறுபாடு இன்றி 
சமுதாய வேட்பாள்களை ஆதரிக்க வேண்டும்!

அவர்கள் பாராளுமன்றம் செல்வதால் சமுதாயத்துக்கு பலனில்லை
 எனும் பட்சத்தில் ததஜ தானே  களமிரங்க வேண்டும்! 

எவனையோ ஆதரிக்கும் அரசியல் கூடுமென்றால்,
நாம் நிற்பதும் கூடும்தானே.

எவனுக்கோ வாக்கு கேட்டு அவன் செய்யும் தீமைக்கு துணை போவதை 
விட தாங்கள் தேர்தலில் நிற்பது சிறந்ததாக இருக்கும்!

நன்றி ஆன்லைன்செங்கிஸ்கான்.காம்

25 கருத்துகள்:

  1. Sdpi. போட்டியிடும் தொகுதிகள் 3 ஆக
    அறிவிப்பு...
    நெல்லை, ராமநாதபுரம் ,வட
    சென்னை..
    வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டது.
    நெல்லை - நெல்லை முபாரக்
    வடசென்னை-நிஜாம் முஹைதீன்
    ராமநாதபுரம்- நூர் ஜியாவுதீன்
    வேலூர் தொகுதியில் முஸ்லிம் லீக்
    போட்டியிடுவதால்!
    சோசியல் டொமக்ரடிக்
    பார்ட்டி ஆஃப் இந்தியா போட்டியில்
    இருந்து விலகிக் கொண்டது!
    இராமநாதபுரம் தொகுதியில்
    சோசியல் டொமக்ரடிக்
    பார்ட்டி ஆஃப் இந்தியா போட்டியிடுவதால்
    மனித நேய மக்கள் கட்சி விட்டுக்
    கொடுத்தது குறிப்பிடதக்கது!
    இப்படி விட்டுக் கொடுக்கும்
    மனப்பான்மை உள்ள சமுதாய சகோதரர்கள்
    ஒன்றினைந்து இத்தேர்தலை சந்தித்து இருக்க
    வேண்டும்!
    சமுதாய நலன் கருதி விட்டுக்
    கொடுத்த அனைவருக்கும் ராயல்
    சல்யூட்!!
    முஸ்லிம்களுக்கு ஒதுக்கப் பட்ட
    தொகுதியில் நம் சமுதாய
    வேட்பாளர்களை நிறுத்தி ஓட்டுகளை பிரித்து விடக்
    கூடாது! அவர்களின் வெற்றிக்கு நாம்
    எந்த வகையிலும் முட்டுக்கட்டைகளாக
    இருந்து விடக் கூடாது என்பதில் மிகக்
    கவனமாக இருந்த
    சோசியல் டொமக்ரடிக்
    பார்ட்டி ஆஃப் இந்தியா எங்கே?
    அமைப்புகள் வேறாக இருந்தாலும்
    தமிழ்நாட்டில் இருந்து முஸ்லிம்
    சமுதாயத்தில் சார்பாக ஓர் குரல்
    இந்திய பாராளுமன்றத்தில் ஒலிக்க
    வேண்டும் என்று தாம் போட்டியிட இருந்த
    தொகுதியை விட்டுக்
    கொடுத்த
    மனிதநேய மக்கள் கட்சி எங்கே?
    இட ஒதுக்கீடு கொடுத்தால்
    மட்டுமே அ.தி.மு.க -
    விற்க்கு ஓட்டு இல்லையே அ.தி.மு.க-
    விற்க்கு வேட்டு வைப்போம் என்று பகீரங்க அறைக்
    கூவல் விடுத்த
    (இடஒதுக்கீடு கொடுக்காத
    நிலையில் அ.தி.மு.க-விற்க்கு தவ்ஹீத்
    ஜமாத் ஆதரவு கொடுத்துள்ளது)
    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எங்கே??
    சமுதாய மக்களே உங்கள்
    கற்ப்பனைக்கே விட்டு விடுகிறேன்!
    சிந்தியுங்கள் யார் சமுதாய அக்கரைக்
    கொண்டவர்கள் என்று!!!
    பதிவின் மையக் கருத்து இந்த
    நாடாளு மன்றத்தேர்தலில் நம் சமுதாய
    சொந்தங்களின் குரல்
    பாராளு மன்றத்தில் உரக்க உரைக்க
    வேண்டும்!
    சிந்தித்து முடிவு எடுங்கள்!!!
    இன்ஷா அல்லாஹ்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. sdpi நாங்கள் இஸ்லாமிய கட்சி அல்ல என்று தெளிவாக சொன்ன பின்பு sdpi இஸ்லாமிய கட்சிக்கு ஆதரவு தாருங்கள் என்று நடுநிலை நாக்குப் பூச்சிகளும் , சட்டிபியும் முஸ்லிம்களை ஏன் ஏமாற்ற முயற்சிக்கிறார்கள்.?sdpi நாங்கள் இஸ்லாமிய கட்சி அல்ல என்று தெளிவாக சொன்ன பின்பு sdpi இஸ்லாமிய கட்சிக்கு ஆதரவு தாருங்கள் என்று நடுநிலை நாக்குப் பூச்சிகளும் , சட்டிபியும் முஸ்லிம்களை ஏன் ஏமாற்ற முயற்சிக்கிறார்கள்.?

      நீக்கு
  2. அஸ்ஸலாமு அலைக்கும்....
    நமதூர் செய்தி வலையதல தலமை நிருபர் அவர்களே!

    ததஜா மேல் உங்களுக்கு ஏன்? இவ்ளோ குரொத,விரொதங்கள்.
    வேறு வலையதலதில் உள்ளதை copy செய்து அப்படியே வாந்தி எடுத்து உள்ளீர்கள். இதன் முலம் நம் (நமதூர் செய்தி வலையதலம்) நாற்றம் எடுக்க துவங்கிள்ளது.


    வாந்தி எடுத்த நிருபர் அவர்களே!
    அதேபோல் தமுமுக முன்பு ADMK லிருந்து DMKக்கு மாறிவுள்ளதே? அது ஏன்?
    உங்கள் கண்ணுக்கு தெறியவிள்ளையா.?
    6சிட் வேண்டும் என்று சொன்ன தமுமுக தற்பொது 1 சிட் வாங்கிகொண்டு வாய்திரக்காமல் இருக்கிரார்களே அது ஏன்?உங்கள் கண்ணுக்கு தெறியவிள்ளையா.?
    திருச்சியில் நடந்த DMK மாநாட்டில் தமுமுக தலைவர் இட ஒதிக்கிடு பற்றி முன்வைக்கவிள்ளயே? அது ஏன்?உங்கள் கண்ணுக்கு தெறியவிள்ளையா.?
    இது போன்ற ஏறாளமான வினாக்களுக்கள் உண்டு இதை எல்லாம் நீங்கள் வெளியிடமாட்டீகள் ஏன்?

    அதே போல் முஸ்லிம் லிக், SDPI, அதிகமாக கூறளாம். இவர்களை பல இனையத்தலதில் வெலிவந்தவன்னம் உள்ளது அது ஏன்?உங்கள் கண்ணுக்கு தெறியவிள்ளையா.?

    ததஜா மேல் உங்களுக்கு ஏன்? இவ்ளோ குரொத,விரொதங்கள்.என்று தெறியப்படுத்வும். அதுவும் ஓட் எடுப்பையும் இனைத்து உள்ளிர்கள்.

    குறிப்பு:

    அல்லாஹ்க்கு பயந்து நடுநிலை உடன் செயல் படுங்கள்

    அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் செய்வானாக

    இவண்
    இஸ்லாமிய செயல்வீரன்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த செய்தி இஸ்லாமிய செயல்வீரன் அவர்களுக்கு9 மார்ச், 2014 அன்று 6:49 PM

      இந்த செய்தி இஸ்லாமிய செயல்வீரன் அவர்களுக்கு

      ஏன் ஜெயா கம்யூனிஸ்டுகளை விரட்டினார்?
      **************************************
      ஏன் மோடியை கார்பொரேட்கள் முன்நிறுத்துகின்றன?
      **********************************************
      சற்று முன் கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். ஜெயலலிதா தங்களை ஊதித் தள்ளியதற்கு, ஏதோ அவரிடம் வழக்கமாக உள்ள அகந்தை அல்லது மனமாற்றம் காரணமில்லை என்றார் அவர். கார்பொரேட்கள் இந்த முடிவின் பின்னணியில் உள்ளன எனவும் அவர் அழுத்தமாகக் கூறினார்.

      எப்படி என்று கேட்டேன்.

      கார்பொரேட்களுக்கு எப்படியாவது பா.ஜ.கவையும் மோடியையும் பதவியில் ஏற்றி அமர்த்திவிட வேண்டுமென வெறி ஏற்பட்டுள்ளது. கோடி கோடியாய்ச் செலவழித்து கட்சிகளை விலைக்கு வாங்கி பா.ஜ.கவிற்குக் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.

      ஒருவேளை மோடியும் பா.ஜ.கவும் ஆட்சிக்கு வர இயலாத சூழல் ஏற்பட்டால் என்ன செய்வது?

      நிச்சயம் காங்கிரஸ் வரக்கூடாது. மூன்றாவது அணி என்கிற பெயரில் கம்யூனிஸ்டுகள் பங்கேற்கும் அணி எதுவும் வந்து விடவேஏஏ கூடாது. இதன் விளைவுதான் எல்லா மாநிலங்களிலும் இடதுசாரிகளின் கூட்டணியை அவை பலவீனப்படுத்துகின்றன என்றார். ஜெயா கம்யூனிஸ்டுகளை உதறித் தள்ளியதன் பின்னணியும் இதுவே என்றார்.

      அவர் சொன்னது சரியாகவே எனக்கும் பட்டது.

      அது சரி தனது ஊழல்களுக்கு ஒத்துழைத்த காங்கிரசைப் பதவியிலிருந்து இறக்கி, பா.ஜகவையும் மோடியையும் பதவியிலமர்த்துவதில் கார்பொரேட்களுக்கு அத்தனை ஆர்வம் ஏன்?

      இது குறித்து நண்பர் சங்கர நாராயணன் Hindustan Times நாளிதழில் எழுதியுள்ள கட்டுரை ஒன்று இதோ. இவர் இதே தலைப்பில் எழுதிய வேறொரு கட்டுரையை இரண்டு மாதங்களுக்கு முன் நான் இங்கே பதிவிட்டிருந்தது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்.

      http://www.hindustantimes.com/comment/sanjoynarayan/why-big-business-likes-narendra-modi/article1-1189494.aspx#sthash.AauWq7CY.dpuf

      நன்றி மார்க்ஸ் முகநூலில் இருந்து

      நீக்கு

    2. நான் பதித்த பதிவிற்க்கும்
      நீங்கள் பதித்த பதிவிற்கும் சம்மதம் இல்லை

      நான் பதித்த பதிவிற்க்கு சரியான பதில் கொடுக்கவொம்.

      இவண்
      இஸ்லாமிய செயல்வீரன்.

      நீக்கு
    3. நாங்கள் நடுநிலையாக பிரசுகம் செய்தது உங்கள் பார்வைக்கு,
      இது போல் பல வெளியிட்டிருக்கிறோம் என்பதை, அனைத்தும் அறிந்த அல்லாஹ் போதுமானவன்.

      http://labbaikudikadunews.blogspot.ae/2013/10/blog-post_23.html http://labbaikudikadunews.blogspot.ae/2013/06/blog-post_6155.html http://labbaikudikadunews.blogspot.ae/2013/09/blog-post_17.html

      மற்றவர்கள் தவறு செய்தால் தவறு என்று வெளியிடும் பட்சத்தில் (அதை ஏற்றுக்கொள்ளும் ததஜ) தாங்கள் செய்யும் தவறை பிரசுகம் படுத்துவது தவறு என்ற உங்கள் வட்டத்திற்கு எங்களை தள்ளாதீர்கள். முடிவில் அது உங்களுக்கு தோல்வியைதான் தரும்.

      மற்றவர்கள் செய்யும் தவறை மட்டும் ஆராயாமல் தாம் செய்யும் தவறையும் உணர்ந்து திருத்திக்கொள்வதுதான் நடுநிலையான இயக்கவாதிகளின் இயல்பு. இது ததஜ விற்கு மட்டும் ஆல்ல அனைத்து இயக்கவாதிகளுக்கும் இது பொருந்தும்.

      நீக்கு
    4. இஸ்லாமிய செயல்வீரன் பதிலளி

      நீக்கு
    5. வாந்தி எடுத்த நிருபர் அவர்களே!

      மக்களுக்கு (வாசகர்களுக்கு) தெறியும்

      இது போல் நீங்கள் ஒரு இரு பிரசுகம் தான் வெளியிட்டிடுள்ளிர்கள்
      ஆனால் அதிகமாக பிரசுகம் ததஜ எதிராகவேதான் உள்ளது.மறுக்க முடியாத உண்மை

      ததஜ பிரசுகதை வெளியிடும் போது அதிக command கிடைக்கும் என்பதர்க்குத்தான் வெளியிடுகிறிர்கள். அப்படி command கிடைக்காவிட்டால் நீங்களே command போடவும் செய்கிறிர்கள்
      என்பது மறக்க முடியாத உண்மை (ஆனால் command கிடைக்காமல் அதிகமாக பூஸ்சூடு போச்சு) சில இது மட்டும்.

      இது மறுக்க முடியாத உண்மை

      ததஜ பிரசுகதை வெளியிட்டு அதர்க்கு எதிராக command யை நீங்கள் போடவில்லை என்று அல்லாஹ்க்கு அஞ்சி சொல்லுங்கள்

      அல்லாஹ்க்கு பயந்து நடுநிலை உடன் செயல் படுங்கள்

      அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் செய்வானாக


      நீக்கு
    6. Dear TTJ,
      I'm sorry to say...
      Pls. think and don't just blibdly support the idot P.J...
      You will not @ all think and you will listen whatever the Idot P.J. Says..
      You will have to answer to one person...
      Fear God... Fear GOD...

      நீக்கு
  3. மாமியார் உடைத்தால் மண்சட்டி மருமகள் உடைத்தால் பொன்ங்சட்டி (யார் மாமியார் யார் மாமனார் என்று நான் செல்ல தேவையில்லை)

    பதிலளிநீக்கு
  4. மமக மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு உடன்பாடு காணப்பட்டுள்ளது.

    இது குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை பரிமாறி கொள்வது மனித இயல்புதான்.

    7.5.கோடி தமிழக மக்கள்.
    39 நாடாளுமன்றத் தொகுதிகள்.
    234 சட்டமன்றத் தொகுதிகள்.

    தமிழகத்தில் முஸ்லிம் மக்கள் தொகை 6 சதவிகிதம்.
    ஏறக்குறைய 50 இலட்சம்.

    மொத்தமுள்ள 5.5 கோடி தமிழக வாக்காளர்களில்
    முஸ்லிம் வாக்காளர்கள் ஏறக்குறைய 35 இலட்சம்.

    எந்த தொகுதியிலும் முஸ்லிம்கள் 40 சதவிகித அளவிற்கு கூட இல்லை.சிதறி வாழ்கின்றோம்.

    இப்போதைக்கு ஒரு தொகுதி அல்லது இரண்டு தொகுதிகள் மட்டுமே சாத்தியம். அது தான் எதார்த்தம்.

    மாற்றத்திற்கான வழி : 1

    முஸ்லிம்களுக்கு அதிக தொகுதிகள் வழங்கப்பட வேண்டும் என்றால் முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.அதற்கு கிராமம் கிராமமாக அழைப்புப் பணி அதிகம் நடைபெற வேண்டும்.

    மாற்றத்திற்கான வழி : 2

    முஸ்லிம்களைப் போல எண்ணிக்கையில் சிறுபாண்மையாக வாழும் சமூகங்களையும் இணைத்துக்கொண்டு
    விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை போராடி பெறுவது.

    ...................மாற்றுத் தீர்வு எதையும் முன்வைக்காமல் வெறும் குறை மட்டும் கூறுவது அறிவுள்ள சமூகத்திற்கான அடையாளம் அல்ல.

    போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களை எந்த இயக்கம் என்று பாராமல் வெற்றி பெறச்செய்வது ஒன்றே குறிகோளாக இருக்க வேண்டும்.

    - Facebook (CMN Saleem)

    பதிலளிநீக்கு
  5. டிஎன்டிஜேவின் நிலைப்பாடு சரிதான்
    ஆணையத்தை அமைத்துத்தான் இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தித்தர முடியும் : டிஎன்டிஜேவின் நிலைப்பாடுதான் சரி என நிரூபித்த தமிழக முதல்வர்!
    இடஒதுக்கீட்டை அதிகரித்துத்தர வேண்டுமென்றால் பிற்பட்டோர் நல ஆணையத்தின் பரிந்துரையை பெற்ற பிறகுதான் உயர்த்தித்தர முடியும். இதுதான் சட்டப்படி சரியான நிலைபாடாகும்.
    மண்டல் கமிஷன் வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஆணையத்தின் பரிந்துரை இல்லாமல் இடஒதுக்கீட்டை தன்னிச்சையாக மாநில ‪#‎அரசு‬ உயர்த்தித்தரக்கூடாது என்பது.
    இதன் காரணமாகவே ‪#‎தவ்ஹீத்‬ ஜமாஅத் ஆணைய உத்தரவின் மூலம் இடஒதுக்கீட்டை அதிகரித்துத்தர தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்தது.
    நமது நிலைப்பாட்டை உண்மைப்படுத்தும் வகையில் முதல்வர் ‪#‎ஜெயலலிதா‬ அவர்கள் 09.03.14 அன்று நாகர் கோவிலில் பேசியுள்ளார். (வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)
    முஸ்லிம்களின் ‪#‎இடஒதுக்கீடு‬ சம்பந்தமாக ‪#‎கருணாநிதி‬ ஜெ.வை கண்டித்து வெளியிட்ட அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும் இந்த பேச்சு அமைந்துள்ளது.
    ‪#‎திமுக‬, ‪#‎அதிமுக‬ என இரண்டு பெரிய கட்சிகளும் முஸ்லிம்களின் இடஒதுக்கீடு தொடர்பாக பேசக்கூடிய அளவிற்கும், முஸ்லிம்களின் வாக்குகளை குறிவைத்து விவாதம் நடத்தும் அளவிற்கும் இந்த தேர்தலில் பிரச்சாரம் நடைபெறுவதற்கு லட்சக்கணக்கான ‪#‎முஸ்லிம்கள்‬ கலந்து கொண்ட ‪#‎சிறைநிரப்பும்‬ ‪#‎போராட்டம்‬ தான் காரணம் என்றால் அது மிகையல்ல.
    முஸ்லிம்கள் நடத்திய சிறைநிரப்பும் போராட்டம் அனைத்து கட்சிகளையும் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டு கோரிக்கை குறித்து திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.
    ‪#‎அல்ஹம்துலில்லாஹ்‬...
    இது குறித்து அலசுகின்றது இன்றைய தினம் ஒரு தகவல்....
    Video:http://thowheedvideo.com/dinam_oru_thagaval_bayan/10-03-2014-tntj-vin-nilaipadu-sarithan/

    பதிலளிநீக்கு
  6. அண்ணன் கட்சி காரர்கலே நீங்கள் பாடுபடபொவது அம்மா!கட்சிக்கு தேர்தல் முடிந்தவுடன் தனது ஆதரவு மோடிக்கு தேவை எனில் வழங்க தயங்காதவர் அப்படிபட்ட சூழ்நிலயில் மக்களுக்கு என்னபதில் கூரஇருக்கிரீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரலாறு முக்கியம்11 மார்ச், 2014 அன்று 6:33 PM

      10 சதவிகித இட ஒதிக்கீடு தந்தாள் நாங்கள் பி ஜே பி (ஆர் எஸ் எஸ் ) க்கு வாக்களிக்கவும் தயார்.
      இப்படிக்கு
      முன்னாள் மாநில தலைவர் பக்கீர் முஹம்மது.

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
  7. எங்கேயோ கேட்ட ஞாபகம் !

    தேர்தல் விதிமுறை நடைமுறைக்கு வருவதற்கு
    முன் இட ஒதுக்கீட்டை அறிவிக்க வேண்டும்!

    கொடுக்கும் இடத்தில் இருந்து ஆணையம்
    அமைப்போம் என்றால் ஏற்றுக் கொள்ள மாட்டோம்!

    கையில காசு ! வாயில தோசை!
    வாக்குறுதி எல்லாம் நம்ப மாட்டோம்!

    இட ஒதுக்கீட்டுக்காக சிரமங்களைத் தாங்கி வந்த
    உங்களை காட்டி விலை பேச மாட்டோம்!

    இது ஒரு ததஜ ஆதரவாளரின் குமுறல்

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    என்னை பொறுத்த மட்டில் நம்பிக்கை மோசடிதான் மிகப்பெரிய ஊழல்..! நான் வேறு எந்த இஸ்லாமிய இயக்கத்தையும் நேர்மையாகவும் அறிவோடும் நடக்கும் என்று இந்த அளவுக்கு நம்பியவன் அல்லன்..!

    அரசியலில் தான் எவ்வளவு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய ஊழல் கட்சி என்று#ததஜ இன்றைக்குத்தான் அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டி விட்டது..!

    ரொம்ப பெரிய மதிப்பும் மரியாதையும் வச்சிருந்தேன் ததஜ மீது..! ப்ச்... அத்தனையும் அடியோடு தகர்ந்து விட்டது..!

    2004 இல் தமுமுக மீது ஏற்பட்ட வெறுப்பை விட இன்று ததஜ மீது அதிகமாக ஏற்பட்டுவிட்டது..!

    http://www.youtube.com/watch?v=u8hGTu72wTM

    இந்த 2009 வீடியோ ததஜ சகோஸ்க்கு சமர்ப்பணம்..!
    இதில் அஞ்சு வருஷத்துக்கு முன்னர் மிகத்துல்லியமாக சொல்லப்பட்டவை அப்படியே 100% இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கும் பொருந்தும்..!

    பதிலளிநீக்கு
  8. Syed Musthafa12 மார்ச், 2014 7:13 பிற்பகல்

    Syed Musthafa 12 மார்ச், 2014 7:03 பிற்பகல்
    2.
    Syed Musthafa12 மார்ச், 2014 6:21 பிற்பகல்

    2006 சட்டமன்ற தேர்தலில் முஸ்லீம்களின் இட ஒதிக்கீடு செய்ய ஆணையம் அமைத்ததற்காக AIDMK வுக்கு TNTJ ஆதரவு அளித்தது.

    2009 பாராளமன்ற தேர்தலில் தமிழகத்தில் முஸ்லீகளுக்கு 3.5 சதவீத இட ஒதிக்கீடு செய்ததால் DMK விற்கு TNTJ ஆதரவு அளித்தது.

    2011 சட்டமன்ற தேர்தலில் முஸ்லீம்களுக்கு 3.5 சதவீத இடஒதிகீட்டை அதிகப்படுத்தி தருவதாக DMK தனது தேர்தல் அறிக்கையில் சொன்னதற்காக அவர்களுக்கு ஆதரவு அளித்தோம்.

    வருகிற 2014 பாராளமன்ற தேர்தலில் AIDMK முஸ்லீம்களின் இடஒதிகீட்டை அதிகப் படுத்த பிற்படுதப்பட்டோர் கமிசனின் parinthurayai விரைவில் அனுப்ப ஆணையிட்டதற்காக AIDMK வுக்கு TNTJ ஆதரவு அளிக்க வுள்ளது. இதில் எந்த சுயநலமும் இல்லை சமுதாயத்தின் முனேற்ற திற்காக எடுக்கப்பட்ட ஒரு சிறந்த முடிவு

    1. வரவிருப்பது நாடாளுமன்ற தேர்தல். இதன் வெற்றி தோல்வி ஆளும் அரசின் மக்கள் செல்வாக்கை எடுத்து சொல்வதாக அமைந்தாலும் மாநில அரசுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. குறிப்பாக ஆளும் ஜெயலலிதா அரசின் ஆயுட்காலம் இன்னும் சில வருடங்கள் எஞ்சி உள்ளன. எனவே இந்த தேர்தலில் ஆளும் கட்சிக்கு எதிரான முடிவு இட ஒதுக்கீடு கோரிக்கைக்கு மிகப்பெரும் பின்னடைவை தரும். எஞ்சிய சில வருடங்களும் அரசு இயந்திரம் அவர்களையும் முஸ்லிம் சமுதாயத்தையும் எதிரிகளாவே பார்க்கும்.

    2. தமிழ்நாட்டை பொறுத்தவரை இரண்டே அணிகள் தான். ஒன்று அதிமுக தலைமையில். இன்னொன்று திமுக தலைமையிலானது. அதிமுகவுக்கு எதிரான முடிவு என்பது திமுகவுக்கு ஆதரவு என்பது மட்டுமே. அந்த முடிவு இட ஒதுக்கீட்டு கோரிக்கைக்கு எந்த பலனும் உடனே தராது. குறிப்பாக 40 தொகுதிகளிலும் திமுக அணி வெற்றி பெற்றாலும் இது தான் நிலை. திமுக அணி நாடாளுமன்றத்தில் இட ஒதுக்கீட்டு கோரிக்கையை எதிரொலித்து மத்தியில் இட ஒதுக்கீடு பெற்று தரும் என்று யாராவது சொன்னால் சிரிக்க வேண்டுமானால் உதவுமே தவிர வேறு எதற்கும் உதவாது. சட்ட மன்ற தேர்தலுக்கு இன்னும் சில வருடங்கள் பாக்கி இருக்கும் நிலையில் அரசியல் காட்சிகள் இப்போது இருப்பது போல் சட்டமன்ற தேர்தல் சமயத்திலும் இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. எனவே திமுக ஆதரவு என்பது இப்போதைய சூழ்நிலையில் ஒரு பயனும் தராத முடிவாகவே இருக்கும்.
    நான் பதிவு செய்த கருத்தை எதற்கு நீக்குகிறீர்கள். நீங்கள் ஒரு பொய்யர் என்பது இதுவே ஒரு ஆதாரமாகும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் ஆதரவு கமிஷன் அமைத்ததர்காகவா அல்லது.........கமிஷன் கொடுத்ததர்க்காகவா?

      நீக்கு
    2. mustafa avarkale intha valaithalathil mattumthaan karuthukkal udanadiyaga velivarukirathu pira valaithalathil neriyalar paarvaikupirago velivarum etharkkum ungaludaya computer knowlegai valarthukkolungal.

      நீக்கு
    3. Mr.Syed Musthafa உங்களுடைய எழுத்துக்கு நீங்களே பொருப்பு.

      உங்களுடைய கருத்தையும், மற்ற தனிநபர் சமுதாய சிந்தனைக்கருத்தையும், நீக்க எங்களுக்கு உரிமையில்லை! என்று அல்லாஹ் மீது சத்தியம் செய்து கூறியபின்னறும் எங்களை நீர் பொய்யர் என்று இன்னும் ஒருமுறை கூறினால், நீங்கள் எங்களுடைய சகோதரன் என்று பாராமல் அல்லாஹ்விடம் நாங்கள் கையேந்த நேரிடும்.
      மறுமையில் இதைபற்றி இறைவன் வினவும் பொழுது நீங்கள் தலைக்குனிந்து நிற்கும் நிலையை எங்களை பார்க்க வைத்துவிடாதீர்கள்! என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

      முதலில் உங்கள் கருத்து வெளிட்டனவா என்பதை உங்கள் கனிப்பொறியில் சரிபார்த்துகொள்ளவும். தவறும் பட்சத்தில் நிர்வாகத்திற்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அது SPAM Message ஆக சென்று விடுகிறது.

      இப்படிக்கு தலைமை நிருபர்.

      நீக்கு
  9. கரசேவையை பகிரங்கமாக ஆதரித்தவர் ஜெ. என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். 'ராமருக்கு இந்தியாவில் கோவில் கட்டாமல் வேறு எங்கு கட்டுவது?, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தால், நாளை இதே கோரிக்கைகள் மற்றவர்களிடமிருந்தும் எழும், ஏற்கனவே முஸ்லிம்கள் செழிப்பாகவே உள்ளனர், என்றெல்லாம் பேசியவர்தான் ஜெ. சேதுக் கால்வாய், சங்கரராமன் கொலைவழக்கு, சிதம்பரம் தீட்சிதர்கள் வழக்கு, மதுரை ஆதீன விவகாரம், நித்தியானந்தா விவகாரம் மட்டுமில்லாமல் சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆசிரியர் தேர்வு ஆகியவற்றில் இட ஒதுக்கீட்டின் படி இல்லாமல் மேட்டுக்குடியினர் விரும்பும் வகையிலும், ஹிந்துத்வாக்களின் மனம் கோணாமலும் செயல் பட்டதும் அவருடைய சுயரூபத்தை வெளிக்காட்டின.மூன்றே மாதங்களில் சரிசெய்வேன் என்று சபதமிட்ட ஜெ.யால் மூன்று ஆண்டுகளாகியும் மின்தடைப் பிரச்சினையில் எந்தத் தீர்வும் காணமுடியவில்லை.ஒருவேளை ஏதாவது அதிசயம் நடந்து பிரதமராகி விட்டால், தமிழகத்தில் நடக்கும் அமைச்சரவைக் கேலிக்கூத்துக்கள் இந்திய அளவில் நடந்து, உலகின் நகைப்பிற்கு இந்தியா ஆளாகும் ததஜ சிந்திக்கவும்

    பதிலளிநீக்கு
  10. ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்....




    மண்டபம் நிரப்பும் போராட்டம் நடத்தியும் மத்திய காங்கிரசோ, மாநில அதிமுகவோ கண்டுகொள்ளாததால் இருதலை கொல்லி எறும்பாக தவித்த அண்ணன் ஜமாஅத்திற்கு அருமருந்தாக அமைந்தது அதிமுக அரசின் ஒரு கடிதம். பிற்படுத்தப்பட்டோர் நல வாரிய செயலாளருக்கு அரசு செயலாளர் எழுதிய ஒரு வேண்டுகோள் கடிதத்தையே, தனது அறியாமையினால் ஆணையமாக்கி அம்மாவுக்கு அதரவை அளித்துள்ளார் அண்ணன்.

    ஜெயலலிதாவை மேலாண்மை, கீழான்மை பிரதிநிதிகள் புடைசூழ சந்தித்த அண்ணன், வெளியே நிருபர்களிடம் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தருவதற்காக முதல்வர் ஆணையம் அமைத்துள்ளதாக ஒரு அசகாய பொய்யை அடித்து விட்டு, அதிமுகவை ஆதரிக்கிறோம் என்று சொல்லியுள்ளார். ஜெயலலிதா எப்போது ஆணையம் அமைத்தார்? அந்த அரசாணையை அண்ணன் காட்டுவாரா? ஜெயலலிதா அரசின் செயலாளர் பிற்படுத்தப்பட்டோர் நல வாரியத்துக்கு எழுதிய ஒரு சாதாரண கடிதத்தையே ஆணையம் என்று நம்பும் அளவுக்குத் தான் அண்ணனின் அரசியல் ஞானமா?

    ஜெயலலிதா அரசின் செயலாளர் எழுதிய இந்த பார்மாலிட்டி கடிதம், தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நெருக்கத்தில் எழுதப்பட்டிருப்பது ஜெயலலிதாவின் அரசியல் தந்திரம் என்று அழும் பிள்ளை கூட அறிந்த விஷயம் அண்ணன் அறியாதது ஆச்சர்யமே! தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னால் எதுவும் நடக்காது என்று தெரிந்தே இந்த கடிதம் எழுதப்பட்டுள்ள நிலையில், இந்த கடிதத்திகே பொட்டு வைத்து பூ வைத்து அழகுபடுத்தி ஆணையம் என மக்களை நம்பவைக்கும் ஆற்றல் அண்ணனை தவிர வேறு யாருக்கு வரும்?

    அது மட்டுமல்ல. முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தி தரக்கோரி பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கடந்த ஆண்டு எழுதிய கடிதத்தை ஏற்கனவே கடந்த ஆண்டே அரசு செயலாளர் பிறபடுத்தப்பட்டோர் நல வாரியத்திற்கு அனுப்பியுள்ளார். கடந்த ஆண்டு அனுப்பிய கடிதத்திற்கே உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத பிற்படுத்தப்பட்டோர் நல வாரியம், தேர்தல் நேரத்தில் எழுதப்பட்ட கடிதத்திற்கு உடனடியாக பரிகாரம் காணும் என்று நம்புவது அல்லது பிறரை நம்பவைப்பது அண்ணின் தனிவுடைமையான ஒன்று.

    கடிதம் விவகாரமெல்லாம் இருக்கட்டும். மண்டபம் நிரப்பும் போராட்டத்திற்கு முன்பு ஒரு வார இதழில் சொன்னது என்ன? வெற்று வாக்குறுதியை நம்பமாட்டோம். உயர்த்தி தந்தால் தான் அதரவு என்று அண்ணன் முழங்கியது என்னாச்சு? இந்த பார்மாலிட்டி கடிதமே உயர்த்தி தந்ததாக அர்த்தமா?

    இது ஒருபுறமிருக்க, மாநிலத்தில் அண்ணனின் ஆசைப்படி ஜெயலலிதா தேர்தலுக்கு பின்பு உயர்த்தி தருவதாகவே வைத்துக் கொள்வோம். நடப்பது சட்டமன்ற தேர்தல் அல்ல. பாராளுமன்றத் தேர்தல். மத்தியில் இட ஒதுக்கீடு என்ன ஆச்சு? நாங்கள் ஜெயித்தால் மத்தியில் இட துகீடு வழங்குவோம் என்று ஜெயலலிதா அண்ணனிடம் கை மேல் அடித்து சத்தியம் செய்துள்ளாரோ? ஏன் கேட்கிறோம் என்றால், அதிமுக தேர்தல் அறிக்கையில் முஸ்லிம் என்ற ஒரு வார்த்தை கூட இல்லை. அப்படியானால் அண்ணன் மத்தியில் இட ஒதுக்கீடு கேட்பதை விட்டுவிட்டாரா? இருக்கலாம். ஏனென்றால் ரிசர்வ் தொகுதி கோரிக்கையை கண்டுகொள்ளாமல் விட்டவர்தானே!

    அல்லது மாநில இட ஒதுக்கீட்டிற்காக அதிமுகவிற்கும் மத்திய இட ஒதுக்கீட்டிற்காக தம்பி அல்தாபியின் ஆசி பெற்ற பாஜகவுக்கும் ஆதரவளிக்கும் முடிவா? சொன்னாலும் சொல்லாவிட்டலும் அண்ணன் ஜமாஅத் இப்போது பாஜகவையே ஆதரிக்கிறது. தலையை சுற்றி மூக்கை தொடுவது போல், ஜெயலலிதாவை ஆதரிப்பதன் மூலம் தம்பி அல்தாபியின் ஆசை கட்சியான பாஜகவை ஆதரிக்கிறது என்றே சொல்லலாம்.

    மேலும் தேர்தல் முடிவெடுக்க ஏற்கனவே ஈரோட்டில் பொதுக்குழு, பிறகு ஒருவார ஓரங்க நாடக முடிவில் சென்னையில் அவசர செயற்குழு, பின்பு ஜெயலலிதாவுக்கு ஆதரவு அறிவிப்பு, இப்போது மீண்டும் 13ம் தேதி ஒரு அவசர செயற்குழுவாம். ஆளுங்கட்சியின் ஆஸ்தான பிள்ளைக்கு சில்லரைஎல்லாம் ஒரு பிரச்சினையா? எத்தனை பொதுக்குழு-எத்தனை செயற்குழு வேண்டுமானாலும் நடத்தலாம்.

    நடத்துங்க ராசா நடத்துங்க.


    --
    3/08/2014 05:25:00 முற்பகல் அன்று இயக்கங்களின் மறுபக்கம். இல் abdul muhaimin ஆல் இடுகையிடப்பட்டது
    __._,_.___

    பதிலளிநீக்கு
  11. கண்மூடி தனமாக இருபது யார் ? நம்புவது? யார்? த த ஜ தா? இல்லை மட்ற்றவர்கள?

    பதிலளிநீக்கு
  12. Dear All,
    Whatever you say about TNTJ..
    We will not listen @ all...
    Becuase our Bro Mr. Idot P.J. has said that we will support to AMMA.
    Bulshit guys...

    பதிலளிநீக்கு
  13. தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத் இல்லை இது.
    தமிழ் நாடு அண்ணன் ஜமாஅத்.
    இவருடைய வண்டவாளங்கள் எல்லாம் தண்டவாளம் எஅருது.
    இதை தான் சம்சுதீன் காசிமி முன்பே சொன்னார்.

    பதிலளிநீக்கு