முகநுால் செய்தி
இன்று சிங்கப்பூரிலிருந்து வந்த எனது மகளை அழைத்து வர திருச்சி ஏர்போர்ட் சென்றிருந்தோம்.பகல் ஒரு மணிக்கு வெளியான மகளுடன் உடனே புறப்பட்டு தஞ்சாவூர் வந்து சாப்பிட்டு விட்டு அங்கே டாக்டரிடம் என்
மகனாருக்கு சில ஆலோசனைகள் பெற்று காரில் ஊருக்கு திரும்பி கொண்டிருக்கும் போது திருவாருக்கு அருகில் எல்லா கார்களையும் நிறுத்தி கேமராவுடன் போலிஸ் பரிசோதனை நடந்து கொண்டிருந்தது..கடுமையான சோதனை....எங்கள் காரும் சோதிக்கப்பட்டது..நிகழ்வை கேள்வி பதிலாக தருகிறேன் கேள்வி ::எங்கிருந்து வர்றீஙக??
பதில்::திருச்சி ஏர்போர்ட்லிருந்து
கேள்வி ::ஏர்போர்ட்டுக்கு போய் வர காரணம் ??
பதில்::சிங்கப்பூரிலிருந்து வந்தவரை அழைத்து வர..
கேள்வி ::பாஸ்போர்ட் காட்டுங்க
பாஸ்போட் காட்டினோம்
கேள்வி::ஒருமணிக்கு கிளம்பி திருவாரூர்க்கு ஆறு மணிக்கு வர என்ன காரணம் ??
பதில்:::தஞ்சாவூரில் டாக்டரிடம் காட்டி வர லேட்டாகி விட்டது ?
கேள்வி ::எந்த டாக்டர் சீட்டைக் காட்டுங்க??
சீட்டைக்காட்டினோம்
சரி சரி கார் டிக்கியைத் திறங்க,,டிக்கியைத் திறந்து பெட்டிகள் காட்டப்பட்டன,,
கேள்வி ::பெட்டியில் ஏர்போர்ட் ஸ்டிக்கர் இல்லையே??
பதில்::நல்லா பாருங்க அந்தப் பக்கத்தில் இருக்கு
கேள்வி ::திறந்துக் காட்டுங்க
திறந்ததும் முழு சோதனை செய்யப்படுகிறது ..
வரும் வழியில் மூன்று தர்பூசணிப்பழம் வாங்கினோம் அதைப் பார்த்து
கேள்வி ::இதுவும் சிங்கப்பூரில் இருந்தா கொண்டு வர்றீங்க??
பதில்::இல்லே வரும் வழியில் வாங்கினோம்
கேள்வி ::ஏதும் பணக்கட்டு இருக்கா???
பதில்::இல்லை
மீண்டும் மீண்டும் உற்றுப் பார்த்து விட்டு சரி சரி கிளம்புங்க
அப்பாடா கேள்விகளும் சோதனைகளும் முடிந்து கார் கிளம்புகிறது,,,,,,,,,,,,,,,,,,,,
. . . . . . . ஏங்கடா இது மக்களாட்சி நாடா??மண்ணாங்கட்டி நாடா??பதவி வெறிப்பிடித்தப் பேய்களே உங்களால்தாண்டா எல்லாத் தொல்லைகளும் எங்களுக்கு .....மக்களாட்சியை தேர்ந்தெடுக்கும் மன்னர்களான மக்களுக்கு இவ்வளவு தொல்லையா??இதற்குப் பெயர் தேருதலா??இல்லை தேடுதலா?? சகஜ நிலையை பாதிக்கும் இதுபோன்ற தேர்தல் தேவையா???திருட்டை விடுங்கடா!!திருந்துங்கடா!!மக்கள் நிம்மதியாக வாழ ஒதுங்கிப் போங்கடா..........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக