Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 14 மார்ச், 2014

கலாட்டூனாகும் கார்ட்டூன்!

“என் குழந்தைகளை சினிமா பார்க்க நான் அனுமதிப்பதே கிடையாது” – இது பல கண்டிப்பு பெற்றோர்களின்  பலத்த குரல். ஆனால் குழந்தைகளை கார்ட்டூன் படங்களை பார்ப்பதற்கு அவர்கள் தடையேதும் ஏற்படுத்துவதில்லை என்பதை விட வசதி ஏற்படுத்துகின்றனர் என்பதுதான் ஆச்சர்யம்.
தனது வேலைகளில் கவனம் செலுத்த, குழந்தைகளின் கவனத்தை திசைதிருப்ப வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கத்தான் செய்கிறது. அதற்கு அவர்கள் பயன்படுத்தும் ஆயுதம்தான் ‘கார்ட்டூன் மூவி’. இப்படி இரண்டு வயது குழந்தைகளையும் தொலைக்காட்சிக்கு அடிமையாக்கிய பெருமை தாய்மார்களுக்கே சாரும்.

விபரீதம் அறியாவிடின் வினைகள் தொடரத்தானே செய்யும். கார்ட்டூன் மூவியின் குயிக் வரலாறு: குழந்தைகளை மகிழ்விக்க (?) 80 வருடங்களுக்கு மேலாக திரை ஆதிக்கம் செலுத்துகிறது கார்ட்டூன். ‘பெலிக்ஸ் தி கேட்’ என்ற கார்ட்டூன் சித்திரம் 1920களில் கலைப்பயணத்தை தொடங்கி வைத்தது.
டொனால்ட் டக், மிக்கி மௌஸ் என தற்போதும் பிரபலமாய் இருக்கும் கார்ட்டூன்கள் 1930களிலேயே காட்சிக்கு வந்தவை என்பது பிரமிக்கத்தக்க உண்மை. அதன் வளர்ச்சி 24 X 7 கார்ட்டூன் சேனல்கள், 80 மில்லியன் வீடுகளில் 68 சதவிகித குழந்தைகளையும், 32 சதவிகித இளைஞர்களையும் கட்டுக்குள் வைத்து விருட்சமாய்  நிற்கிறது.
தாக்கமும் பாதிப்பும்
பொதுவாக, குழந்தைகளின் கற்றல் திறன், காட்சிகள் மூலம் விளக்கப்படுவதை எளிதில் பதிவேற்றிவிடும். தொடக்க கல்வியின் ‘படம் பார்த்து கதைச் சொல்’ இதற்கு எளிய உதாரணம். தற்போதைய அனிமேஷன் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி, யதார்த்த உருவங்களை பிரதிபலிப்பதில் உண்மையை தோற்கடிக்கும் நிலையில் உள்ளது.
ஆய்வுகளின்படி, ஏழு வயதிற்குட்பட்ட குழந்தைகள் நிஜத்தையும், நிழலையும் (நடிப்பையும்) பிரித்தறிவதில் தெளிவற்றவர்களாகவே உள்ளனராம். யதார்த்தத்தை மீறிய நிலையிலேயே கார்ட்டூன் காட்சிகள் அமைக்கப்படுவதால், குழந்தைகளின் மனநிலை கற்பனை உலகத்தை நோக்கியே பயணிக்கிறது.
குழந்தைகளின் பேச்சு, பழக்கவழக்கம், விருப்பு, வெறுப்பு, உணவு, ஆடை கலாச்சாரம் என கார்ட்டூன் ஏற்படுத்தும் காயங்கள் அனைத்தையும் பட்டியலுக்குள் கொண்டு வருவது அத்தனை எளிதல்ல. சூப்பர் ஹீரோ சப்ஜெக்டுகள் மரணத்தை ஏற்படுத்தும் காயங்களையும், உயிர்களையும் காவு வாங்கியது இரணங்களின் உச்சகட்டம்.
வன்முறை
ஜனரஞ்சக சினிமாக்களில் வன்முறை கலந்திருந்தால், அதை குழந்தைகள் பார்க்கத் தகுந்த படமாக தணிக்கை குழு அனுமதிப்பதில்லை (சர்ட்டிஃபிகேட் கொடுப்பாங்கள்ள… அதத்தான் சொல்றோம்!). ஆனால் கார்ட்டூன் முழுவதும் வன்முறை காட்சிகளோடுதான் அமைக்கப்படுகின்றன. நகைச்சுவையே வன்முறையாகத்தான் காட்டப்படுகின்றது. (எ.கா.  டாம் & ஜெர்ரி). (புதிய வீடியோ கேம்களும் இத்தகைய வன்முறை  காட்சிகளை கொண்டே உருவாக்கப்படுகின்றன).
இவை குழந்தைகளின் ஆழ்மனதில் பசுமரத்தாணியாக பதிவதால், பகைமையுணர்வு (aggressive) சுடர் விட்டு எரிகிறது. மற்ற குழந்தைகளுடன் பழகும்போது தீயாய் வெளிப்படுகிறது. உளவியாலாளர்களின் எச்சரிக்கைகளும், சமூக ஆர்வலர்களின் எதிர்ப்புகளும் இருந்த போதிலும், கார்ட்டூன்களின் வரத்து வற்றிப் போகவில்லை.
பொருளாதார மோகம் ஒரு பக்கம் என்றாலும், மறுபக்கம் அடுத்த தலைமுறைக்கு புராணக் கதைகளை சேர்க்கவும் கார்ட்டூனை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.  [புராணங்களில் வரும் 'பீமன்' கதாபாத்திரத்தை மையப்படுத்தி ஒளிபரப்ப படுவதுதான் "சோட்டா பீம்"].
ஒரு வார்த்தை சொல்லுங்க ப்ளீஸ்…
சிறுவர்களின் வாழ்வின் ஓர் அங்கமாக மாறிப் போன கார்ட்டூன் கதாபாத்திரங்கள், அவ்வப்போது அவர்களால் (நடித்து)  இமிடேட் செய்யப்படுகிறது. உடல் ஆரோக்ன்ம் சார்ந்த விளையாட்டுகள் மறைந்து, தங்களது நேரத்தை தொலைக்காட்சி முன்னால் தொலைப்பதால், உடல் நலம், மனநலம் இரண்டுமே கேள்விக்குறியாகிறது.
வலிமை மிக்க இளைய தலைமுறையை உருவாக்க கலாட்டூனுக்கு கூறுவோம் டாட்டா….
Say No to Cartoon!!!
முஹம்மது ஷாஃபி

நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக