Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 23 மார்ச், 2014

பகைவனுக்கு பல்லக்கு துாக்குபவர்கள் கவணத்திற்கு!

பகைவனுக்கு பல்லக்கு துாக்குபவர்கள் கவணத்திற்கு!

நமதூர் மற்றும் நமதூர் மக்கள் மிகவும் பாரம்பரியமிக்வர்கள். இடைபட்ட சில காரணங்களினால் ஜமாத் ரீதியாகவோ! இயக்கங்கள் ரீதியாகவோ! அல்லது அரசியல் ரீதியாகவோ! கருத்து வேறுபாடுகள் நமக்குள் இருந்தாலும்,
மார்க்கம் என்ற நீரோடையில் நாம் செல்வோமேயானால், ஒரே இறைவன், ஒரே வேதம் என்ற தெளிந்த நீராக தான் செல்லமுடியும். முனஃபிக்குகளை தவிற இதை அனைவரும் மறுபதற்கு இடமில்லை!

எல்லா மனிதர்களிடத்திலும் தவறு உள்ளது

இதற்கு முன் அரசியல் கட்சி தலைவர்களை ஏற்றுக்கொண்ட நம் முன்னோர்களும் நிகழ்காலங்களில் உள்ளவர்களும் சற்று சிந்தித்து பார்க்க கூடிய தருனம் இது. காரணம் இதற்கு முன் கருணாநிதியோ! அல்லது ஜெயலலிதாவோ! நம்முடைய நம் சமுதாயத்தினுடைய நேரடி எதிரியான பிஜேபி-யை ஆதரவுகரம் நீட்டினர். இனி நீட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை ஏனென்றால் இது அரசியல்!

இதைபற்றி இவர்கள் முஸ்லிம் மக்களின் ஓட்டையும், அவர்களின் ஒற்றுமை வலிமையையும், கருத்தில் கொண்டு வெளிப்படையாக கூறாதபட்சத்தில் இன்று உருவெடுத்த சினிமா கூத்தாடிக்காரன் கட்சி மற்றும் அதனை சார்ந்து கூட்டனியில் நாங்களும் இஸ்லாமியர்களின் நன்பர்கள் தான் என்ற சில கட்சிகளும் போலியான தோற்றத்தில் நம்மை நேரடியாகவே எதிர்க்க களம் இறங்குகின்றனர். இன்று இவர்கள் கூறும் காரணம் எதுவாக இருந்தாலும் பிஜேபிக்கு மகுடம் சூட்டும் விதமாக முஸ்லிம் மக்களின் அன்பை உதாசினப்படுத்தி நம்மை நேரடியாகவே கொச்சைப்படுத்த படுகின்றனர். இதை நமதூர் மக்கள் மத்தியில் கூண்டு கிளியிடம் கொள்ளிக்கட்டை சொருகியது போலவும் அண்ணப்பறவையை அக்னி குன்டத்தில் வீசுவது போலாக உள்ளது.

இதைக்கூட நாம் புறிந்துக்கொள்ளாமல் அந்த கட்சியிலேயே நிலைத்து பெருமை சேர்க்கலாம் என்று நினைத்தால், நமது வாரிசுகள் இன்றே ஒவ்வொறுவரும், இவர்களிடம் கேட்ககூடிய கேள்வி வெட்கம் கெட்ட வெள்ளாட்டிற்கு வென்பட்டு முக்காடா ?.


நமதூரில் இருந்து இவர்களுக்கு 1 ஓட்டு கூட நம் எதிரிக்கு சென்றுவிடாமல் பார்த்துக்கொள்வது லெப்பைக்குடிக்காட்டில் பிறந்த ஒவ்வொறு மன்னின் மைந்தனின் கடமை.
நமது நிருபர்.

5 கருத்துகள்:

  1. (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சொல்கிறது....)

    SDPI கட்சிக்கு ஓட்டு போடாதே.....
    ஏன் என்று கேட்டேன்...
    இவர்கள் கிறிஸ்துமஸ்ஸுக்கும்....
    வினாயகர் சதுர்த்திக்கும் நோட்டீஸ் அடிக்கிறார்கள்..

    அடுத்து சொன்னது....
    மனிதநேய மக்கள் கட்சிக்கும் ஓட்டு போடாதே......
    ஏன் என்றால்.....
    இவன் ஒரு சீட்டுக்காக சமுதாயத்தை அடகு வைக்கிறான்...
    என்று சொல்கிறது....

    இப்ப நான் கேட்கிறேன்....
    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்....
    ஏன் அதிமுக...வை ஆதரிக்கிறது......?????

    அம்மா அல்லாவை ஏற்றுக்கொண்டவர்கள்
    என்பதற்காகவா....

    அம்மா ஐந்து வேளையும் தொழுகிறார்கள்...
    என்பதர்க்காகவா.....

    அம்மா கரெக்டா நோம்பு வைப்பார்கள்....
    என்பதர்க்காகவா.....

    அம்மா முஸ்லீம்கள் மேல் ரொம்ப பிரியமா இருப்பார்கள்...
    என்பதர்க்காகவா....

    அம்மா ஹாஜியார்....
    என்பதர்க்காகவா....

    அம்மா கரெக்டா ஜக்காத் கொடுப்பார்கள்....
    என்பதர்க்காகவா.....

    அம்மா மக்களின் கஜானா செல்வங்களை தொடமாட்டார்கள்...
    என்பதர்க்காகவா.....

    அம்மா அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளின் மீது அன்புடன்
    நடவடிக்கை எடுக்கவில்லையே......!!!!
    என்பதர்க்காகவா.....

    ராமநாதபுரத்தில் அத்துமீறி நடந்துகொண்ட காவலர்கள் மீது
    நடவடிக்கை எடுக்கவில்லையே.....
    என்பதர்க்காகவா

    இல்லை நீங்கள் கேட்ட இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தந்தார்கள்...
    என்பதர்க்காகவா.....

    பாபார் மஸ்ஜித் இடிப்பதர்க்கு தன் கட்சியின் சார்பில்
    ஆட்களை அணுப்பி வைத்தார்கள்....
    என்பதர்க்காகவா....

    ஒரு PJ...கௌரவத்தை காப்பதற்காக.....
    ஒட்டு மொத்த சமுதாயத்தையும் ரொம்ப கேவலமாக
    நினைத்துவிட்டீர்களே....

    நீங்கள் அலைக்கும் போதெல்லாம் உங்களை நம்பி...
    வந்த நாங்கள் மடையர்களே.....

    நீங்களும் அற்பமான மனிதர்களே என்பதை நாங்கள்
    மறந்துநின்றோம்.... இப்போது தெளிவாக உள்ளோம்.

    மறுமைக்கும் அல்லாஹுவிற்க்கும் அஞ்சும்...
    மனிதர்கள் யோசிக்கவும் ........,

    பதிலளிநீக்கு
  2. அருமையான கட்டுரை தமிழகத்தில் சில தொகுதிகளிள் 6 முனைபோட்டியும் 5முனைபோட்டிகளும் நடைபெற இறுக்கிறது ஓட்டு பல பிரிவுகளாக பிரிகின்ற காரணத்தால் இபொழுது வெற்றியை தீர்மனிக்ககூடியவர்கள் 100%த்தினர் இஸ்லாமியர்கலாக இருக்கிரார்கள். இதைபுரிந்து கொண்ட அரசியல்வாதிகள் இஸ்லாமியர்களின் வாக்குகளை வாங்க நடிக்கிரார்கள்.இனி நாம் சரியாண முடிவு எடுக்கவேண்டிய தருனம்.

    பதிலளிநீக்கு
  3. கேரளாவில் மாநில அளவில் ஆட்சியை தீர்மானிக்கும் முக்கிய இடத்தில் முஸ்லிம் லீக் இருக்கிறது,

    காங்கிரஸ், இடதுசாரிகளுக்கு பிறகு, மூன்றாவது பெரிய கட்சியாக திகழும் முஸ்லிம் லீகை ஆதரித்தால் 25% முஸ்லிம் ஜனத்தொகையை கொண்ட அம்மாநிலத்தில் இஸ்லாமிய ஒற்றுமை தழைத்தோங்கும் தானே?

    இஸ்லாமியர்களின் முன்னேற்றம், இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு, முஸ்லிம் ஒற்றுமை என்று வாய் கிழிய பேசும் எஸ்டிபிஐ என்கிற இஸ்லாமிய துரோகிகள் தங்களை நேர்மையாளர்களாக காட்ட எண்ணினால், அங்கே முஸ்லிம் லீகிற்கு முழு ஆதரவை அளித்திருக்க வேண்டும். செய்தார்களா?

    மாநிலத்தின் மொத்த பாராளுமன்ற தொகுதிகளான 20 தொகுதிகளிலும் முஸ்லிம் லீகிற்கு எதிராக தனித்து போட்டியிடப் போவதாக அறிவிப்பு செய்து தங்கள் அரசியல் சுய நலனை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளனர்.

    தமிழகத்தில் அந்த தொகுதியில் முஸ்லிம் வேட்பாளருக்காக விட்டுக் கொடுத்தோம், இந்த தொகுதியில் மமகவுக்கு விட்டுக் கொடுத்தோம் என்று படம் காட்டித் திரிவதெல்லாம் மக்களை ஏமாற்றி ஓட்டுப் பொறுக்க இவர்கள் நடத்தும் கபட நாடகமேயன்றி வேறில்லை.

    இவர்களுக்கு ஒத்து ஊதும் மானங்கெட்ட தமுமுகவினருக்காவது, முதலில் நீ கேரள முஸ்லிம் லீகிற்கு ஆதரவு கொடு, பிறகு இங்கே வீர வசனம் பேசு, என்று எச்சரிக்கும் முதுகெலும்பு இருக்கிறதா?

    அதுவும் இல்லை, ஏனெனில் இவர்கள், எஸ்டிபிஐயினரையும் விஞ்சுகிற சுய நலவாதிகள் !

    சமுதாய ஒற்றுமை, சமுதாய அக்கறை, மண்ணாங்கட்டியெல்லாம் இவர்கள் விடும் வெற்று சவடால்கள் என்பதையும், ஓட்டுப் பொறுக்கி பதவி சுகம் பெற வேண்டும் என்பது மட்டும் தான் இவர்கள் இலக்கு என்பதையும் பொது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் !

    Thanks
    Nashid Ahamed

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாக சொன்னீர்கள் Nashid Ahamed எஸ் டி பி கட்சி விடுங்கள் மற்ற முஸ்லிம் அமைப்பிற்கு ஆதரவு கொடுக்க கூடாது என்பதற்காக என்ன வேண்டுமானாலும் நீங்கள் கூறலாம் அதை வெறிபிடித்தார் போல் நீங்களும் பின்தொடரலாம். இதனால் கிறுக்கு பிடிக்கபோகுது சிந்தித்து உணராத மக்களுக்கு தானே தவிர வேறு யாருக்கும் இல்லை.

      நான் எந்த கட்சியும் சாராதவன் ஆனால் என்னுடைய ஓட்டு பி ஜே பி க்கு போகாமல் பார்த்து கொள்வது என்னுடைய சமுதாயத்திற்கு நான் செய்யும் கடமை. அதை தவற விட்ட அண்ணன் கட்சிக்கு கொடிபிடிக்கும் உம் போன்றோரிடம் கேட்டால் முஸ்லிம் லீக் சுயநலவாதி ம ம க ஓட்டு பொருக்கி எஸ் டி பி இணை வைப்பவன் மற்றவனை கூறும் உன்போன்ற அறிவிலிகள், நீங்கள் ஏன் மற்றவனுக்கு ஓட்டை பொருக்கி கொடுகுரீர்கள்.

      நீங்கள் யோகியர்கள் என்றால் உங்களைப்பற்றி மட்டும் பதில் கூறு. திரும்ப திரும்ப போலி ஒற்றுமைவாதிகள் ஒற்றுமைன்னு பெயர் வைத்து கொண்டு அதை செய்கிறார்கள், இதை செய்கிறார்கள், திராணி இருந்தால் அவர்கள் ஒன்றாக நின்று காட்டட்டும் என்று பழைய பல்லவியை பாடாதீர்!

      நேரடியாக அரசியலில் நிர்ப்பது ஓட்டு பொருக்கி என்றால், அந்த ஜெயா. ஆண்ட்டிக்கு ஓட்டுப்போடுங்கள் என்று கூறுவது ஓட்டு பொருக்கி கொடுப்பது ஆகும்.

      அதில் சுயநலம் வாழ்கிறது என்றால் இதில் சுயநலத்தின் அப்பன் வாழ்கிறான்.

      நீக்கு
  4. Dear Mr. Nashid Ahamed,

    முஸ்லீம் வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்பது இனவெறி என்றால்
    முஸ்லீம்களுக்காக இட ஒதுக்கீடு கேட்பதும் இன வெறிதான்.
    முஸ்லீம்கள் கல்வி வேலை வாய்ப்பில் பின் தங்கியுள்ளனர் என்று நியாயப்படுத்துவீர்களேன்றால் அரசியலிலும் பின் தங்கியுள்ளனரே.
    தகுதியில்லை திறமையில்லை சுயநலவாதிகள் என்று நீங்கள் கற்பிக்கும் அனைத்து காரணங்களும் இட ஒதுக்கீடுக்கும் பொருந்தும்.
    பொது நன்மை (collective Benefit) கருதி நாம் எடுக்கும் முடிவுகள் பரந்த சிந்தனைகளை அடிப்படையாக கொண்டிருக்கவேண்டும்.

    சிந்தித்து செயல்படுங்கல் இன்ஷா அல்லா வெற்றி நிச்சயம்.

    பதிலளிநீக்கு