சுவாமியின் வாக்குமூலம் நாஸிர் ஹுஸைனின் விடுதலைக்கு உதவியது!
புதுடெல்லி: தீவிரவாத வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோரைச் சார்ந்த முஸ்லிம் இளைஞர் நாஸிர் ஹுஸைன்(வயது32) விடுதலையானார்.
வெடிப்பொருட்களுடன் 2007-ஆம் ஆண்டு ஜூன் மாதம் லக்னோவில் ஒரு ஹோட்டல் அறையில் இருந்து ஹுஸைனை கைதுச் செய்ததாக உத்தரபிரதேச அதிரடிப்படை
போலீஸ் கூறியது.ஆனால், கைது பதிவுச் செய்வதற்கு சில தினங்கள் முன்பு உத்தரகாண்டில் உள்ள தனது ஆசிரமத்தில் இருந்து போலீஸ் கடத்திச் சென்றதாக மடாதிபதி சுவாமி சிவானந்த் நீதிமன்றத்தில் வாக்க்மூலம் அளித்தார்.இதனை முக்கிய ஆதாரமாக கண்டறிந்து ஹுஸைனை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
உத்தரகாண்டில் தெஹரி கர்வால் மாவட்டத்தில் முனி கீ ரெத்தி நகரத்தில் சுவாமி சிவானந்தின் ஆசிரமம் உள்ளது.இங்கு கட்டிட வேலைக்கு வந்த ஹுஸைனை 2007-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி மஃப்டியில் வந்த சிலர் கடத்திச் சென்றதாக சுவாமி சிவானந்த் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்.
ஜூன் 21-ஆம் தேதி லக்னோவில் உள்ள ஹோட்டலில் ஹுஸைனை கைதுச் செய்ததாக போலீஸின் குற்றப்பத்திரிகை கூறுகிறது.இதில் சுவாமியின் வாக்குமூலம் நம்பத்தகுந்தது என்று நீதிமன்றம் தெரிவித்தது.இவ்வழக்கிற்காக தனது சொந்த செலவில் லக்னோவிற்கு சுவாமி சிவானந்த் வந்ததாக நீதிமன்றம் தெரிவித்தது.ஹுஸைனை கடத்திச் சென்ற தகவலை உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்த பிறகும் போலீஸ் வழக்கு பதிவுச் செய்யவில்லை என்று சுவாமி சிவானந்த் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.இதனைத்தொடர்ந்து ஹுஸைனை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.அரசு தரப்பு சாட்சிகள் பொய் கூறுவதாக நீதிமன்றம் தனது உத்தரவில் கூறுகிறது.
ஹுஸைன் மீது மிகவும் கடுமையான குற்றப்பிரிவுகளை போலீஸ் சுமத்தியிருந்தது.ஹரித்துவாரில் குண்டுவைக்க ஹுஸைன் திட்டமிட்டார்,2005-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடந்த ஹூஜி இயக்க முகாமில் பங்கேற்றார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் ஹுஸைன் மீது சுமத்தப்பட்டது.நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஹுஸைன் விடுதலையாகி வீட்டுக்கு வந்தார்.
சுவாமி சிவானந்தாவிற்கு நன்றி தெரிவிப்பதாக ஹுஸைனின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.ரெயிலில் டிக்கெட் கிடைக்காததால் ரூ.8700 செலவழித்து விமானத்தில் லக்னோவிற்கு வந்து சுவாமி சிவானந்தா வாக்குமூலம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தூது ஆன்லைன்
பலபுல்லுரிவிகள் இருக்கும் இடத்தில் நல்லவர்களும் இருக்கதான் செய்கிரர்கள் சுவாமி சிவாநந்தா அவர்களுக்கு வாழ்துக்கள்.
பதிலளிநீக்கு