Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 26 மார்ச், 2014

அமீரகத்தில் அல்லாஹ்வின் ரஹ்மத்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அமீரகத்தில் இன்று அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்கிகொண்டுள்ளது. (அல்ஹம்துலில்லாஹ்)


நேற்று மாலை முதல் வானம் மேகமூட்டத்தோடு லேசான தூரல் தொடங்கியது. இன்று அமீரகத்தில் பரவலாக ரஹ்மத் இறங்கிக்கொண்டே உள்ளது. இதனால் தொழில்கள் பாதிப்பு ஏற்பட்டாலும் மக்கள் மத்தில் மிகுந்த
புத்துணர்சியோடு மக்கள் உள்ளனர். காரணம் கடந்த வாரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதை உணர்ந்த மக்கள் மத்தியில் இன்று மழை பொய்துவருவதை மகிழ்ச்சி பொங்க உற்சாகத்தோடு காணப்பட்டு வருகின்றனர்.


வரும் மே மாதம் 4ஆம் தேதி முதல் அம்மாத இருதி வரை வெயில் வெயில் தமிழகத்தில் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்க படுகின்றது. அந்த சமயங்களில் இது போன்று அல்லாஹ்வின் ரஹ்மத் நமது ஊரிலும இறங்க வேண்டும் என்று இன்றே பிராத்தணை செய்வோமாக.
நமது நிருபர்.

1 கருத்து: