30 அல்லது 40 ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டத்தை சிந்தித்துப் பார்க்கவே சிலருக்கு சோர்வாக தோன்றலாம்.குறிப்பாக கிராமப்பகுதிகளில்.போதிய கல்வி அறிவு இல்லாத பெற்றோர்கள், வழிகாட்டுதல்களை வழங்க யாரும் இல்லாத நிலை, குறைவான கல்வி ஸ்தாபனங்கள் இதுவெல்லாம் பலருக்கும் குறைபாடாக தோன்றலாம்.ஆனால்,
அங்கெல்லாம் ஒரு சுதந்திரம் இருந்தது.ஆம்!நாம் என்ன பயிலவேண்டும்? எதைக் கற்கவேண்டும்?எதனை வாங்கவேண்டும்? என்ற சுதந்திரம் இருந்தது!
முன்பெல்லாம் வீட்டில் இருந்து வெளியே கிளம்பும் கணவரிடம் , வாங்கவேண்டிய பொருட்களின் லிஸ்டை மனைவி அளிப்பார்.அதனை ஞாபகத்தில் வைத்து மறக்காமல் வீடு திரும்பும்போது வாங்கி வருவார் கணவர்.ஆனால், இன்று நாம் வெளியே செல்லும்போது நாம் எதனை வாங்கவேண்டும் என்பதை சந்தையே
தீர்மானிக்கிறது.ஒரு பேக்கறி கடைக்குச் சென்றால் கண்ணாடி பெட்டிக்குள் இருக்கும் நவீன தின்பண்டங்கள் என்னைப் பார்? என்னை சுவைத்துப்பார்? என்று நம்மை தூண்டுகின்றன!துணிக்கடைகளிலும், நகைக்கடைகளிலும், ஃபர்னிச்சர் கடைகளிலும், அழகு சாதன கடைகளிலும் இதே நிலைமைதான்.
தீர்மானிக்கிறது.ஒரு பேக்கறி கடைக்குச் சென்றால் கண்ணாடி பெட்டிக்குள் இருக்கும் நவீன தின்பண்டங்கள் என்னைப் பார்? என்னை சுவைத்துப்பார்? என்று நம்மை தூண்டுகின்றன!துணிக்கடைகளிலும், நகைக்கடைகளிலும், ஃபர்னிச்சர் கடைகளிலும், அழகு சாதன கடைகளிலும் இதே நிலைமைதான்.
அன்றாட சமையலுக்கு தேவையான பல சரக்குப்பொருட்கள் வேண்டுமானால் இதில் இருந்து மாறுபட்டு இருக்கலாம்.என்ன கல்வி கற்கவேண்டும் என்ற சுதந்திரம் கூட நமக்கு இன்று இல்லாமல் போய்விட்டது.சந்தை விளம்பரங்களும், வெளியில் இருந்து வரும் அழுத்தங்களும்தாம் நம்மை தீர்மானிக்க வைக்கும் காரணிகளாக திகழ்கின்றன.சுதந்திரமாக குடித்த தண்ணீரின் விலையை கூட இன்று சந்தைதான் தீர்மானிக்கிறது!
இன்றைய உலகில் நாம் எதனையும் தீர்மானிப்பதில்லை.நம்மில் பலரும் நமது அறிவு, சிந்தனை, சுய உரிமை, சுதந்திரம் அனைத்தையும் சந்தைக்கு பணயம் வைத்துள்ளோம்.சந்தையின் அடிமைகளான மனோபாவம்தான் நம்மிடையே காணப்படுகிறது.ஆகையால் நாம் சுதந்திரமானவர்கள் என்று நம்பிக்கையோடு பறைசாட்டுவதும், உரிமை கோருவதும் கற்பனையே. சந்தையைப் போலவே பல காரணிகளும் மனிதனை அடிமையாக வைத்துள்ளன.மதம், பணம்,பதவி, புகழ், புரோகிதம், சாமியார்கள், தேசம், மொழி,அரசியல்வாதிகள்,ஆட்சியாளர்கள் என பல காரணிகளை கூற முடியும்.இவற்றின் பிடியில் இருந்து விலகி சுதந்திரத்தை நாம் மீட்டெடுத்தாகவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்!
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:தீனார் மற்றும் திர்ஹத்தின் அடிமைகளுக்கு
அழிவுதான்(நூல்:புகாரி)
அழிவுதான்(நூல்:புகாரி)
அ.செய்யது அலீ.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக