வெள்ளிக்கிழமை நமதூர் கடைவீதி
வெள்ளிக்கிழமை
வந்துவிட்டாலே நமதூரில் ஒவ்வெறு வீட்டிலும் அசவை உணவு இல்லாமல் இருப்பதில்லை என்றுதான்
சொல்ல வேண்டும். காரணம் அன்று கடைவீதிகளுக்கு வந்தாலே கூட்டம் கடைகளில் நெரிவதை பார்க்க
முடியும்.
இப்படி இருக்கும்
சூழ்நிலையில் ஆண்கள் இல்லாத வீடுகளில் உள்ளவர்கள் அக்கம் பக்கத்தில் உள்ள சிறுவர்களிடம்
பணத்தை கொடுத்து பொருளை வாங்கிவர சொல்லுவார்கள். அந்த சிறுவர்களும் பணத்தை வாங்கிக்கொண்டு
கடைகளில் கரியோ அல்லது மீனோ வாங்கும் போது சிறுவர்கள்தானே என்று நினைத்து ஒரு சிலர்
தரத்தில் குளருபடி செய்தும் வருகின்றனர்.
இதனால் நமது ஊரில்
உள்ளவர்கள் அப்படிப்பட்ட சிறுவர் சிறுமியர்கள் கடைக்கு வந்தால் அவர்களுக்கு தரமானதாக
வினியோகம் செய்யும் படி கடைக்காரர்களை வேண்டுகோள் இடுங்கள். உடன் நீங்கள் இருந்து வாங்கிக்கொடுங்கள்.
ஏனென்றால் அவர்கள்தான் நாளைய வாரிசுகள் நம்மிடத்தில் இருந்து அவர்கள் அன்பையும் நேர்மையையும்
பார்த்து பழகுவர். இதன் மூலம் அவர்கள் வருங்காலத்தில் தம் உரிமைகளை தட்டிக்கேட்க வீரமும்
உருவாகும்.
சுற்றுவட்டார ஊர்களில்
விற்பனைகள் காட்டிளும் நமதூரில் அதிக விளைக்கு ஒவ்வெறு பொருளும் விற்க, ஆடம்பரத்தையும்
அத்தியாவிச தேவைகளையும் நாம் பிறித்து ஆராயாமல் இருப்பதே காரணமாகும்.
நமது நிருபர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக