முதலில் என் சமுதாயம் பிறகுதான் மற்றவை
ஒற்றை இலையோ அஸ்தம சூரியனோ யார் வேண்டுமானாலும் நாளை தாமரையை தலையில் சூடலாம்.
இது நாடறிந்த உண்மை.
அதை பேச இது நேரமில்லை…
நமக்கென இப்போது ஐந்து விரலாய் ஐவர்…
கட்சியே இல்லாமல் கூப்பாடு போடுபவர்களை விட்டு விட்டு நமக்கென இருப்போரை நாம் அனுப்பி வைப்போம் நம் நாடாளுமன்றத்திற்கு…
வெறுங்கை என்பது மூடத்தனம்
ஒவ்வொரு விரலும் மூலதனம்!
ஒவ்வொரு விரலும் மூலதனம்!
பார்த்து அழுத்துவோம் பட்டனை
பலப்படுத்துவோம் பாராளுமன்றத்தை!
பலப்படுத்துவோம் பாராளுமன்றத்தை!
- கோட்டாறு ஷிபான் அரூஸி
தூது ஆன்லைன்
மேலே குறிப்பிட்ட முஸ்லீம் லீக் வேர்ப்பாளர் அப்துல் ரஹ்மான் கடந்த முறை MP அவர் முஸ்லீம் சமுதாயதிற்கு இதுவரை என்ன என்ன செய்துள்ளார்கள் பட்டியலிட முடியுமா?. ஒட்டு மொத்த முஸ்லீம் சமுகத்தின் நலனை பாருங்கள் ஒரு சில முஸ்லீம் தலைவர்களின் நலனை பார்க்கவேண்டாம். நோட்டுக்கும் சீட்டுக்கும் AIDMK ஆதரிக்கவில்லை இட ஒதிக்கீடு காக மட்டுமே. நமது சமுதாய முனேற்றதிற்கு இடஒதிக்கீடே சிறந்த வழி.
பதிலளிநீக்குஅம்மாவிற்கு ஆதரவு தெரிவித்ததற்கு அண்ணன் பிரதானமாக கூறும் காரணம், இட ஒதுக்கீட்டை கூட்டிக் கொடுப்பதற்காக ஜெயலலிதா ஆணையம் அமைத்து விட்டார் என்பதுதான். அண்ணன் சொன்னது உண்மை என்றால், ஆணையம் அமைத்த அந்த உத்தரவை காட்டத்தயாரா? என்று கேட்டோம். அதற்கு ஜெயலலிதா அரசு எழுதிய கடிதத்தை காட்டுகிறார் பாவம். ஆணையம் என்றால் அண்ணன் 2006ல் ஒரு ஒரு பேப்பரை காட்டினாரே அதற்கு பெயர்தான் ஆணையம். பிற்படுத்தப்பட்டோர் நல வாரியத்திற்கு அரசு எழுதும் கடிதம் ஆணையமாகி விடாது என்பதை கூட அறியாமல் இவர் உளறுவது சமுதாயத்திற்கே கெட்டபெயரை பெற்றுத்தருகிறது. ஒரு பரிந்துரை கடிதத்திற்கும், ஆணையத்திற்கும் வித்தியாசம் தெரியாத இவரையெல்லாம் முஸ்லிம்கள் தலைவர் என்று சொல்கிறார்களே என்று பார்ப்பவர்கள் காறித் துப்புகிறார்கள்.
நீக்குஏற்கனவே நீதிபதி ஜனார்த்தன் தலைமையில் ஆணையம் உள்ளது புதிதாக ஆணையம் அமைக்க தேவையில்லை. இருக்கிற ஆணையதிருக்கு முஸ்லீகளின் இட ஒதிகீட்டை அதிகப்படுத்தி தர பரிந்துரை செய்து ஜெயலலிதா கடிதம் அனுப்பி உள்ளார். இது தமிழகத்தில் நமக்கு இடஒதிக்கீடு கூடுதலாக கிடைக்க கூடிய வாய்ப்பு பிரகாசமாக உள்ளது AIDMK உடைய ஆட்சி இன்னும் 2 1/2 வருடம் உள்ளது இந்த சூழ்நிலையில் அவர்களை பகைத்து கொண்டால், இடஒதிக்கீடு காக நாம் இன்னும் 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும். . 40 தொகுதிகளிலும் திமுக ஜெயித்தாலும் அவர்களால் தமிழகத்திலும் சரி மத்தியிலும் சரி தற்போது இடஒதிக்கீடு கொடுக்க முடியாது. தற்போது ஆட்சிலிருப்பவர்கள் மூலம் தான் முஸ்லீம்களுக்கு இடஒதிக்கீடு கிடைக்க வாய்ப்புள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
நீக்குஇந்த முஸ்லீம் அரசியல் வாதிகள் ஓரிறை கொள்கை மறந்து பிற மத மக்களை கவருவதர்க்காக செய்த செயல்கள்
பதிலளிநீக்கு1) ஜவஹருல்லாஹ் ராமேஸ்வரத்தை புனித பூமியாக அறிவிக்கவேண்டும் என்று சொன்னது.
2) குரானுக்கு மாற்றமாக தூக்கு தண்டனையை உடனடியாக நீக்க வேண்டும் என்று சொன்னது.
3) காதர் மொய்தீன் அவர்கள் கோவில் விழாக்களில் கலந்து கொண்டு .இந்து முன்னனியுடன் இன்புற்று மகிழ்ந்தார் இவர்கள் தான் இஸ்லாமியர்களா?
இப்படி நேரடியாக மார்க்க விரோதச் செயல்களில் ஈடுபடுவோருக்கு வக்காலத்து வாங்குவது எந்த விதத்தில் நியாயம்?
jayalalitha 5 velai tholukirar...
பதிலளிநீக்குnumbu vaikiraar....
jakath kodukiraar...
haj selkirar...atharkaka AIADMKu vakkualiyungal makkalay...
adra saka........ adra saka...............
நீக்குJAYALALITHA"முஸ்லிம்கள் மட்டும் சிறுபான்மையினர் அல்ல,
பதிலளிநீக்குவேறு சமுதாயத்தினரும் இருக்கிறார்கள்”
என்றெல்லாம் 'பேட்டி'
கொடுத்தவர் ஜெயலலிதா.
"அயோத்தியில் ராமர் கோவில்
கட்டுவதை ஆதரிக்கிறீர்களா" என்று கேட்டபோது:
"ஆமாம், ஆதரிக்கிறேன்"...
"இந்தியாவிலேயே ஒரு ராமர் கோவில் கட்ட
முடியவில்லை என்றால் வேறு எங்கே கட்ட முடியும்?”
என்று கூறியவர்தான், ஜெயலலிதா.
தற்போதைய நாடாளுமன்றத்தேர்தலில்,
தி.மு.க. அணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
கட்சியும், மனித நேய மக்கள் கட்சியும்
கூட்டணி சேர்ந்து, தலா ஒரு இடத்தில்
போட்டி இடுகின்றன.
அ.தி.மு.க., எதாவது ஒரு முஸ்லிம்
இயக்கத்திற்கு, ஒரு இடமாவது அளித்திருக்கிறத
ா?
வேட்பாளர்களை எடுத்துக் கொண்டால்,
தி.மு.க. சார்பில், முஸ்லிம் சமுதாயத்திற்கு,
இரண்டு பேர்; கூட்ணிக் கட்சி சார்பில், முஸ்லிம்
சமுதாயத்திற்கு, இரண்டு பேர் என,
மொத்தம், நான்கு பேர்.
அதாவது, 10 சதவீதம் என்ற அளவிற்கு,
முஸ்லிம்களுக்கு போட்டியிட
வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
நான் இந்த குழாய் அடி சண்டையில இல்லை
பதிலளிநீக்குDear Mr. Syed Musthafa,
பதிலளிநீக்குநாம் விரும்பும் மாற்றத்தை அடுத்தவர் கொண்டு வருவார் என்று எதிர் பார்ப்பது நம்முடைய இயலாமையும் நம்முடைய தன்னம்பிக்கை குறைபாடும் ஆகும். நாம் விரும்பும் மாற்றத்தின் பங்காளிகளாக நாமே இருக்க வேண்டுமேயல்லாது பார்வையாளர்களாக இருக்க கூடாது.
உங்களின் சித்தாந்தம் முஸ்லீம்கள் அதிகமாக வாழும் மாநிலங்களுக்கு பொருந்தும் உதாரணம் கேரளா. தமிழகத்தில் பொருத்தவரை நமது தேவைகள் நிறைவேறிட திராவிடகட்சிகளை சார்ந்து இருக்கவேண்டிய நிலையில் தான் நாம் உள்ளோம். நாம் கடந்த 35 வருடமாக நமது முஸ்லீம் லீக், தேசிய லீக், MLA, MP களை தேர்ந்தெடுத்து சட்டசபை, பாரளமன்றத்துக்கு அனுப்புகிறோம் இதுவரை இந்த சமுதாயத்திற்காக ஏதேனும் சாதித்து உள்ளார்களா என்றால் எதுவும் இல்லை. 3.5% இட ஒதிக்கீடு கூட நாம் மக்களை திரட்டி பல போராட்டங்கள் செய்த பலனால் நமக்கு கிடைத்தாது இந்த முஸ்லீம் MLA, MP யினால் அல்ல. இவர்கள் எல்லோரும் தங்களின் கட்சிக்கு ஒதுக்கப்படும் ஓரிரு இடத்திற்கு விளைபோககூடிய நிலையில் தான் உள்ளனர். கட்சி கட்சி என்றுதான் நினைக்கிறார்களே தவிர சமுகத்தின் மேல் சிறு கவலையும் இல்லை. சிந்தித்து செயல்படுங்கல் இன்ஷா அல்லா வெற்றி நிச்சயம்.
பதிலளிநீக்குDear Mr. Syed Musthafa,
நீக்குமுஸ்லீம் வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்பது இனவெறி என்றால்
முஸ்லீம்களுக்காக இட ஒதுக்கீடு கேட்பதும் இன வெறிதான்.
முஸ்லீம்கள் கல்வி வேலை வாய்ப்பில் பின் தங்கியுள்ளனர் என்று நியாயப்படுத்துவீர்களேன்றால் அரசியலிலும் பின் தங்கியுள்ளனரே.
தகுதியில்லை திறமையில்லை சுயநலவாதிகள் என்று நீங்கள் கற்பிக்கும் அனைத்து காரணங்களும் இட ஒதுக்கீடுக்கும் பொருந்தும்.
பொது நன்மை (collective Benefit) கருதி நாம் எடுக்கும் முடிவுகள் பரந்த சிந்தனைகளை அடிப்படையாக கொண்டிருக்கவேண்டும்.
சிந்தித்து செயல்படுங்கல் இன்ஷா அல்லா வெற்றி நிச்சயம்.
அண்ணன் கட்சிக்கும் அம்மா கட்சிக்கும் நிரைய ஒற்றுமை உள்ளது இவருக்கு எதிரக பேசுபவர்களை தங்களுடய குண்டர்களை கொண்டு சாநியை கரைத்து அடிப்பாற்கள் அம்மாவும் அப்படியே பிரச்சாரத்தில் கையைவெட்டுங்கள் மரணஅடி கொடுங்கள்.என்பார்
பதிலளிநீக்குமுதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார உரைகளில் இந்த பிரகடனத்தின் சாயல்கூட தென்படவில்லையே? குஜராத்தில் 2002ம் ஆண்டு சிறுபான்மை இஸ்லாமிய மக்கள் கொன்று குவிக்கப்பட்டதும், அதில் நரேந்திர மோடியின் பங்கும் அதிமுக அறியாத ஒன்றல்லவே.
பதிலளிநீக்குமதவெறி பாஜக தமிழகத்தில் சாதிவெறி மற்றும் சந்தர்ப்பவாத கட்சிகளை அணிதிரட்டி கூட்டணி ஒன்றை அமைத்துள்ளதே? இந்த கூட்டணியை அதிமுக விமர்சிக்காதது ஏன்? என்ற கேள்விகளெல்லாம் தமிழக தேர்தல் களத்தில் எழுகின்றன.
இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு அதிமுகவுக்கும் அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கும் உண்டு ஆதரித்த அண்ணனுக்கும் உண்டு.
தமிழகத்தில் இப்பொழுது அரங்கேறியிருக்கும் கூட்டணி ஏற்பாடுகள் அனைத்தும் முன்னமேயே ஜெயலலிதாவும் பா ஜ க வும் பேசி செய்துகொண்ட ரகசிய உடன்பாட்டின் அடிப்படையில் நடந்தவையே. (1.) இரண்டு கம்யூனிஸ்டுகளை அ தி மு க கூட்டணியில் வைத்துக்கொள்வதாக பாவ்லா காட்டி கடைசியில் தொகுதி எண்ணிக்கையில் முரண்டு செய்து கழட்டிவிடுவது. கௌரவம் கருதி தி மு க வுடன் சேரமாட்டார்கள். (2) தி மு க வுடன் கூட்டணி அமைக்காவண்ணம் தே மு தி க ,பா ம க போன்றவைகளை அதிக தொகுதி ஆசைகாட்டி பா ஜ க கூட்டணிக்கு இழுப்பது. இதனால் ஜெயலலிதாவுக்கு எதிரான ஓட்டுகள் சிதறி பிரிந்துவிடும். பெயருக்காக பா ஜ க வும் குறைந்த எண்ணிக்கையுடன் போட்டியிடுவது. (3) அ தி மு க அதிக தொகுதிகளில் வெற்றிபெற பா ஜ க உதவி செய்வது. (4)தேர்தலுக்குப்பின் பா ஜ க வுக்கு ஆதரவு கொடுத்து ஆட்சியில் அங்கம் வகிக்க வழிகோலுவது.
பதிலளிநீக்கு