திருமாந்துறை சுங்கச் சாவடி பகுதியில் நேற்று உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 46 ஆயிரம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதி முறைகள் பெரம்பலூர் மாவட்டத்தில் முறையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி நடத்தை விதி முறைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பறக்கும் படையினர் அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ரூ.1 லட்சத்து 46ஆயிரம் பறிமுதல்
அந்த வகையில் நேற்று பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கான பறக்கும் படை தாசில்தார் செல்வராஜ் தலைமையிலான குழுவினர் திருமாந்துறை சுங்கச்சாவடி பகுதியில் சோதனையில் ஈடு பட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த தொழுதூரில் இரும்புகடை வியாபாரம் செய்து வரும் சையது முஸ்தபா மகன் அபிபுல்லா உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1 லட்சத்து 46 ஆயிரத்தை கொண்டு சென் றது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து அவரிடமிருந்து ரூ.1 லட்சத்து 46 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
நன்றி தினத்தந்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக