Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 13 மார்ச், 2014

அடுத்த கட்டத்தை நோக்கி நமது இணையதளம் - தலைமை நிருபர்.

புகழ் அனைத்தும் ஆற்றல் மிக்கவனும் வெற்றிக்கு நிரந்தர சொந்தக்காரனுமாகிய அல்லாஹ் ஒருவனுக்கே!

அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிற வேறொன்றும் நிச்சயமாக எங்களை அணுகாது. அவன்தான் எங்களுடைய இறைவன்” என்று நீங்கள் கூறுங்கள். நம்பிக்கையாளர்கள் அனைவரும் அல்லாஹ்விடமே பொருப்பை ஒப்படைக்கவும்
அத்தவ்பா 51.

நமது தளம் 2 ஆண்டுகள் கடந்து அல்லாஹ்வின் பேர் உதவியால் 3 ஆம் ஆண்டு மார்ச் 13 ல் அடியெடுத்து வைப்பதினால் நமது ஆசிரியர் குடும்பம் ஒன்று கூடி, நமது கடந்த கால நிகழ்வுகளை அலசி ஆராயப்பட்டது. மேலும் வரக்கூடிய காலங்களில் நாம் எப்படி எதைநோக்கி பயணிக்க வேண்டும் என்று தலைமை நிருபர் சிற்றுரையாற்றினார்.

மஹரிப் தொழுகைக்கு பிறகு நமது தலைமை நிருபர் கடந்த 2 ஆண்டுகள் காலமாக பொதுமக்கள் மனதில் எழக்கூடிய கருத்திற்கு அளித்த பிரத்தியோக விளக்கம்.

கேள்வி :- நமதூர் செய்தி தொடங்க காரணமென்ன?
தலைமை நிருபர் :- 18 ஆம் நூற்றாண்டில் கடற்படையும் 19 ஆம் நூற்றாண்டில் விமானப்படையும் யார் கையில் இருந்ததோ அவர்கள் தாம் உலகத்தை தம் கட்டுக்கோப்பில் வைத்திருந்தனர். ஆனால் இந்த நவீன நூற்றாண்டில் யார் கையில் மீடியா உள்ளதோ! அவர்கள் தான் உலகத்தை தீர்மானித்து கொண்டுள்ளனர்.
அதன் தாக்கத்தின் அடிப்படையில் தான் நமதூருக்கென்று இதன் அவசியத்தை கருதி ஒரு சில கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வளர்களால் ஆரம்பிக்கப்பட்டதுதான் நமது இணையதளம்.

கேள்வி :- தளத்தின் நோக்கம் என்ன ?
தலைமை நிருபர் :- இந்த தளத்தின் நோக்கம் மிக்க வெளிப்படையானதே ! நமதூரில் நடந்த, நடந்து கொண்டிருக்கின்ற சம்பவங்களை மக்கள் மன்றத்தில் தெளிவு படுத்துவதே ஆகும்.

கேள்வி :- ஜமாத்திடம் என்ன எதிர்பார்கிறீர்கள் ?
தலைமை நிருபர் :- ஜமாத்கதிடம் நாங்கள் எதிர்பார்ப்பது இனிப்பான செய்தியல்ல ! மாறாக செயல்களையே எதிர் நோக்குகிறோம்.

கேள்வி :- இந்த தளத்தின் மூலம் நமது மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்.?
தலைமை நிருபர் :- அரசியல் அமைப்புச்சட்டம் 15(1) அரசு எந்த ஒரு குடிமகனையும் மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் அல்லது வேறு எந்த காரணத்தின் பேரிலும் வேறுபடுத்தி பார்க்க கூடாது என்று கூறுகின்றது.
ஆனால் நமதூரின் முன்னேற்றம் பற்றிய கவளை நமதூரில் உள்ள பெருவாரியான மக்களால் பறவளாக பேசப்படுகிறதே தவிர, ஊர் முன்னேற்ற எந்த ஒரு முயற்சியும் இல்லாமல், போலி கொள்கைகள் மற்றும் அதனை சார்ந்த சித்தாந்தங்கள் ரீதியாக பிரிந்தே உள்ளனர்.
இந்நிலையில் நமதூர் வளர்ச்சி முன்னேற்றத்தையே முன்வைக்கிறது நமது இனையதளம்.
ஆக நம்முடைய தளம் ஊரை முன்னேற்ற தொலைநோக்கு பார்வையுடன் எல்லா இயக்கங்களையும், ஜமாத்துக்களையும் மற்றும் வெளிநாட்டில் உள்ள நமதூர் மக்களையும் ஏனைய அனைத்து ஊர் சமுதாயத்தையும் அரவணைத்து வருகிறோம்.
இப்படிப்பட்ட உன்னத கொள்கையுடைய நமது தளத்தை முட்டுக்கட்டை ஏற்படுத்துவது மூலம் நமதூர் ஒட்டு மொத்த வளர்ச்சியை தடுக்கும் சூழ்சியாகவே நாங்கள் கருதுகிறோம். ஏனென்றால் அவர்கள் நமது தளத்தின் மீது வைக்க கூடிய குற்றச்சாட்டுக்கள் போலியானவையே!

கேள்வி :- பேரூராட்சி பற்றி உங்கள் கருத்து ?
தலைமை நிருபர் :- கடந்த கால சம்பவங்கள் கசப்பான மன நிலையை நமக்குள் ஏற்படுத்தினாலும் அதை மாற்றி காட்டவேண்டிய பொருப்பு பேரூராட்சிக்கு உள்ளது.

கேள்வி :- கடந்த காலங்களில் உங்கள் மீது கட்டவிழ்த்து வரும் குற்றச்சாட்டைப்பற்றி ?
தலைமை நிருபர் :- கடந்த 2 ஆண்டுகள் காலமாக நமதூரில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் பற்றி அறிந்த அல்லாஹ் போதுமானவன். ஒருசிலர் தங்களின் சுயலாபத்திற்காகவும் மற்றும் அவர்களை சார்ந்த கூட்டத்திற்காகவும் தற்பொழுது நமது தளத்திற்கு எதிராக விளையாடுகிறார்கள். இதை பெருவாரியான நடுநிலை மக்களை முகம் சுழிக்கும் விதத்தில் ஆற்படுத்தியுள்ளது. இருப்பினும் நாம் அவர்களை பிரித்து பார்க்காமல் அன்பைதான் வெளிபடுத்தி வருகிறோம்.

கேள்வி :- இது போன்ற குற்றச்சாட்டுகளை கூறும் பொழுது உங்கள் மனநிலை எவ்வாறு உள்ளது?
தலைமை நிருபர் :- இது போன்ற குற்றச்சாட்டுக்களை பார்த்த உடன் முதலில் நாங்கள் மிகவும் ஆச்சரியப்பட்டோம் கடந்த 2 வருடங்களாக முறையான, நேர்மையான இதழியலை ( Responsible Journalism  ) நடத்தி வருகிறோம். இது ஆட்சேபனையான எந்த ஒரு கருத்தையும் நாம் வெளியிட்டது கிடையாது. அப்படி வெளியிட்டுள்ள தகவல்களை தவறானது என்று வரும் குற்றச்சாட்டை எங்களால் நிருபனம் செய்யமுடியாத பட்சத்தில் மன்னிப்பையும் கூறியிருந்தோம்.
ஏனெனில் எங்களுடைய எழுத்திற்கு நாங்களே முழு பொருப்பு.

கேள்வி :- உங்களின் எதிர்கால திட்டம்.
தலைமை நிருபர் :- கடந்த காலங்களில் நமதூர் மக்களிடம் எங்களால் முடிந்த தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய செய்தியை கொடுத்து இந்த ஊடகப்பணியை செய்து வருகிறோம். நமதூரில் உள்ள தளத்தில் ( இதழியல் ) குறித்த ஒரு புதிய பரிமான பாதையை வகுத்துள்ளோம்.
ஆனாம் இவற்றை எல்லாம் செய்வதற்கு போதிய நிருபர்களும், மற்றும நிதி இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இதுவரை பயணித்த வரையில் நாங்கள் அல்லாஹ்வின் உதவியால் வெற்றியை கண்டுள்ளோம் ( அல்ஹம்துலில்லாஹ்)
எனவே நமதூர் மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மேற்கொண்டு முன்னேற்றம் அடைவதை குறித்து சிந்திப்போம். இன்ஷா அல்லாஹ்…

இருதியாக உங்களுடைய முகவரியை வெளியிடலாமே என்று அனைத்து தரப்பிலிருந்தும் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு, நமது தலைமை புண் முறுவளோடு சலாம் கூறி விடை பெற்றார்.

குழு ஒருங்கிளைப்பாளர்.
நமது நிருபர்.

6 கருத்துகள்:

  1. நீங்கள் ஏன் நேரடி ஒளி பரப்பு செய்ய வில்லை...
    மேலும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி செயல்படவும். மென்மேலும் வளர துவா செய்கிறேன்...

    பதிலளிநீக்கு
  2. 89.5 fm யில் live வா நான் கேட்டேன் நீங்கள் கேட்கவில்லை என்றால் தலமை பொருப்பாகாது

    பதிலளிநீக்கு
  3. neengal TNTJ இயக்கத்திற்கு எதிராக செயல் படுகிறீர்கள் என்பதை பல தருணங்களில் நிரூபணமாகியுள்ளது. TNTJ வுக்கு எதிரான கருத்துக்களுக்கு விளக்கம் தருவதை உடனடியாக நீக்கிவிடுகிரீர்கள். இதற்க்கான ஆதாரத்தை 12-03-2014 அன்று lbkcorner@gmail.com என்ற மினஞ்சலுக்கு அனுப்பினேன். இதுவரை அதுபற்றி செய்தியில்லை.

    திரும்ப திரும்ப பழைய பல்லவிதான் பாடுகிறீர்கள் தாங்கள் தங்கள் கருத்துகளை பதிய பட்டபின் வெளியிட்டனவா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அப்படி அச்செய்தி வெளியிடாத பச்சத்தில் வலை பகுதி கோளாறு என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

    என்னுடைய இந்த கருத்தை உடனடியாக நீக்கிவிடாமல் அல்லாவுக்கு பயந்து நடவடிக்கை எடுங்கள். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கு அறிந்தவன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களை காட்டிலும் நாங்கள் இமானிய சிந்தனையிலும் தக்வாவிலும் உங்கள் கண்னோட்டத்திற்கு தரக்குரைவாகவே காணப்படுகிறோம்.

      நாங்கள் எவ்வளவுதான் விளக்கம் தந்தாலும், அதை உங்கள் உள்ளம் ஏற்றுக்கொள்ளாது.

      அல்லாஹ்வின் மீது நாம் சந்திக்க உள்ளோம் அப்பொழுது தெரியும் நாங்கள் உங்கள் கருத்தை அகற்றினோமா, இதன் மூலம் நாங்கள் பொய்யர்களா என்று. (நம்முடைய செயல்கள் அப்பொழுது வெளிப்படும். இன்ஷா அல்லாஹ்)

      எங்கள் மீது சமுதாயத்தின் மத்தியில் பொய்யர்கள் என்று வீன் பழி சுமத்தியதன் மூலம் எங்கள் மணம் மீண்டு வருவதற்குள், திரும்பவும் என்னுடைய கமான்டை அழிக்காதீர்கள் என்று கூறிகிறீர்கள். இப்படி இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு நாங்கள் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

      நன்றாக உங்களுடைய எழுத்தை வேறு கணிபொறியில் திறந்து பார்க்கவும் உங்களுடைய FONT Support செய்யவில்லை. அது Support ஆகும் பட்சத்தில் உங்களால் முடிந்தால் முதலில் அதை Command Box-ல் வெளியிட்டு காட்டவும்.
      முடிவாக நாங்கள் உங்கள் கமாண்டை வெளியிட்டபின் அழித்தோம் என்று அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு சொல்லுங்கள். அப்படி நாங்கள் அழித்தோம் என்றால் எங்கள் கைகள் நாசமாகிவிடும். அப்படி இல்லை என்றால்?
      அவசரப்பட்டு யார்மீதும் பழிகூறாதீர்கள்......

      நீக்கு
    2. intha ulaga mahaa adimethavigalin vimarsanaththukku bathil alikkaatheerkal, en endral avarkal thanglalai 100% meyyarkal endrum matra anaivaraiyum poyyarkal endrum koorubavarkal.aduthavarkalin kuraikalai thondi thondiye iyakkam valarkka virumbuvarkal.Ivarkalukku jaalra adithaal nalla thalam. ivarkalin thavarukalai vimarsanam cheythaal ,avarkal poyyarkal,valikedarkal,munafikkukal,kaafikal. adanaal ivarkalin vimarsanangalai thooki kuppaiyil pottuvittu, ungal paniyai thodara vaalthukkal. vassalaam.

      நீக்கு
  4. அன்புடையீர் கருணாநிதி அவர்கள் போல் பதில் அளிக்காமல் ஒரு பாரா அல்லது இரண்டு பாராவில் தாங்கள் நோக்கத்தை விளக்கி இருக்கலாம். TNTJ அமைப்பினருக்கு ஒரு வேண்டுகோள் தாங்கள் எதிரான கருத்துக்கு விளக்கம் அளிக்க தங்கள் பல யுக்திகள் வைத்து உள்ளீர்கள். தாங்கள் ஆதரவு பத்திரிக்கைகளில் பக்கம் பக்கமாக குறை சொன்னவர்களை விமர்சித்து மகிழ்:சி அடையலாம். இன்டர்நெட்டில் ஆன்லைன் PJ சைட்டில் வருத்து எடுக்கலாம். பிட் notice அடித்து ஒரு பள்ளிவாசல் விடாமல் விநியோகம் செய்யிலாம். தெருமுனை பிரச்சாரம் செய்து உங்கள் கொள்கைகளை நிலை Nattalaam. எனவே இந்த சிறிய பத்திரிக்கையை விட்டு விடுங்கள் paavam.

    பதிலளிநீக்கு