பொதுவாக ஒரு
சம்பவத்தையே அல்லது மக்களுக்கு ஏற்படும் ஓர் இடையுரையே நேரில் பார்த்த ஒருவர்
நடந்த சம்பவங்களை அச்சத்துடனும் திகிலுடனும் நம்முடன் பகிர்ந்து கொள்ளும்
சந்தர்ப்பங்களில் நாமும் அதே உணர்வுகளுடன் நடந்த சம்பத்தை கேட்பதுடன்
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு
நீதி நிறுத்தப்பட வேண்டும் என்று ஒரு கொதி நிலைக்கு தள்ளப்படுவோம். இது தான்
சாதாரண மனிதனின் இயல்பு. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வை தான் நாம் கடந்த நாட்களில்
நமதூர் பேரூராட்சியின் பணிகளின் மக்கள் கருத்து !? என்ற தலைப்பில் நமது தளத்தில்
வெளியிட்டு அந்த பகுதி மக்கள் படும் துன்பத்தை சுட்டிகாட்டியிருந்தோம்.
ஆனால், இது ஒரு வீட்டிற்கோ அல்லது தெருவுக்கு சம்பந்தப்பட்டது அல்ல. மாறாக, அந்த ஒரு வார காலம் இதன் விளைவாக அந்த
பகுதி மக்கள் பட்ட துன்பத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
இதை பற்றி இரண்டு சமூக சிந்தனை கொண்ட இளைஞர்கள் நடத்திய உரையாடல் (கற்பனையே) ...
இரண்டு நண்பர்கள் போன் உரையாடல்
ரீங்.. ரீங்.. ரீங்..
ஹாஜி: ஹலோ.. அஸ்ஸலாமு அலைக்கும்...
ஹாஜா: வா அலைக்கும் ஸாலம்.. என்னா ஹாஜி நல்லா இருகையா மாப்ளை..
ஹாஜி: அல்ஹாம்துல்லாஹ்... நல்லா இருகேன் டா மாப்ளை..
ஹாஜா: என்னாடா ஆளே பாக்க முடியலே...
ஹாஜி: அமாடா மாப்ளை.. தெருளே சாகடைக்கு பாள்ளம் பருச்சு வச்டாங்க டா... அதனால பைய்க்கெ வெளிய எடுக்க முடியளே டா..!
அதான் வெளிய எங்கும் போகளே மாப்ளை..
ஹாஜா: அதான் ஒங்க தெருளே பள்ளாம் பரிச்சு வச்சி இருக்காங்ளா?
ஹாஜி: அமாடா மாப்ளை.. வீடாளாம் ஒரே மண்னு... புலுதி.. இதால குழந்தைகளும், பெறியவர்களும், ரொம்ம கஸ்ட படுராங்க டா மாப்ளை..
ஹாஜா: அமாடா எல்லாம் நல்லதுக்குதன் கூடிய சீகரம் சாக்கடைக்கு ஒரு வழி பிரக்கும் டா...
ஹாஜி: போடா!! நன் நல்லா காங்ரேட்ள கட்டி மேல கவர் போட்டு பக்காவா கட்டுவாங்கன்டு நான் நனச்சேண் டா அனால் 9” PVC பைப் போட்டு மூடுராங்க டா மாப்ளை..
ஹாஜா: டே!! அதுக்கு ஏன்? டா பெரியப் பள்ளமா? தெருவையே அடச்ச மாதிரி பரிக்கனும்.
1. 9” PVC அங்கே இருக்குற வீட்டு சாக்கடை தண்ணிக்குஇந்த பைப் பத்தமா? டா...
2.அப்பறம் வண்டி எதாச்சம் பொச்சுண்டா PVC பைப் ஒடன்ஞ்சுரமே!
3.நளைக்கு எதாசம் அடைப்பு ஏற்பட்டால் என்ன? செய்வாங்க.
4.தெருளெ யாராவது குடிணீர் குழாக்கு கனைக்சன் கொடுக்கத்துக்கு பதிலா சாக்கடை குழாய்லா கொடுத்துட்டா?
ஹாஜி: சரியா சொல்லுர டா? இத தட்டிகேட்க யாரும் முன்வர மாடாங்களாடு இருக்கேன் டா மாப்ளை..
ஹாஜா: ஹாஜி இதாவது செய்ராங்கன்டு சந்தொசம் படுடா என்டா எளைக்சன் வந்துடுச்சுலா அதான்..
ஹாஜி: சரி ஜமாலி நகர் சாக்கடைக்கு என்னாப்பன்ன போறாங்களா ???
ஹாஜா: டேய் மாப்ளை.. டாப்பிக் வேறமாதிரி பொகுது... சரி பாங்கு சொல்லிட்டாகொ நான் தொளப்போரேன். அஸ்ஸலாமு அலைக்கும்...
ஹாஜி: வா அலைக்கும் ஸாலம்..
நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக