தீர்வை தேடி அழையும் பொதுமக்கள்
இன்று நமதூர் ஜெய்லானி தெருவில் சிலின்டருக்காக மக்கள் கூட்டம் கட்டுக்குள் அடங்காத நிலை காணப்பட்டது. ஒரே இடத்தில் நான்கு வண்டி சிலின்டர் வினியோகம்.
தட்டுப்பாடா அல்லது தரமறுப்பா?
மக்களின் குறையா? அல்லது விநியோகஸ்தர்களின் பிழையா?
இதற்கு முன்பும் நடந்தது, இப்பவும் நடக்கிறது, இனியும் நடக்கும்!
காரணம் நமது நிலையை நாமே மாற்றிக்கொள்ளாத வரை இறைவனும் நம்முடைய நிலையை மாற்றபோவதும்
இல்லை!
எத்தனை ஜமாத்துக்கள் மாறினாலும் எத்தனை பேரூராட்சி தலைவர்கள் வந்தாலும்
இன்னும் எத்தனை இயக்கங்கள் உருவாகினாலும் சரியான முறையில் ஒற்றுமையுடன் ஒன்றுகலந்து
நாம் நம்முடைய குறை நிறைகளை தீர்க்க ஆலோசித்து முடிவு எடுக்காத வரை எந்த ஒரு பிரச்ணைக்கும்
நாம் நம்மால் தீர்வு காண முடியாது என்பதுதான் எழுதப்பட்ட விதி.
பொதுவான பிரச்சணைகள் என்று வந்தால், விரல் விட்டு என்னக்கூடிய அளவில்
உள்ளவர்கள் மட்டும் தான் ஆதாயம் அடைகின்றனர். மற்றவர்கள் மவுனப்பார்வையாளர்களாகவே இருந்துவருகின்றனர்.
இதில் நடுவில் சதுரங்கம் ஆடுபவர்கள் சில பொருப்பில் உள்ளவர்களும் அடங்குவர். இதில்
எந்த இயக்கத்தில் உள்ளவர்களுக்கும் ஜமாத்தில் உள்ளவர்களுக்கும் விதிவிலக்கு அல்ல!
ஒற்றுமை என்று பேசக்கூடியவர்களும் சரி, எந்த ஒரு காரியத்திலும் தம்மை
தனிமைப்படுத்தி காட்டக்கூடிய அமைப்பாக இருந்தாலும் சரி, முழு வீச்சில் எதற்கும் ஓர்
நிரந்தர தீர்வை அவர்களால் காண முடியவில்லை என்பதுதான் உண்மை! காரணம் அவர்களின் மெத்தனப்போக்கோ?
அல்லது மற்றவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்ற நிலையோ?
இதற்கு கடந்த 2 அல்லது 3 ஆண்டுகால நமதூர் பொதுப்பிரச்சணையை புரட்டிப்பார்த்தாலே
போதுமானது.
ஹந்திரி வரி வசுலித்து சோறு ஆக்குதல், திருமாணம் மற்றும் நிச்சையதார்த்தம்
நடத்திவைத்தல் போற்ற பணிகளில் மட்டுமே குறிக்கோளாக இல்லாமல், பொதுப்பிரச்சணைக்கும்
தீர்க்க ஆலோசித்து முடிவை எடுக்க வேண்டும் என்பதுதான் பாமர மக்களின் எதிர்பார்ப்பாக
உள்ளது.
தம் மக்கள் அழிவிலேதான் எதிரிகளின் வளர்ச்சி இருக்கிறது என்றால்
அது எந்த இனமானாளும் ஒழித்து கட்டுவதுதான் நல்ல தலைவர்களின் பண்பு. அந்த எதிரி பாதுகாப்புகருதி
பாதாளத்தில் இருந்தாலும் சரியே.
நமது நிருபர்.
SARIYA SONNIGA..,
பதிலளிநீக்குஹந்திரி வரி வசுலித்து சோறு ஆக்குதல், திருமாணம் மற்றும் நிச்சையதார்த்தம் நடத்திவைத்தல் போற்ற பணிகளில் மட்டுமே குறிக்கோளாக இல்லாமல், பொதுப்பிரச்சணைக்கும் தீர்க்க ஆலோசித்து முடிவை எடுக்க வேண்டும் என்பதுதான் பாமர மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது - Nirubar avarkale pothu prichannaiku teerrvu kana jamatargal edukum mudiyuku anaivar kalum (including orai vitu otikivaikum mudivu) katu padu vargal enra satiyatai neelai natungal. Atarkaparm jamatargalidam itu patri pesalam. tevai illamal abdul kader kum amasaikum modichu podathirgal.
பதிலளிநீக்கு