Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 2 டிசம்பர், 2013

மனைவிக்கு 15 நாள்! கள்ளக் காதலிக்கு 15 நாள்! – லோக் அதாலத்தின் தீர்ப்பு!

முறைகேடான உறவுகள் பெருகி வரும் வேளையில் அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகளைக் குறித்து தள்ளாடும் இந்தியாவின் நீதிமன்றங்கள் விசித்திரமான தீர்ப்புகளை அறிவித்து வருகின்றன.
மத்திய பிரதேச மாநிலம் ஓம்கார் ஈஸ்வர் என்ற பகுதியைச் சார்ந்த மின்சார துறையில் இருந்து ஓய்வு பெற்ற நபர், அதிகமான நேரத்தை கள்ளக் காதலியுடன் செலவழிப்பதாக குற்றம் சாட்டி நீதிமன்றத்தை அணுகினார் அவர் மனைவி.


கடந்த 2 ஆண்டுகளாக மனைவி இவருடன் வாழ்ந்துள்ளார்.அவரை கணவர் கவனிக்கவில்லை என்பது மனைவியின்புகார்.இவ்வழக்கின் விசாரணையின் இறுதியில் நீதிபதி கங்காசரண் துபை அளித்ததீர்ப்பில் கூறியது:பரஸ்பர உடன்பாட்டின் அடிப்படையில் இருவரும் தாங்கள்விரும்பும் ஆணுடன் ஒரே வீட்டில் வசிக்கலாம்.மனைவியும், கள்ளக்காதலியும்கணவருடன் 15 நாட்கள் வீதம் ஒதுக்கலாம்.அதேவேளையில் வீட்டின்சொத்துக்களில் இருவருக்கும் சம உரிமை உண்டு.வழக்கில் சம்பந்தப்பட்டநபரின்(கணவர்) வீட்டில் 3 அறைகள் உள்ளன.அதில் ஒன்றை மனைவிக்கும்,இன்னொன்றை கள்ளக்காதலிக்கும் வழங்கவேண்டும்.மீதமுள்ள ஒரு அறையை இருவரும்பொதுவாக பயன்படுத்தவேண்டும்.இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக