Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 29 ஜூலை, 2014

துபையில் மகிழ்ச்சியாகக் கழிந்த ஈகைத் திருநாள் கொண்டாட்டம்!



காலை 4 மணிக்கு எழுந்து குளித்து மஸ்ஜிதுக்குச் சென்று ஸுப்ஹு தொழுதேன். அப்பொழுதே புழுக்கம் அதிகமாக இருந்தது. மக்களால் மஸ்ஜித் நிரம்பி வழிந்ததால் வெளியில்தான் தொழ வேண்டியதாயிற்று. அப்பொழுதே வியர்வை கொட்ட ஆரம்பித்துவிட்டது.



எப்படி ஈத்கா திடல் சென்று தொழப்போகிறோம் என்று எண்ணினேன். மலைப்பாக இருந்தது. பின்னர் ரூம் வந்து புத்தாடைகள் அணிந்து விட்டு ஈத்கா திடல் நோக்கி நண்பர்களுடன் சென்றேன்.


ஈத்கா மைதானத்தில் ஓரளவுக்கு வெப்பம் இருந்தது. காற்று வீசாமல் கமுக்கமாக இருந்ததால் அத்தனை புத்தாடைகளும் வியர்வையில் தத்தளித்தன. அந்த அதிகாலையிலேயே வெப்பம் 35 டிகிரியைத் தொட்டிருந்தது. நல்ல வேளை. வெயில் அடிக்கவில்லை.


அந்த வெப்பத்திலும், வியர்வையிலும்  மக்கள் தங்கள் ஸ்மார்ட் போன்கள் மூலம் போட்டோ, வீடியோ எடுப்பதை மட்டும் விடவில்லை. சிலர் எழுந்தும், பலர் அமர்ந்தும் காட்சிகளைப் பதிவு செய்துகொண்டிருந்தனர். தொழில்நுட்ப வளர்ச்சியில் காலத்தின் மாற்றம் இது.


முன்பெல்லாம் போட்டோ, வீடியோ எடுக்க வேண்டும் என்றால் இதற்கென்று கேமராவை எடுத்துக் கட்டிக்கொண்டு வரவேண்டும். இப்பொழுது ஸ்மார்ட் போன்கள் வந்தபின் கேமராவை யார் கையிலும் பார்க்க முடியவில்லை. கேமராவுக்கு அஸ்தமன காலம் வந்துவிட்டதையே இது உணர்த்தியது.


இனி பத்திரிகையாளர்கள், தொழில்முறை போட்டோகிராஃபர்கள், வீடியோகிராஃபர்களிடம் மட்டும்தான் நவீன வசதிகளைக் கொண்ட கேமராக்களை பார்க்க முடியும்


சிறிது நேரத்தில் கொஞ்சம் காற்றும் வீசியதால் ஆசுவாசமாக இருந்தது. சரியாக 6.05 மணிக்கு தொழுகை ஆரம்பமானது. தொழுகை முடிந்ததும் குத்பா பிரசங்கம். வழக்கம் போல் அரபியில் நடப்பதால் யாருக்கும் எதுவும் புரியவில்லை. பாதி பேர் வெப்பம் தாளாமல் எழுந்து நின்றார்கள். கொஞ்சம் பேர் மைதானத்தை விட்டு குத்பா முடியும் முன்பே எஸ்கேப் ஆனார்கள்.


ஒரு வழியாக குத்பா முடிந்து, நமதூர் மக்களை சந்திக்கும் ஆவலில் ஈத்கா திடலுக்கு அங்கும் இங்கும் சுற்றி திரிந்தோம். என் நண்பர்கள் எனக்கு தெரிந்த அத்தனை பேருக்கும் முடிந்தவரை ஸலாமும், பெருநாள் வாழ்த்துகளையும் சொல்லி மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டேன்.

உதவி முகநூலிருந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக