Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 30 ஜூன், 2014

குடும்ப உறவுகளை சீரமைப்போம்!

குடும்ப உறவுகளை சீரமைப்போம்!
குடும்பம் என்ற அமைப்பு இன்று பலவீனமடைந்து வருவதை நாம் அனைவரும் அறிவோம். கணவன் மனைவி சச்சரவுகள், உறவுகளை துண்டித்தல், பெற்றோரை பேணா திருத்தல், சிறு விஷயங்களைக் காரணம் காட்டி செய்யப்படும் மண முறிவுகள், பெற்றோரை மதிக்காத குழந்தைகள், குழந்தைகளின் உரிமைகளை பேணாதா பெற்றோர்கள் இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
இத்தகைய பிரச்சனைக்கு பிரதான காரணம், அதிகரித்து வரும் பணிச் சுமைதான் என்கிறது ஒரு ஆய்வு. பணிச்சுமை என்றால் குடும்பத்தையும், குழந்தைகளையும் பராமரிக்கும் பணிகள் அல்ல.
மாறாக உலக ரீதியான தேவைகளை பெருக்கிக்கொள்வதிலும், என்ன விலை கொடுத்தேனும் பொருளீட்டிட வேண்டும் என்ற அசாதாரண சிந்தனையும்தான் காரணம் என்கின்றார்கள் ஆய்வாளர்கள்.
இதன் விளைவாக முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மனநல ஆலோசனை மையங்களை நாடுவோரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பின் தான் இது போன்ற அசாதாரண நிகழ்வுகள் அதிகரித்து உள்ளது.
நம்முடைய வாழ்க்கை முறை எப்படி அமைந்துள்ளது என்பதை பிரிட்டனை சேர்ந்த சன்வாரி இப்படி பதிவு செய்கிறார், "நம்முடைய அலுவல்கள் நம்மை இப்படி "பிஸி" ஆக்கவில்லை, மாறாக, நாம் சார்ந்திருக்கும் தகவல் தொழில் நுட்பம் தான் நம்மை இப்படி ஆக்கிவிட்டது. எந்த பொருட்கள் நம்முடைய வேலை பளுவை குறைப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்டதோ அந்த பொருட்கள் நம்மை இன்று ஆட்டிப்படைத்து வருகின்றது.
ஒரு சில அவசர கடிதப் பரிமாற்றத்திற்காக பயன்படுத்தப்பட்ட மின்னஞ்சல் (இ-மெயில்0 இன்று 24 மணி நேரமும் இணைப்பில் வைத்திருக்க வேண்டிய சூழ்நிலையை ஏற்ப்படுத்தி உள்ளது. நம்முடைய வாகனம் இன்று ஒரு மினி அலுவலகமாக மாறியுள்ளது. எந்த வாகனத்தில் பயணித்துக் கொண்டும் வேலைசெய்வதற்கு ஏற்றவாறு கையடக்க கணினிகளும், ஸ்மார்ட் போன்களும் நம்மை வசப்படுத்தி உள்ளன" என்கின்றார்.
வீட்டிற்குள் வந்தால் லேப்டாப்பில் அலுவலக வேலை, மொபைலில் பேசிக்கொண்டிருக்கும் போது வீட்டில் அபூர்வமாக கண்ட தந்தையை அன்புடன் குழந்தைகள் அழைத்தால் கோபப்படும் தந்தை, தொலைகாட்சி பார்க்கும்போது தாய் அழைத்தால் சிணுங்கும் குழந்தை, தொலைக்காட்சியில் நெடுந்தொடர்கள் பார்க்கும் போது இடையூர் செய்யும் குழந்தை மற்றும் கணவனை கடிந்து கொள்ளும் தாய். இவையனைத்தையும் கையாறு நிலையில் அமைதியுடன் பார்த்துக் கொண்டிருக்கும் முதியவர்கள் என குடும்பத்தின் வசந்தத்தை நம்முடைய கைகளை விட்டும் அகற்றி தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதில் ஒரு தீய சக்தி படிப்படியாக வெற்றி கண்டு வருகிறது.
சுவையாக சமைக்கின்றோம், நன்றாக சாப்பிடுகின்றோம், எண்கள் வாரிசுகள் வீட்டில் சுகவாசியாக வளர்கின்றார்கள், அவர்களை நல்ல பள்ளிக்கூடங்களில் சேர்த்திருக்கின்றோம், சொந்த வீடு, வாகன வசதி என்பது மட்டும் சந்தோசமான குடும்பமாக ஆகிவிடாது. இது மட்டுமே மகிழ்ச்சியையும் இறை திருப்தியையும் பெற்றுக் கொடுத்துவிடாது.
நம்முடைய அன்பு, பாசம், பிரிவு, பந்தம் அனைத்தும் மனிதர்களிடமிருந்து விலகி மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்ட எலக்ட்ரானிக் பொருட்களை நோக்கி மாறிக் கொண்டிருக்கின்றது. நம்முடைய விருப்பங்களுக்கு ஏற்ப மெஷின்கள் செயல்படுவது போன்று, நம்முடைய கட்டளைகளை மெஷின்கள் சிரமேற்று செயல்படுவது போன்று உறவுகளும், மனிதர்களும் செயல்பட வேண்டும் என எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றோம்.
நான், என்னுடைய எனக்கு மட்டுமே என்ற மனநிலை ஒவ்வொருவரிடமும் மேலோங்கி வருகின்றது. இதில் உறவுகள் குறித்தோ, சொந்த பந்தங்களுடன் அளவிலாவது பற்றியோ சிந்திக்கவே நமக்கு நேரமில்லை.
இப்படித் தான் எல்லா குடும்பங்களும் இருந்து கொண்டிருக்கின்றது என்று சொல்லவில்லை. நம்மை அறிந்தோ, அறியாமலோ அதனை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம் அல்லது நாம் பயணிக்க வைக்கப்படுகின்றோம். வீட்டை விட்டு வெளியில் வந்தால் நம்மை சுற்றி இருக்கும் வண்ணமயமான உலகம் சுண்டி இழுக்கும் கார்ப்பரேட் நுகர்வு கலாச்சாரம் எல்லாம் இணைந்து நம்மையும் வேறு ஒரு உலகத்திற்கு இழுத்துச் சென்று கொண்டிருக்கின்றது.
இதற்கு மத்தியில் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கொடுத்த வழிமுறைப்படி உறவுகளை பேணிட, புத்துணர்வூட்டிட அல்லது அதற்கான முயற்சியை விடுமுறை நாட்களை துருப்புச் சீட்டாக பயன்படுத்த வேண்டும்.
பின்varum ஹதீஸ்கள் குடும்ப உறவுகளை பேணுவது குறித்தான முக்கியத்துவத்தை நமக்கு எடுத்துரைக்கின்றது.
யார் குடும்ப உறவுகளை வேண்டுமென்று துண்டித்துள்ளார்களோ அவர்களுடன் அமர்ந்து பிராத்தனைகளில் ஈடுபடுவதை அபூ ஹுரைரா (ரலி) விரும்பியது இல்லை. ஏனெனில் வேண்டுமென்று உறவுகளை துண்டித்தவரின் பாவமானது இறைவனின் அருளை தடுத்துவிடும்.
அபூ ஹுரைரா (ரலி) ஒரு நாள் இரவு சபையில் வைத்து சொன்னார்கள், "உறவுகளை துண்டித்தவர் எவரேனும் நம்மிடம் இருந்தால் எழுந்து சென்று விடவும்" என்றார்கள். அவர்கள் இவ்வாறு மூன்று முறை கூறியும் யாரும் எழுந்து செல்லவில்லை. இறுதியில் ஒருவர் எழுந்து தான் உறவை துண்டித்திருந்த தந்தை வழி வந்த மாமியை காண விரைந்தார். அவரை கண்ட மாமி, "என்னுடைய சகோதரனின் மகனே, என்ன விஷயம் உன்னை இங்கு கொண்டு வந்தது" என விவவினார். இவரொஅ நடந்ததை மாமியாரிடம் தெரிவித்தார். அதற்கு மாமியார், " நீ அபூ ஹுரைரா (ரலி) இடம் சென்று ஏன் அவர் அப்படி கூறினார் என்று கேட்குமாறு பணித்தார்.
அபூ ஹுரைரா (ரலி) விடம் திரும்பிய அவர் ஏன் அவ்வாறு சொன்னீர்கள் என்று வினவ, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் சொன்னார்கள், "நபி (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன் "வெள்ளிக்கிழமைக்கு முந்தைய இரவு, அதாவது ஒவ்வொரு வியாழக்கிழமையும் அந்தி வேளையில் ஆதமுடைய மகன்களின் செயல்கள் அல்லாஹ்விடம் காட்டப்படும், (அதே வேளையில்) உறவுகளை துண்டித்து வாழக்கூடியவரின் செயல்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.
(புகாரி, அல் அதப் அல் முப்ரத்)
மேலும் மற்றுமொரு ஹதீஸில், இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள், "யார் அல்லாஹ்வை அஞ்சியவர்களாக உறவுகளை பேணிக் கொள்கின்றார்களோ அவர்களுடைய வாழ்வு நீட்டிக்கப்படும், அவருடைய செல்வத்தில் அபிவிருத்தி செய்யப்படும், மேலும் அவருடைய குடும்பம் அவரை நேசிக்கும்.
(புகாரி, அல் அதப் அல் முபரத்)
ஒரு சிலர் இப்படி சொல்லலாம். நாம் குடும்ப உறவுகளை பேணி வருகின்றேன். ஆனால், உறவினர்கள் என்னிடம் நல்ல முறையில் நடந்து கொள்வது கிடையாது எனலாம்.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள், "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு சில உறவினர்கள் இருக்கின்றார்கள். அவர்களுடைய உரிமைகளை நான் நிறைவேற்றுகின்றேன். நான் அவர்களுடன் நல்லவிதமாக நடந்துகொள்கின்றேன். அவர்கள் என்னிடம் மோசமாக நடந்து கொள்கின்றார்கள். நான் அவர்களுடன் பொறுமையோடும் சகிப்புத் தன்மையோடும் நடந்து கொள்கின்றேன். அவர்கள் என்னுடன் அறிவீனமாக நடந்து கொள்கிறார்கள்". அதற்க்கு நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள், "நீர் சொல்வதைப் போன்றே அவர்களுடன் நடந்திருந்தால், அது அவர்களின் முகத்தில் கரி பூசுவது போன்றாகும். அல்லாஹ் அவர்களுக்கு எதிராக எப்போதும் உனக்கு வுதவிய வண்ணம் இருப்பான். நீர் இதே பாணியில் நிலைத்திருக்கும் வரை!"
(முஸ்லிம்)
ஆக, நல்ல மகசூல் பெற வேண்டுமெனில் குறிப்பிட்ட கால இடைவெளியில் நிலத்தை உழுது, உரமிட்டு, கலை எடுத்து பயன்படுத்துவது போன்று வறண்டு கிடக்கும் நம்முடைய உள்ளங்களை பண்படுத்த வேண்டும். அதற்கான வாய்ப்பாக நாம் விடுமுறைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். விடுமுறைகளில் நம்முடைய வீடுகளுக்கு விருந்தினர்கள் வருவதும், நாம் விருந்தினர்களாக உறவ்வினர்கள் வீடுகளுக்குச் செல்லும் தருணங்களில் நம்முடைய குழந்தைகளுக்கு உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். பரஸ்பரம் விருந்து நிகழ்சிகளுக்கான தருணங்களை நாம் ஏற்ப்படுத்த வேண்டும். விடுமுறையில் நடக்கும் திருமண நிகழ்ச்சிகள் உறவினர்களை சந்திக்கும் ஒரு நல்ல வாய்ப்பாகும். அத்துடன் நம் வசதிக்கு தகுந்தவாறு உறவுகளுடன் சுற்றுலாவிற்கான திட்டங்களையும் தீட்டி விடுமுறையை கொண்டாட வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள், "மனிதர்கள் அனைவரும் தவறு செய்யக்கூடியவர்கள், அவர்களில் சிறந்தவர் பாவமன்னிப்பு கோருபவர் ஆவர்"
(புகாரி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக