Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 8 ஜூன், 2014

பிரதமர் அலுவலகத்தின் மெளனம் - எழுத்தாளர்கள் எதிர்ப்பு!

மாற்றுக்கருத்துக்களை வெளியிடுவோர் மீது நடைபெறும் தாக்குதல்கள் குறித்து பிரதமர் அலுவலகம் மெளனம் சாதித்துவருவதற்கு பிரபல எழுத்தாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அரசியல் சாசனம் உறுதிச் செய்யும் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கவேண்டும் என்று அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அருணா ராய், ரொமீலா தாப்பர், ஆன்ந்த பட்வர்தன், மல்லிகா சாராபாய், மிருணாள் பாண்டே, ஜயதி கோஷ் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பிரமுகர்கள் பிரதமர் மற்றும் மத்திய-மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுக்கும் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.
அவ்வறிக்கையில் கூறியிருப்பது: தேர்தலில் பா.ஜ.கவின் வெற்றியை பகிர்ந்துகொள்ளாத, ஆதரிக்காதவர்களின் மீது ஒருவாரமாக தாக்குதல் நடக்கிறது.புனேயில் இளைஞரான ஐ.டி அதிகாரியை ஃபேஸ்புக் போஸ்டின் பெயரால் கொல்லப்பட்ட சம்பவம் இதற்கு உதாரணமாகும்.
இரண்டு தசாபதங்களாக அரசியல் கட்சிகள் வித்தியாசம் இல்லாமல் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக தாக்குதல் நடைபெறுகிறது.கன்னட எழுத்தாளர் யு.அனந்தமூர்த்திக்கு கராச்சிக்கு டிக்கெட் வாங்கி அனுப்பியது மற்றொரு ஆதாரமாகும்.கர்நாடகா மாநிலம் பட்கலில் ஸெய்யது வக்காஸ் மற்றும் அவரது நான்கு நண்பர்கள் கைதுச் செய்யப்பட காரணம் மோடி அரசின் தேர்தல் முழக்கத்தை சித்தரித்து செய்தி அனுப்பியதாகும்.கருத்து சுதந்திரத்தை வன்முறையால் எதிர்கொள்ளக் கூடாது.அமைதியான கருத்து பரிமாற்றங்கள் தேவை.
கர்நாடகாவிலும், கோவாவிலும் நடந்த கைது நடவடிக்கைகளுக்கு வாரண்ட் இல்லை என்பதை காவல்துறையினரே ஊடகங்களிடம் தெரிவித்தனர்.எனினும், பிரதமர் அலுவலகம் இதுக்குறித்து மெளனம் சாதித்து வருகிறது.அச்சமும், பாரபட்சமில்லாத கருத்துக்களையும், சிந்தனைகளையும் வெளியிட அரசியல் சாசனம் அளிக்கும் சுதந்திரம் கிடைக்கவேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முகநூலிருந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக