Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 23 ஜூன், 2014

கனவாகிப்போன பெரம்பலூர் சிறப்பு பொருளாதார மண்டலம்!

கனவாகிப்போன பெரம்பலூர் சிறப்பு பொருளாதார மண்டலம்!

சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காக கையகப்படுத்தப்பட்டு 7ஆண்டுகளாக தரிசாக போடப்பட்டுள்ள 3 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் திரும்ப ஒப்படைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் எழுந்துள்ளது.
கடந்த திமுக ஆட்சியில், தமிழகத்தில் மட்டும் 7இடங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக் கப்பட்டுள்ளன. தமிழக அளவில் குறிப்பிட்ட இடங்களில், அதுவும் வளர்ச்சியடைந்த மாவட்டங்களில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பொரு ளாதார மண்டலம் வறட்சியான மாவட்டமென பெயரெடுத்த பெரம்பலூரிலும் அமைக்கப்படும் என்று மத்திய மாநிலஅரசுகள் முடிவெடுக்க முக்கியக் காரணம் கடந்த திமுக அரசுதான்.

இதற்கென மாவட்ட வருவாய் அதிகாரியாக நாராயணன் என்பவர் நியமிக்கப்பட்டு அவருக்குக்கீழ் தாசில்தார் நிலையிலுள்ள 14பேர்கொண்ட குழுஅமைக்கப் பட்டது. மேலும் அப்போதிருந்த கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கென தனிப்பிரிவு தொடங்கப்பட்டது. மத்திய அரசால் வகுக்கப்பட்ட திட்டமாக இருப்பினும், தமிழ்நாடுஅரசின் தொழில்வளர்ச்சி நிறுவனமான டிட்கோ பரிந்துரைத்த தனியார்அமைப்புதான் திட்டத்திற்கான பெரும்பகுதி நிலங்களை கையகப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. திட்டத்திற்காக குன்னம் தாலுகாவில் லப்பைக்குடிக்காடு பெண்ணகோணம் திருமாந்துறை மற்றும் வேப்பந்தட்டை தாலுகாவில் அயன்பேரையூர், எறையூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பகுதிகள் தேர்வுசெய்யப்பட்டன. இப்பகுதியில் தனியார் நிறுவனம் சார்பாக 2,800 ஏக்கர்நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அரசின் சார்பாக சுமார் 100 ஏக்கர்நிலம் கையப்படுத்தும்பணி நடைபெற்றது. மத்தியமாநில அரசுகளின் கூட்டு முயற்சியால் தொடங்கப்பட்ட இத்திட்டப்பணி, ஆட்சி மாற்றங்களுக்குப் பிறகு அநாதை யாக கேட்பாரற்று கிடக்கிறது. முப்போகம் விளையக்கூடிய இந்த விளைநிலங்கள் தற்போது தரிசாகக் கிடக்கின்றன.2010வரை டிஆர்ஓ நாராயணன் உள்பட 3டிஆர்ஓக்கள் நியமனத்திற்குப்பிறகு வேறுயாரும் இத்திட்ட அதிகாரிகளாக நியமிக்கப்படவில்லை. 14குழுக்களாக செயல்பட்டு வந்த நிலம் கையப்படுத்தும்பிரிவு தற்போது செயல்படவில்லை.

இதனால் சிறப்புப் பொருளாதார மண்டலம் குறித்த கனவு படிப்படியாகத் தகர்ந்து போனது. நிலத்தை கொடுத்தவர்களுக்கும், திட்டத் தால் புதிய வேலைவாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கும் தலையில் இடி விழுந்த நிலைதான் ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தின் பெருவளர்ச்சியை முடக்கிப்போட்ட சிறப்புப் பொரு ளாதார மண்டலத் தின் நிலைகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கேள்வியெழுப்பினால், நிலத்தை கையகப்படுத்திய தனியார் நிறுவனம் பெரும் நஷ்டத்தில் உள்ளதாக வெப் சைட்டில் போடப்பட்டுள்ளது. இனி மேல் அந்தநிறுவனத்தால் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்ற சம்மந்தமில்லாத பதிலே கிடைக்கிறது. திட்டத்திற்காக கேட் டுப் பெறப் பட்ட நிலங்கள் மாவட்ட நிர்வாகத்தின் மீதிருந்த நம்பிக்கையால்தான் விவசாயிகளால் வழங்கப்பட்டது. தற்போது திட்டம் செயல்படுத்தப்படாத நிலையில் வாங்கிய நிலத்தை உடனடியாக மாவட்ட நிர்வாகமே பெற்றுத்தரவேண்டும், அல்லது தனியார் நிறுவனத் திடமிருந்து தற்போதுள்ள அரசாவது கூடுதலாக இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

1 கருத்து:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    அன்பு சகோதரர்களே

    சிறப்பு பொருளாதர மண்டலத்திற்கு நிலத்திற்காக பணம் பெற்றவர்கள் சரி, நிலத்திற்கு நிலம் தருவதாய் வாக்குறுதி வழங்கப்பட்டவர்கள் அனைவருக்கும் நிலம் வழங்கப்பட்டதா? என்பதை அன்பு சகோதரர்கள் அல்லது வலைதள பொருப்பாளர்(நமதூர் செய்திகள்) தெரியபடுத்தவும்/ பதிவுசெய்யவும். ஏனெனில் நிலம் கொடுத்தவர்களில் ஒருவனான எனக்கு இதுவரை கிடைக்கவில்லை.

    ஜஜாக்குமுல்லா கைரன்

    நட்புடனும்,
    அக்கறையுடனும்

    ஹாஜி தஸ்தகீர்.

    பதிலளிநீக்கு