Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 4 ஜூன், 2014

ஆருயிர் நண்பனின் அன்பில் நஞ்சை வளர்த்தது யார் ???? – இஸ்ஹாக்

நீண்ட நாட்களுக்கு பிறகு என்னுடைய மாற்று மத நண்பர் ஒருவரை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நீண்ட நாள் நட்பல்லவா… தொடர்ந்தது கருத்து பறிமாற்றம். இளம் வயது முதல் நாங்கள் இருவரும் ஃபாசிச பயங்கரவாதத்திற்கு எதிராக பயணிக்க ஓரணியில் நிற்க வேண்டிய கட்டாயத்தை விளங்கி கொண்டவர்கள். அது கருத்தில் மட்டும் அல்ல எங்களது இருவர் வாழ்க்கையிலும் பிரதிபலித்தது. அரசியல் நோக்கி நகர்ந்த எங்களது பேச்சு விவாத மேடையாக மாறும் என்று நான் எண்ணவில்லை.

 மத்தியில் பிரதமராக இருக்கும் மோடியை பற்றி உன் கருத்து என்ன என்று கேட்டேன். அதற்கு அவன் சொன்ன பதில் மோடி அலை.
“மோடி அலை, மோடி அலை என்றார்களே அதை நம்ப மறுத்தவன் நான். ஆனால் அவனது கருத்தால் அவர்களது விளம்பர கம்பெனியான ஆப்கோவின் வேலை. படித்தவர் முதல் பாமரர் வரை, ஃபாசிசத்தை எதிர்த்தவர் முதல், பாசிசத்தை வெறுத்தவர் வரை அவர்களது கைக்குள் சிலரும், கைப்பாவையாக சிலரும் மாறி போனார்கள் என்ற உண்மையாக விளங்கி கொண்டேன். ஃபாசிசம் பல்வேறு வழிகளில் நம்மை அடக்கியாளும் என்று புத்தகங்களில் படித்த வரிகள் அவனோடு உரையாடும் போது நெஞ்சில் நிழலாடியது.
 மோடி உறுதியான தைரியமான கருணை உள்ளம் கொண்ட மனிதர் என்றான் என் நண்பன். குஜராத்தில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்கள் அதிகமாக வாழும் இடத்தில நிச்சயமாக மோடிக்கு எதிராகவே வாக்குகள் இருந்து இருக்கும். மாறாக முஸ்லிம்கள் அதிகம் வாழும் இடத்தில் தான் அவர்கள் அதிகமாக வெற்றி பெற்று உள்ளனர் என்று மாலேகானில் காவி பயங்கரவாதி பிரக்யாசிங் தாகூர் போட்ட குண்டை விட பெரிய குண்டை தூக்கி போட்டான்.
 குஜாரத்தில் நடந்த கலவரத்தை நமக்கு தவறாக சித்தரிக்கப்பட்டு மோடிக்கு எதிராக காட்டப்பட்டுள்ளது. பயத்தால் முஸ்லிம்கள் ஓட்டு போட்டு விட்டார்கள் எனில் மற்ற 5 – மாநிலத்திலும் எப்படி வெற்றி பெற்றார்கள் ?? என்றும் என்னிடமே கேள்வி எழுப்பினான்.
ஃபாசிச கயவர்கள் செய்யும் செயலை (கற்பழிப்பு, கொலை, கர்ப்பிணி பெண் வயற்றை கிழித்தது, சொத்துகளை சூரையாடுவது, பொது சொத்துகளை நாசப்படுத்துவது) தவறாக பார்த்தால், தவறாக தான் இருக்கும் என்று அவர்கள் செய்த கயமைத்தனத்தை நியாயப்படுத்தி அவன் கூறிய போது நான் எங்கு இருக்கிறேன் என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடியவில்லை.
 அடப்பாவி… இதே நண்பன் தான் இரண்டு வருடங்களுக்கு முன்னால் 2002-இல் நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக துடித்தான். அது மட்டுமல்ல மீரட்,பாகல்பூர், மும்பை என அனைத்து அக்கிரமங்களையும் எனக்கு நினைவு படுத்தினான்.
 ஆனால் இன்று ??????
ஃபாசிசத்திற்கு எதிரான ஒற்றை கருத்து கொண்டவர்களாக கல்லுரி காலங்களிலும் பின்னரும் பல வருடங்கள் சுற்றி திரிந்தோமே இருவரும். எப்படி வந்தது இந்த திடீர் மாற்றம்?
 அவன் சொன்ன பல வார்த்தைகள் முள்ளாக நெஞ்சை கிழித்து கொண்டிருக்கிறது. குறிப்பாக நம் பார்வை தவறாக இருப்பதால் தான் ஃபாசிசம் தவறாக தெரிகிறது என்று அவன் சொன்ன வார்த்தையில் சமநீதி, சமத்துவம், சகோதரத்துவம் அனைத்தும் அவனுள் செத்து மடிந்துவிட்டதை என்னால் உணர முடிந்தது.
 நண்பா……!
கர்ப்பிணி பெண் வயிற்றை கிழித்து சிசுவை எரித்ததை எப்படி பார்க்க?  பிரசவம் பார்க்க வந்தவன் என்று பார்க்கவா?
உயிர் பிச்சைகள் கேட்டு வந்தவனை வாயில் பெட்ரோல் ஊத்தி கொளுத்தியவனை தாகம் தீர்க்க தண்ணீர் தந்தவன் என்று பார்க்கவா?
 பச்சிளம் குழந்தைகள் என்றும் பாராது தீக்கிரையாக்கி, நம் சகோதரிகளை கூட்டு கற்பழிப்பு செய்தவனை எப்படி பார்க்க?
பதில் சொல் நண்பா? பதில் சொல்?
 நீயா இப்படி பேசுகிறாய்? ஒன்றறை வருடம் தொடர்பு இல்லாத நேரத்தில் யார் உன்னிடம் வந்தது நண்பா?
அன்று சொன்னாயே. என்னையும் என் சமூகத்தையும் அரவணைத்தது நீயும் உன் இஸ்லாமும் தான் என்று சொன்னாயே?. அந்த வார்த்தை உன் மனதில் இருந்து வந்தததா? வரலாற்றை ஆழ்ந்து படித்த உனக்கா? இந்த ஃபாசிச மாற்றம்?
முஸ்லிம்களை வந்தேறிகள் என்று சொல்லிவிட்டாயே. எப்படி முடிந்தது உன்னால்?. நீதானே சொன்னாய் என் முனோர்கள் எல்லாம் உன் சொந்தங்கள் என்று. வாளால் இஸ்லாம் பரவில்லை என்று. என்னை விட நீதானே ஆணித்தரமாக சொன்னாய் மற்றவர்களிடம்.
மாறிவிட்டாயே நண்பா ………?????
நீ உரையாடிய வரிகள் கூர்மையான அம்பைப்போல் என் நெஞ்சை பதம் பார்த்து விட்டது. யாரை நம்புவது என்று தெரியவில்லை.
நண்பா ஒன்றை மட்டும் சொல்லுகிறேன். பார் இங்கே ..
கர்ம, சட்ட, பெரியாரின் சாபம் …
கர்மவீரர் காமராஜரின் வீட்டை எரித்தவர்களின் கையில் இன்று அவரின் பிள்ளைகள்.
சட்ட வீரர் அம்பேத்கரை உணவில் விஷம் வைத்து கொல்ல முயன்றவர்களின் கையில் இன்று அவர்களின் பிள்ளைகள்.
 பெரியார் பாசறையில் வளர்ந்தவர்கள் இன்று பாசிசத்தில் ஐ(வை)க்கியம் ஆகி போன துரதிஷ்டம்.
எரித்தவனை, விஷம் வைத்தவனை, வளர்த்தவனை மறந்தவர்கள் அழுகி போகட்டும். வார்த்தைகள் இல்லை வலியை எடுத்து சொல்ல.
இறைவா! எங்களுக்கு நீயே பாதுகாவலன் .
-கரையில் இருந்து இஸ்ஹாக்
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக