Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 3 ஜூன், 2014

தேர்தலில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை பின்பற்ற வலியுறுத்தி திமுக தீர்மானம்

தேர்தலில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்க வேண்டும் என, மத்திய அரசுக்கும், இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் வலியுறுத்தி, திமுக தீர்மானம் நிறைவேற்றியது.

மேலும், மக்களவை தேர்தலில் ஆளுங்கட்சியும் தேர்தல் ஆணையமும் எழுதப்படாத உடன்பாடு மூலமாக மிகப்பெரிய சதி செய்துள்ளதாக திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுவில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மக்களவை தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆராய திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுவின் கூட்டம் கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க. ஸ்டாலின், தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள் விபரம்:
* 91 வயதிலும் ஓயாது பணியாற்றும் கருணாநிதியின் பிறந்தநாளை ஒட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* மக்களவைத் தேர்தலில், திமுக கூட்டணிக்கு வாக்களித்த 96 லட்சத்து 36 ஆயிரத்து 430 வாக்காளர்களுக்கும் நன்றி.
* மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் அன்பழகம் மற்றும் பொருளாளர் ஸ்டாலினுக்கும் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் நன்றி.
* ஆளுங்கட்சியும் தேர்தல் ஆணையமும் எழுதப்படாத உடன்பாடு மூலமாக மிகப்பெரிய சதி செய்துள்ளது. புதிய வாக்காளர்களை சேர்ப்பது முதலாக தேர்தலுக்கு முதல் நாளன்று 144 தடை உத்தரவு பிறப்பித்தது வரை தேர்தல் ஆணையம், ஆளுங்கட்சி அராஜகங்களை வேடிக்கைப் பார்த்தது. ஆளுங்கட்சியின் அடாவடிகளையும், முறைகேடுகளையும் அவற்றை தடுத்து நிறுத்த வேண்டிய காவல்துறையும், தேர்தல் ஆணையமும் உறுதுணையாக இருந்ததை கண்டனத்துக்குரியது.
* பிரிட்டிஷ் காலனி ஆதிக்க நாடுகளைத் தவிர பிற நாடுகள் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையை கடைபிடித்து வருகின்றன. தேர்தலில் கட்சிகள் பெறும் வாக்கு விகிதத்துக்கு ஏற்ப, ஆட்சி மன்றங்களில் அந்தந்த கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும். அந்த இடங்களுக்கான உறுப்பினர்களை கட்சி தேர்வு செய்து அனுப்பும். அனைத்திந்திய அளவில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்க என மத்திய அரசுக்கும், இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் வலியுறுத்தப்படுகிறது.
* திமு கழகத்தின் அமைப்பு விதிகளில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
* தேர்தல் தோல்வி குறித்து கழக வேட்பாளர்களும், பொறுப்பாளர்களும் தரும் அறிக்கைகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று கழகத் தலைமைக்கு பரிதுரைக்கப்படுகிறது உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நன்றி தமிழ்இந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக