Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 17 ஜூன், 2014

பதிவுத் துறை : வில்லங்கச் சான்றுகளை இலவசமாக இணையத்தில் பார்க்கலாம்

பதிவுத்துறையில் பராமரிக்கப்பட்டு வரும் வில்லங்கச் சான்று விவரங்களை பொதுமக்கள் எவ்விதக் கட்டணமுமின்றி இணையதளத்தில் பார்வையிடும் வகையில் 58 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ள இணையதள வசதியை முதல் அமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–

சேலம் மாவட்டம்– வீரபாண்டி, ஓமலூர் மற்றும் ஜலகண்டாபுரம்; திருப்பூர் மாவட்டம்–கணியூர் மற்றும் உடுமலைப்பேட்டை; தூத்துக்குடி மாவட்டம்– கோவில்பட்டி மற்றும் கொம்மடிக்கோட்டை; விருதுநகர் மாவட்டம்– சேத்தூர் மற்றும் திருத்தங்கல்; திருச்சிராப்பள்ளி மாவட்டம்– தாத்தையங்கார்பேட்டை; பெரம்பலூர் மாவட்டம்– வேப்பந்தட்டை; நாகப்பட்டினம் மாவட்டம்– திருப்பூண்டி; கரூர் மாவட்டம்– நங்கவரம்;
நாமக்கல் மாவட்டம்– வேலூர் (பரமத்தி), குமாரபாளையம்; திருவண்ணாமலை மாவட்டம்–வெம்பாக்கம்; திருநெல்வேலி மாவட்டம்– வள்ளியூர்; விழுப்புரம் மாவட்டம்– வடக்கனந்தல், ஆகிய 18 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு 9 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
பதிவுத் துறையில் உள்ள வில்லங்கச் சான்றுகளை இலவசமாக இணையதளத்தில் பார்க்கும் வசதியை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. உடன், (இடமிருந்து) தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், வணிகவரிகள் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், துறையின் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், வணிகவரிகள் துறை ஆணையாளர் கே.ராஜாராம், பதிவுத் துறை தலைவர் எஸ்.முருகைய்யா.
பதிவுத் துறையில் உள்ள வில்லங்கச் சான்றுகளை இலவசமாக இணையதளத்தில் பார்க்கும் வசதியை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. 
முதல்–அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களில், அலுவலர்களுக்கான அறைகளுடன் கணினி அறை, பதிவுருக்கள் பாதுகாப்பு அறை, பொது மக்களின் நலன் கருதி கூடுதல் வசதிகளுடன் காத்திருப்போர் அறை, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்துவதற்கான சாய்தளமேடை, அகலமான நடைபாதை, பாதுகாக்கப்பட்ட குடிநீர், நவீன கழிப்பறை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், பதிவுத்துறையில் பராமரிக்கப்பட்டு வரும் வில்லங்கச் சான்று விவரங்களை பொதுமக்கள் எவ்விதக் கட்டணமுமின்றி இணையதளத்தில் பார்வையிடும் வகையில் 58 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ள இணையதள வசதியை முதல்– அமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் சம்பத், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், (ஓய்வு), வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மைச் செயலாளர் பிரபாகர், பதிவுத்துறைத் தலைவர் முருகய்யா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக