Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 17 ஜூன், 2014

மாமனிதர்கள் இங்கே உண்டு…!

இஸ்லாமிய ஒழுக்க மாண்புகள் என்ற நூல். அதில் சோதனைகளைத் தாங்குவது பற்றிய ஒருத் தலைப்பு. யூஸூஃப் நபியுடைய வரலாறு அதில் வருகிறது. அடுக்கடுக்கான சோதனைகள்.
யூஸூஃப் நபி சிறு வயதிலையே தாயை இழக்கிறார். பின் தன் சகோதரர்களாலேயே கிணற்றில் வீசப் படுகிறார். அவரை ஒருக் கூட்டம் கண்டெடுக்கிறது. அடிமை சந்தையில் சொற்பத் தொகைக்கு விற்கிறது. தன் குடும்பத்தை பிரிகிறார்.

தான் வளர்க்கப்படும் இடத்தில் சூழ்ச்சிக்கு உள்ளாக்கப் படுகிறார். பழி சுமத்தப் பட்டு சிறையில் அடைக்கப் படுகிறார். சிறைவாசம் சில நாளல்ல. பல வருடங்கள்.
இப்படி சோதனைகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்தாலும் அவர் தளரவில்லை. அவரைத் தாங்கி நின்ற அந்தக் கொள்கையின் வீரியம் சற்றும் குன்றவில்லை. அதனால்தான் அந்த சிறைவாசத்தின் போதும் தன் சிறைத் தோழர்களை பார்த்து,
“எந்த சக்தியும் அற்ற பல தெய்வங்கள் இருப்பது சிறந்ததா? அல்லது யாவற்றையும் அடக்கியாளுகின்ற அல்லாஹ் சிறந்தவனா?” என்று கேட்க முடிகிறது.
இறைவன் அருளால் இத்தகைய பண்புகளையுடைய  மாமனிதர்களின் தொடர்ச்சி நின்று விடவில்லை. காலம்தோறும் பயணித்து வருகிறது.
அவன் இளைஞன். மார்க்கப் பற்றும் சமுதாயப் பற்றும் உள்ளவன். நீதி நிலை பெற விரும்புபவன். சமுதாய இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவன். அர்ப்பணிப்புடன் செயல் படுபவன். கொள்கைக் குன்றானவன்.
இவனின் உறுதியை சோதிக்க படைத்தவன் விரும்பினான் போலும். சோதனை இவன் முகவரி தேடி வந்தது.
தன்னுடைய ஊரையும் தன் நண்பர்களையும் அதிகமாக நேசிப்பவன் அவன். அதற்க்கோர் நெருக்கடி வந்தது. ஊரைப் பிரிந்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். சில நாட்களில் திரும்பி விடலாம் என்றுதான் நினைத்தான். நாட்கள் வாரங்கள் ஆனது. வாரங்கள் மாதங்கள் ஆனது. மாதங்கள் வருடங்கள் ஆனது. வருடமும் எண்ணிக்கையில் அதிகமானது.
நாட்டின் அதனை திசைகளுக்கும் அவன் அலைக்கழிந்தான். அப்போதுதான் ஒரு இடத்தில் நிலை கொண்டிருப்பான். அந்த ஊரும் மனிதர்களும் அவனுக்கு பழக்கமாகி இருப்பார்கள். திடீரென்று வரும் சூழல் அவனை அங்கே இருந்து இடம் பெயர வைக்கும்.
எப்போதாவது எங்கேயாவது தன் ஊராரை சந்திக்கும் வாய்ப்பைப் பெறுவான். அவர் ஒரு செய்தியை சொல்லுவார். அது அவனுக்கு மிகவும் நெருக்கமான மனிதரின் மரணமாக இருக்கும். வாய் விட்டுக் கதறி அழுவான்.
தனிமையும் அந்நிய இடங்களும் அவனை வாட்டும் போது தன் உறவினர்களின், நண்பர்களின் பெயர்களை வாய் விட்டு உரத்து சொல்வான். அப்போது அழுகை அவனுக்கு பீறிட்டு வரும்.
தன் ஊருக்கு திரும்பும் வாய்ப்பு இல்லாமலே வெளிநாடு சென்றான். அங்கே சற்று ஆசுவாசமானான். வசந்தக் காற்று சற்று அவன் பக்கம் வீசியது. அவன் அதில் லயித்து நின்று விடவில்லை. தனது நோக்கத்தை மறந்து விடவில்லை. தன் சகாக்களை அங்கே ஒன்று திரட்டினான். லட்சியப் பயணத்தை வழி நடாத்தினான்.
காலம் உருண்டது. அவன் வேலை பார்க்கும் நிறுவனம் அவனுக்கு நியாயமாக தர வேண்டிய உரிமைகளை மறுத்தது. அவன் அதிலிருந்து விலகினான். மீண்டும் ஒரு இடப் பெயர்வுக்கு தயாரானான். மீண்டும் நண்பர்களையும் பழகிய இடத்தையும் விட்டுப் பிரியும் நிலை. தன் சகாக்களை ஒன்று கூட்டினான்.
ஒரு சிறிய உரையை நிகழ்த்தினான். அதில் இதைத்தான் சொன்னான். “அல்லாஹ் நம்மீதும் நம் சமூகத்தின் மீதும் செய்திருக்கும் பேருபகாரம் இந்த லட்சிய இயக்கம். இதை பாதுகாத்துக் கொள்ளுங்கள். ஒரு போதும் இதில் இருந்து விலகி விடாதீர்கள்”. இதை சொல்லும் போது அவன் உணர்ச்சி வசப்பட்டு அழுது விட்டான். அவனை சுற்றி இருந்தவர்களும் அழுது விட்டனர்.
இப்போது அவன் எங்கோ ஒரு நாட்டில் இருக்கிறான். அங்கேயும் ஒரு செயல் வீரனாக தன் லட்சியப் பயணத்தில் நின்று கொண்டிருக்கிறான். தன் சகாக்களுக்கு ஒரு முன் உதாரணமாக திகழ்ந்து கொண்டிருக்கிறான்.
அல்லாஹ்வின் இத்தகைய அடியார்கள், அல்லாஹ் நம் மீது கொண்ட கருணை. நம் மீது கொண்ட அன்பு. நம் மீது கொண்ட அருள். நம் மீது கொண்ட நேசம்.  நம் மீது கொண்ட இரக்கம். அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் அனைத்து பாக்கியங்களையும்  தந்தருள்வானாக!
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக