Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 19 ஜூன், 2014

இலங்கை துணைத் தூதரிடம் முஸ்லிம் அமைப்புகள் நேரில் மனு: முஸ்லிம்கள் மீதான தாக்குதலை தடுக்க கோரிக்கை!!

இலங்கையில் முஸ்லிம்கள் மீதான தாக்குதலை தடுக்கக் கோரி, சென்னையிலுள்ள அந்நாட்டு துணைத் தூதர் ஜபருல்லாகானிடம் 21 முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் மனு அளித்துள்ளனர்.
இலங்கையில் கடந்த ஞாயிற் றுக்கிழமை அலுத்காமா, தர்கா நகர் மற்றும் பெருவாலா ஆகிய இடங்களில் முஸ்லிம் வணிக நிறு வனங்கள் மற்றும் முஸ்லிம்கள் மீது, புத்த அதிகாரப்படை என்று அழைக்கப்படும் பொது பல சேனா அமைப்பினர் தாக்கு தல் நடத்தினர். இதைக் கண் டித்து தமிழகத்தில் முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர், அதன் தலைவர் எஸ்.எம்.பாக்கர் தலைமையில் சென்னையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, இலங்கைத் துணைத் தூதரக அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு தமுமுக, தவ்ஹீத் ஜமாத், எஸ்டிபிஐ, ஜமாத்தே இஸ்லாமி, ஜமாத்துல் உலமா, மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் உள்ளிட்ட 21 அமைப்புகளின் சார்பில் தெஹ் லான் பாகவி, முகம்மது முனீர், தர்வேஷ் ரஷாதி, ஏ.கே.ஹனிபா, நாதிம், உமர் பாரூக் ஆகியோர் இலங்கை துணைத் தூதர் ஏ.ஜபருல்லாகானை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
மனுவைப் பெற்றுக் கொண்ட துணைத் தூதர் ஜபருல்லாகான், ‘‘இதுபோன்ற போராட்டங்கள், இலங்கையில் வாழும் முஸ்லிம் களுக்கு இன்னும் கூடுதல் நெருக்கடியைத்தான் அளிக்கும். எதிர்காலத்தில்
 தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுப்போம்’’ என்று முஸ்லிம் பிரதிநிதிகளிடம் கூறியுள்ளார்.

பின்னர் நிருபர்களிடம் எஸ்டிபிஐ தலைவர் தெஹ்லான் பாகவி, இந்திய தவ்ஹீத் ஜமாத் துணைத் தலைவர் முகம்மது முனீர் ஆகியோர் கூறியதாவது:
கோத்தபய ராஜபக்சே ஆதரவில் செயல்படும் ‘பொது பல சேனா’ அமைப்பினர்தான், முஸ்லிம்களை தாக்கி 3 பேரை கொன்றுள்ளனர். இது போன்ற தாக்குதல்களை இனியும் அனு மதித்தால், இலங்கை மீதான சர்வதேச நெருக்கடியை அதிகரிக் கும் நிலை ஏற்படும். அங்கு வாழும் தமிழர்களானாலும், சிறு பான்மையினரானாலும், யார் மீதும் தாக்குதல் நடத்துவதை அனு மதிக்க முடியாது என்று தெரி வித்தோம் என்று கூறினர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக