Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 29 ஜூன், 2014

போரூரில் சோகம் : 'தமுமுக'வின் மனித நேயம்!

போரூரில் சோகம் : 'தமுமுக'வின் மனித நேயம்!
5 ஆம்புலன்ஸ்கள் 50 தொண்டர்கள் களமிறக்கம்!!
11 மாடியும் தரைமட்டம் ;10 பேர் பலி : மீட்பு பணிகள் முடிய 2 நாள் ஆகும்!!!
சென்னை போரூர் அருகே முகலிவாக்கத்தில், 11 மாடி கட்டிடம் தரைமட்டமானதில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதாக, சம்பவ இடத்தில் மீட்புபணியில் ஈடுபட்டுள்ள தமுமுகவினர் தெரிவிக்கின்றனர்.
நேற்று மாலை திடீரென இடிந்து தரைமட்டமான கட்டிடத்தில், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்க, தீயணைப்பு வீரர்கள்,
தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் போலீஸார் விடிய விடிய தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்ட போதும், மீட்பு பணிகள் முடிய இன்னும் 2 நாட்கள் ஆகும் என தெரிகிறது.
70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக தெரிகிறது.

தொழிலாளர்கள் வாரந்தோறும் சனிக்கிழமை சம்பளம் வாங்குவது வழக்கம், அதன்படி நேற்று வேலை முடிந்ததும் தொழிலாளர்கள் எல்லோரும் சம்பளம் வாங்குவதற்காக கீழ் தளத்தில் காத்திருந்தபோது கட்டிடம் இடிந்து விழுந்ததால் பாதிப்பு அதிகமானாதாக தெரிகிறது.
மீட்பு பணிகளில் தமுமுக' சார்பாக, 5 ஆம்புலன்ஸ்கள் ஈடுபட்டுள்ளதுடன், காஞ்சி மாவட்ட நிர்வாகிகள் யாக்கூப், சலீம்கான், இப்ராஹிம், தமீம் அன்சாரி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக