Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 14 ஜூன், 2014

எங்கள் சட்டத்தை விமர்சிக்க எவருக்கும் அருகதை கிடையாது

எங்கள் சட்டத்தை விமர்சிக்க எவருக்கும் அருகதை கிடையாது 
எங்கள் நாட்டின் சட்டம் புனித குர்ஆனுக்கு உட்பட்டதே:
அமெரிக்காவில் சவுதி நீதியமைச்சர் எச்சரிக்கை!
வாஷிங்டன்:

எங்கள் நாட்டின் சட்டதிட்டங்கள் இறைமறையான அல்குர்ஆனுக்கு உட்பட்டதாக இருக்கின்றது. இறைவனால் இவ்வுலக மக்களுக்கு அருளப்பட்ட சட்டங்களையே நாங்கள் எங்கள் நாட்டில் கடைப்பிடிக்கின்றோம். என அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் இடம்பெற்ற சட்டத்தரணிகள், சட்ட ஆலோசகர்கள் மற்றும் மனித உரிமை அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் சவுதி அரேபியாவின் நீதி அமைச்சர் முஹம்மத் அல் ஈஸா எச்சரித்துக் கூறினார்.
முஹம்மத் அல் ஈஸா மேலும் கூறுகையில்.
எமது நாட்டின் சட்டங்களை இழுவுபடுத்தியும், மனித உரிமைகளுக்கு அப்பாற்பட்ட சட்டங்களை எமது நாடு கடைப்பிடிப்பதாகவும் உலக ஊடகங்களும், மனித உரிமை அமைப்புக்களும் பிழையாக எங்களை விமர்சித்து வருகின்றனர்.
இதைப்பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. ஆளுமைமிக்க ஒரு நல்ல மனித சமுதாயத்தைக் கட்டடிக் காக்க அல்குர்ஆனின் சட்டங்கள் இவ்வுலகிற்கு இன்றியமையாதவை. இஸ்லாம் பற்றியும், அல்குர்ஆன் பற்றியும் அறியாத பல மேற்கத்தேயர்கள் இஸ்லாம் மீதுள்ள பொறாமையில், சவுதி அரேபியாவின் சட்டங்களை மாத்திரம் எதிர்த்து வருகின்றனர். விமர்சித்தும் வருகின்றனர். எங்களது சட்டங்கள் எப்போதும் மனித உரிமைகளுக்கு எதிரானது அல்ல.
சட்டத்திற்கு அமைய குற்றவாளிகளின் தலையைத் துண்டிப்பதையும், கையைத் துண்டிப்பதையும் சவுதி நிறுத்த வேண்டும். இதற்கு மாறாக வேறு சட்டங்களை ஏற்படுத்துங்கள் என எங்களை பலர் வற்புறுத்துகின்றனர். ஆனால், இச்சட்டங்களை, தண்டனைகளை எங்களால் மாற்ற முடியாது. ஏனெனில் குர்ஆனில் உள்ள சட்டங்களை மாற்றும் அதிகாரம் எங்களுக்குக் கிடையாது.
தலைகளை துண்டிப்பதோ. கைகளை துண்டிப்பதோ.எங்களது சுய லாபத்திற்கு அல்ல. சந்தேகத்திற்கிடமான குற்றவாளிகள் எவருக்கும் நாங்கள் இத்தண்டனைகளை வழங்குவதில்லை. குற்றம் நிரூபிக்கப்பட்டால் மாத்திரமே இறைவனின் பெயரால் இத்தண்டணை வழங்கப்படுகிறது.
கடந்த 1400 வருடங்களுக்கும் மேலாக இஸ்லாம் இவ்வுலகில் ஆணித்தரமாக காலூன்றி இருக்கின்றது. இருந்தும் வருகிறது. இஸ்லாத்தில் பொய்களும். மனித உரிமைகளுக்கு எதிரான சட்டங்களும் இருப்பின். இஸ்லாம் இவ்வுலகில் எப்போதே அழிக்கப்பட்டிருக்கும்.
ஆனால் பல மில்லியன் கணக்கான மக்கள் இன்றுவரை இஸ்லாத்தில் இணைகின்றனர். இவர்கள் எவரும் உலக மனித உரிமைச் சட்டங்களைப் பின்பற்றி வரவில்லை. மாறாக அல் குர்ஆனைப் படித்து, விவாதித்து, ஆய்வு செய்தே இஸ்லாத்துக்குள் நுழைகின்றனர்.
எனவே இஸ்லாம் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் சவுதி அரேபியாவின் சட்டங்கiளுயும், எங்கள் இறைமைகளையும் விமர்சிப்பதை இத்துடன் உலகம் நிறுத்த வேண்டும்.
என சவுதி அரேபியாவின் நீதி அமைச்சர் அல் ஈஸா வாஷிங்டனில் இடம்பெற்ற கூட்டமொன்றில் சவுதி அரேபியாவின் சட்டத்தை விமர்சிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து உரையாற்றினார்.

முகநூலிருந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக