Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 1 ஜூன், 2014

மின்பிரச்னைக்கு தீர்வுகாண கூடுதலாக 12 துணை மின்நிலையங்கள் கலெக்டர் தகவல்...


நமதூர் அருகில் அமைக்கப்படும் துணை மின்நிலையம்


பெரம்பலூர், : பெரம்பலூர் மாவட்டத்தில் மின்சார பிரச்னைகளுக்கு தீர்வு காண கூடுதலாக 12இடங்களில் துணைமின் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது என்று விவசாயிகள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் கலெக்டர் தரேஸ்அஹமது கூறினார். 

பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்கூட்டம் கடந்த 28ந்தேதி நடைபெற்றது. டிஆர்ஓ ராஜன்துரை முன்னிலை வகித்தார். கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) கனகசபை வரவேற்றார். வேளாண்மைத்துறை இணைஇயக்குநர் அழகிரிசாமி, துணைஇயக்குநர் அய்யாசாமி, மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் வளர்மதி, கால்நடைத்துறை இணைஇயக்குநர் சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். 
கூட்டத்தில் கலெக்டர் தரேஸ்அஹமது தலைமை வகித்துப் பேசியதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்தாண்டு பருத்தி, மக்காச்சோள பயிர்களை சாகு படி செய்யும் விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக ஒரு ஹெக்டேரில் ஒருலட்சம் லாபம் பெரும்திட்டம் செயல்படுத்தப்பட்டது. நடப்பாண்டு இதே திட்டத்தின்கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் 1000ஹெக்டேரில் பருத்தியும், 1000ஹெக்டேரில் மக்காச்சோளமும் விவசாயிகள் சாகுபடி செய்யத் தேவையான வழிகாட்டுதல்களை மேற்கொள்ள வேளாண் மைத்துறை சார்பாகத் திட்டமிடப்பட்டுள்ளது. 
மேலும் 2000ஹெக்டேரில் சின்னவெங்காயமும், 4ஆயிரம் ஹெக்டேரில் காய்கறி சாகுபடி மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
 இந்த வாய்ப்பினை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்தி லாபம்பெற வேண்டும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் பயிர்க்கடன் பெறுவதற்கான சிறப்பு முகாமும், பள்ளி, கல்லூரிகளில் சேரவுள்ள மாணவ, மாணவியர் பயன்பெறும் விதத்தில் விரைவில் கல்விக்கடன் வழங்கும் முகாமும் ஒன்றியங்கள் அளவிலும், மாவட்ட அளவிலும் நடத்தப்படவுள்ளது. இதில் தகுதியான நபர்கள் விண்ணப்பித்து பயன்பெற லாம்.
பெரம்பலூர் மாவட்டத்தில் குறைந்த மின்னழுத்தத்தால் ஏற்படும் மின்வெட்டுப் பிரச்னைகளுக்கு தீர்வுகாணவும், கூடுதல் மின்இணைப்புகள் வழங்கிடவும் ஏதுவாக பேரளி, எசனை, பென்னக்கோணம், வெண்மணி, அ.மேட்டூர், நன்னை, அசூர், கூட லூர், மேட்டுப்பாளையம், நெற்குணம், வி.களத்தூர், புதுக்குறிச்சி ஆகிய 12இடங்க ளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் துணைமின்நிலையங்கள் அமைக்க அரசுஅனுமதி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பூர்வாங்கப்பணிகள் தொடங்கி நடைபெறவுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் முதியோர்உதவித்தொகை பெறுவோர் குறித்த முறை யான கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இதற்காக அந்தந்த ஊராட்சிகளில் புகைப் படத்துடன்கூடிய முதியோர் உதவித்தொகை பெறுவோர் விபரங்கள் ஒட்டப்பட்டு, அவர் களில் உண்மையானவர்கள் தொடர்ந்து உதவித்தொகை பெறவும், போலியானவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையினை நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது என்றார். 
கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்லதுரை, தமிழ்நாடு கரும்பு உற்பத்தியாளர்கள் சங்க மாவட்டத்தலைவர் ராஜேந்திரன், தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் விசுவநாதன், தமிழ் நாடு பாமாயில் சாகுபடியாளர்கள் சங்கத் தலைவர் துங்கபுரம் முருகேசன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் மாணிக்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட் டத்தலைவர் ஜெயராமன், தமிழக விவசாயிகள் கட்சியின் மாவட்டத் தலைவர் ராமசாமி, வெங்கலம் சின்னராசு, குரும்பலூர் ரமேஷ் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நன்றி தினகரன்
புகைப்படம் நமது நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக