Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 6 ஜூன், 2014

560 ஒளியாண்டுகள் தொலைவில் ராட்சத பூமி!

'மெகா எர்த்' என்று சொல்லக்கூடிய ராட்சத பூமி ரக கோளங்கள் பேரண்டத்தில் காணப்படுவதாக வானியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

நமது பூமியைப் போலவே அழுத்தமான மேற்பரப்பை இந்த கோளங்கள் கொண்டிருந்தாலும், பூமியை விட பல மடங்கு பெரிதானவை இவை என்று அவர்கள் கூறுகின்றனர்.
பூமியை விட 17 மடங்கு எடை கூடிய கோளம் ஒன்று தொலைதூரத்து நட்சத்திரம் ஒன்றைச் சுற்றி வலம் வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய ரக கோளங்களை வகைப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ராட்சத கிரகத்துக்கு கெப்லர் 10 சி என்று பெயரிடப்பட்டுள்ளது.
பூமியிலிருந்து 560 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கிற நட்சத்திரம் ஒன்றைச் சுற்றி இந்த கிரகம் வலம் வருகிறது. இவ்வளவு அதிகமான எடை ஒரு கிரகத்துக்கு வருமானால், அது சுற்றுவட்டாரத்திலுள்ள அனைத்து ஹைட்ரஜன் அணுக்களையும் ஈர்த்து ஜூபிடர் அதாவது வியாழன் கிரகம் போல வாயுக் கிரகமாகவோ, நெப்டியூன் போல பனிக்கட்டி கிரகமாகவோதான் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதிவந்தனர். ஆனால் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக கெப்ளர் 10 சி, அழுத்தமான மேற்பரப்பைக் கொண்டுள்ளது.
பூமியை விட இரண்டு மூன்று மடங்கு விட்டம் கொண்டுள்ள இந்த கிரகம் 17 மடங்கு எடையைப் பெற்றுள்ளது என்றால், இந்தக் கிரகம் பூமியை விட அடர்த்தியானது என்று தெரியவருகிறது.
நன்றி நியூஇந்தியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக