Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 26 மே, 2014

துபாயில் வண்டியை ஓட்டுகின்றீர்களா ? அப்ப ஒங்கழுக்குதான்...

துபையில் இலவச வாகன பரிசோதனை முகாம் இன்று முதல், அதாவது 25.05.2014 முதல் 05.06.2014  வரை நடைபெற இருக்கிறது என அப்கிரேட் குரூப்பின் மேலாண்மை இயக்குநர் எம்.எஸ். ஹமீது தெரிவித்துள்ளார்.

துபையில் கோடைக்காலம் துவங்கி விட்டதையொட்டி வாகனம் மற்றும் வாகன ஓட்டுநர்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு இந்தப் பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது.
இப்பரிசோதனை முகாமில் டயர், ஏசி, பிரேக், பேட்டரி உள்ளிட்டவை முக்கியமாக பரிசோதிக்கப்பட்டு, தகுதி வாய்ந்த டெக்னீஷியன்கள் மூலம் உரிய ஆலோசனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன பரிசோதனை முகாமில் பங்கேற்க விரும்புவர்கள் 050 269 53 53 எனும் அலைபேசி எண்ணில் முன் பதிவு செய்து தங்களது வருகையினை தெரியப்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அமீரகத்தில் கோடைக்காலத்தில் நடைபெறும் வாகன விபத்துகள் அதிக அளவில் டயர்களின் முறையான பராமரிப்பின்மை காரணமாக நடைபெறுவதால் பிரத்யேக இம்முகாமிற்கு அப்கிரேட் குழுமம் ஏற்பாடு செய்துள்ளது.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக