Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 3 மே, 2014

நோய் எதிர்ப்பு மருந்துகளின் (antibiotics) சக்தி செயலிழந்து வருகின்றன! - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

உலகம் ஆண்டிபயாடிக்ஸ் (antibiotics) எனப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகளின் காலத்துக்குப் பிந்தைய ஒரு காலத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்திருக்கிறது.
இத்தகைய ஒரு காலகட்டத்தில், மக்கள் சாதாரண தொற்றுக்களாலும், சிறிய காயங்களாலும் உயிரிழக்கக்கூடிய ஒரு நிலை மீண்டும் உருவாகும் நிலை வரலாம் என்று அது கூறுகிறது.

சூப்பர் பக்ஸ் எனப்படும் நோயை உண்டாக்கும் கிருமிகள், உருமாறி, மிகவும் சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு மருந்துகளிடமிருந்தும் கூட தப்பித்துக்கொள்ளும் நிலையை எட்டியிருப்பதாகவும், இது இப்போது உலக அளவில் ஒரு பெரும் அச்சுறுத்தலைத் தோற்றுவிப்பதாகவும், உலகச் சுகாதார நிறுவனம், நோய் எதிர்ப்பு மருந்துகளின் செயலற்றுப் போகும் நிலை குறித்து வெளியிட்டுள்ள முதல் உலகளாவிய அறிக்கையில் கூறுகிறது.
இத்தகைய நோய் எதிர்ப்பு மருந்துகளை தேவைக்கதிகமாக பரிந்துரைப்பதும், நோயாளிகள் இத்தகைய மருந்துகளை உட்கொள்ளப் பரிந்துரைக்கப்பட்ட காலம் முழுவதும் உட்கொள்ளாமல் இடையில் நிறுத்துவது போன்ற, துஷ்பிரயோகங்களும் இதற்குக் காரணம் என்று அந்த அறிக்கை கூறுகிறது. இதனால் இந்த நோய் எதிர்ப்பு மருந்துகள் செயலிழப்பது என்பது, எதிர்பார்த்ததைவிட மிகவும் வேகமாக நடந்துகொண்டிருக்கிறது என்றும் அறிக்கை கூறுகிறது.
புதிய நோய் எதிர்ப்பு மருந்துகள் விரைவாக உருவாக்கப்பட வேண்டும் என்று கூறும் உலக சுகாதார நிறுவனம், இவைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பார்க்க, மேலும் சிறந்த கண்காணிப்பு முறைகள் அவசியம் என்று கூறுகிறது.

நன்றி நியூஇந்தியாடிவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக