Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 25 மே, 2014

துபாய் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை.

துபாய் ட்ராபிக் போலீஸ் விரைவில் Google Glass பயன்படுத்தப் போகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.   சாலை  விதிகளை  மீறும் வாகன சாரதிகளது பழைய குற்றங்கள் பற்றி தெரிந்து கொள்ளவும், தேடப்படும் கார்களின்  பின்னணி தகவல்கள் பற்றி அறிந்து  கொள்ளவும், Google Glass உதவியாக இருக்கும் என துபாய் போலீஸ் நம்புவதாக, போலீஸ் உயரதிகாரி  ஒருவர்  தெரிவித்தார். 
தற்போது,  Google Glass  துபாய் போலீஸின் ஸ்மார்ட் சர்வீஸஸ் இலாகாவில் ட்ரயல் பாவனையில் உள்ளது எனவும், சோதனைக் காலம் முடிந்ததும், துபாய் வீதிகளில் பணிபுரியும் ட்ராபிக்  போலீஸாரால்  பயன்படுத்தப்படும்  எனவும்  கூறப்பட்டுள்ளது.
Google Glass என்பது, சிறிய கம்ப்யூட்டர் பொருத்தப்பட்டுள்ள அணியும் கண்ணாடி. இதில் போட்டோ, வீடியோ பதிவுகள் செய்ய முடியும். இன்டர்நெட் மூலம் தரவுகளை பெற முடியும். மெயின்  டேட்டா பேஸ்  ஒன்றில்  உள்ள  தகவல்களை  பெறவும் முடியும்.
எமது துபாய் வாசகர்களுக்கு எச்சரிக்கை: கண்ணாடி அணிந்த போலீஸை கண்டால், தூர விலகுங்கள்!
Dubai: Dubai Police will soon use Google Glass to issue fines to errant motorists as well as identify wanted cars, said a senior police official.
The smart eyewear is currently under trial by Dubai Police Smart Services Department, for use by traffic police.
Google Glass is a small computer mounted onto glasses. It can take photos, record video, access the internet and give directions among other uses. It is compatible with both Android and iOS.
According to Google, It has a high-resolution display that is the equivalent of a 63.5cm high-definition screen from 2.4 metres away. The glasses feature a 5 megapixel camera.
gulfnews.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக