Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 20 மே, 2014

ஆதமின் மகன் அபு! திரைப்படம் சொல்லும் செய்தி!

ஆதமின் மகன் அபு!
திரைப்படம் சொல்லும் செய்தி!

மலையாளத்தில் ஆதமின்ட மகன் அபு எனும் பெயரில் வெளிவந்து பல விருதுகளைப் பெற்ற திரைப்படத்தை ஹனிபா டெக்ஸ்டைல் நிறுவனம் தமிழில் மொழிமாற்றம் செய்து உள்ளனர்!
இன்று மாலை சென்னை RKV தியேட்டரில் இதன் பிரிவியு ஷோ நடை பெற்றது! பத்திரிகையாளர்கள், திரையுலகத்தினர, சமுதாய பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்!

ஆபாசம், குத்துப்பாடல்கள், வன்முறை எதுவும் இல்லாமல், ஒரு முஸ்லிம் தம்பதியின் எளிய வாழ்வையும் அவர்களின் ஹஜ் கனவையும், அதற்காக அவர்கள் செய்யும் முயற்சிகளைம் சுற்றி அழகிய முறையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது! நடிப்பு, இயக்கம் அனைத்திலும் மலையாள மண்ணின் மணமும் , மதங்களை கடந்த மனிதநேயமும், ஒரு இந்திய முஸ்லிமின் வாழ்க்கை முறையும் மிளிர்கிறது!
இறந்தவர்களிடம் உதவி தேடுதல், ஹஜ் பற்றிய சில தவறான விளக்கம் இவற்றை தவிர்த்து பார்த்தால் அனைவரும் பார்க்க வேண்டிய படம்!
இந்த படத்தை பார்க்கும் மாற்று மத சகோதரர்களுக்கு இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும்
உயர்ந்த எண்ணத்தை உருவாக்கும்!

திரைப்படங்களில் முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கிறார்கள் எனும் குற்றச்சாட்டை விட்டு, சரியாக சித்தரிக்கும் இதுபோன்ற பட்ங்கள் வரவேண்டும்!
மேடை போட்டு பலமணி நேரம் பேசி, பக்கம் பக்கமாக எழுதி சொல்ல வேண்டிய செய்தியை ஒரு காட்சியின் மூலமாக மக்கள் மனதில் ஆழமாக பதிக்கும் சினிமா எனும் வலிமை வாய்ந்த ஊடகத்தை இஸ்லாத்தை எடுத்து சொல்ல பயன்படுத்தும் நிலையை உருவாக்க வேண்டும்!

1 கருத்து:

  1. திரைப்படங்களில் முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கிறார்கள் எனும் குற்றச்சாட்டை விட்டு, சரியாக சித்தரிக்கும் இதுபோன்ற பட்ங்கள் வரவேண்டும்!

    பதிலளிநீக்கு