கடந்த 03/04/2013 புதன் கிழமை மதியம் சுமார் 2 மணியளவில் நமதூரில் உள்ள கோவில் எதிரில் இருந்த மின்கம்பத்தை அவ்வழியாக சென்ற கறும்பு டிராக்டர் பக்கவாட்டில் இடித்து கடைவீதி வரை உடைந்த மின் கம்பத்தை இழுத்து சென்றது. இதனால் அந்த பகுதியில் பெறும் பரபரப்பு ஏற்பட்டது.
நமதூரில் 12மணியிலிருந்து 3மணிவரை பவர்கட் என்பதால் இறைவனின் கிருபையால் பெரும் அசம்பாவிதம் எதுவும் இல்லாமல் போனது படைத்த வல்ல நாயன் அல்லாஹ்விற்கே புகழனைத்தும்.
இது போன்ற விபத்து சம்பவங்கள் வருடந்தோறும் அளவிற்க்கு அதிகமான கரும்பு கொண்டு செல்லும் டிராக்டர்களால் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றது.
இதற்கான நடவடிக்கையை மின்சார வாரியமும், ஜமாத் ஆதரவோடு வெற்றி பெற்ற நமது பேரூராட்சி தலைவரும் இணைந்து மின்கம்பங்களின் உயரத்தை கூட்டியோ அல்லது கரும்பு டிராக்டரின் பருமன் அளவை சரிசெய்தோ விரைவில் இப்பிரச்சனைக்கு தீர்வு செய்ய வேண்டும்.
நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக