Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

நாளைய நமது ஊர் தலைமுறை.


அருளாலன் அன்பாலன் அல்லாஹ்வின் அழகிய திருப்பெயரால்...,
நமதூரில் மாலை சுமார் 8 மணி அளவில் கலீமும் ராஜாவும் சவர்மா சாப்பிடுவதற்காக கடைதெருவிற்கு வந்தார்கள். கலீம் நமதூரில் வெங்கய வியாபாரி, ராஜாவுடைய அத்தா நமதூர்தான் ஆனால் சென்னை செட்டில்டு. இருவரும் சவர்மா கடையை நெருங்கியதும் கலீம் ஆடர் கொடுக்க கடைகாரரை நெருங்கினான். அப்பொழுது ராஜா தடுத்து நிருத்தினான்.
அந்த சமயத்தில்…,

ராஜா – இந்த கடையில் கோழி இறைவன் பெயரை சொல்லி அருக்கப்பட்டதா?  
என்று கேட்டான்
கலீம் – என்ன கேட்கிறாய் நீ? வெளியூர் சென்று செட்டில் ஆகிவிட்டால், ஊரில் நடந்த சம்பவங்களை கேட்டு தெரிந்துக்கொள்ள மாட்டாயா?
ராஜா – ஏன் என்ன நடந்தது…?
கலீம் – சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் நமதூரில் மேற்கு, கிழக்கு ஜமாத் என்றும் தாருஸ்ஸலாம் மற்றும் தவ்ஹித் ஜமாத் என்றும், பிறிந்து கிடந்தது. அந்த சூழ்நிலையில் ஒரு சில அனாச்சாரங்களும் சிர்க்கான (அல்லாஹ்விற்கு இணைவைப்பு) காரியங்களும் நிகழ்தேரியது. அப்பொழுது வழுவான நிலையில் இருந்த சுன்னத்துவல் ஜமாத் கூட மேலோட்டமாக கண்டும் காணாமல் விட்டுவிட்டு வந்தார்கள். ஏனென்றால் அந்த அனாச்சாரமான காறியங்களில் ஈடுபட்டவர்கள் சுன்னத்துவல் ஜமாத்துக்கு கட்டுப்படுகிறோம் என்று வாழ்ந்த ஊர் முக்கிய பிறமுகர்களும் அதில் அடங்கினர். தவ்ஹித் ஜமாத் காரர்களும் முழுவீச்சில் அந்த நேரத்தில் செயல் படாமல் தமக்குள் கருத்து வேறுபாட்டுகளில் மிகைத்து இருந்தனர்.
ராஜா – ஏன்டா கலீம், நா ஒன்னு கேட்டா நீ ஒன்னு பதில் சொல்ர ?
கலீம் – அங்கதான் வரேன்…. இந்த சூழ்நிலையில்தான் அல்லாஹ் சுபஹானத்தஆலா அப்படிப்பட்ட சுன்னத்துவல் ஜமாத்திலிருந்தே ஒருசிலரை உருவாக்கி நமதூர் மக்களின் மனதில் மாற்றத்தை உண்டு பன்னினான். அப்படிப்பட்ட ஆட்கள், இமாம்கள் மற்றும் ஆலிம்கள் உதவியோடு மேற்கு தெற்கே பள்ளி வாசலில் நடந்த சிர்க்கான காரியங்கள் முதல், ஆடம்பர திருமணம், அனாச்சாரமான விசயம் மற்றும் கருத்து வேறுபாடுகள் வரை முற்றுப்புள்ளி வைத்தனர். அந்த வரலாறு முற்றிலும் புறட்டிப் போடப்பட்டது. அதன் விளைவாக அவர்களின் ஆழ்மனதில் இஸ்லாம் வழுவாக வேறுன்றியது. இறையச்சம் மேலேங்கியது. அன்றுமுதல் இன்றுவரை ஒரு இமாமாகப்பட்டவர்தான் நமதூரையும் ஒவ்வெறு பள்ளிவாசல்களையும் நிர்வகித்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் தான் நமதூரி்ல் பேருந்து நிலையத்திலும் பள்ளிவாசல் கட்டப்பட்டது. இன்று நமதூரில் கறிக்கடை முதல் சின்ன பொட்டிகடைவரை ஹராமான விசயம் நிகழாமலிருக்க ஒவ்வெரு ஜும்மாவும் நிகழ்ந்தேரி வந்துக்கொண்டிருக்க காரணமும் அந்த தலைமுறையினர்தான். 
இன்று நீ வேரு ஜமாத், நான் வேரு ஜமாத் என்ற வேறுபாடு இருந்தாலும், நம் மனதில் ஒரே உன்னத கொள்கை மற்றும் மாறாத சகோதரத்துவம் என்று அந்த சமுதாயத்தினர் விதைத்த விதைதான் இன்று நமதூரில் அல்லாஹ்வின் பரக்கத்தை காணமுடிகியறு.
நாம் செய்யும் ஹலாலான வியாபாரம் மற்றும் நேர்மையும் பார்த்து வெளியுர் மக்கள் நமதூருக்கு வியாபாரியாகவும், இஸ்லாத்தை தெரிந்து கொள்ளும் நோக்கிலும் வருகிறார்கள் என்றால், என்றோ அவர்கள் விதைத்த விதைதான் இன்று நமதூருக்கு ஒரு வரலாரை ஏற்படுத்தியது. ஏன் அதில் நம்முடைய நன்னிஅத்தாவோ தாதத்தாவே கூட இருக்கலாம்.
என்று கூறி முடித்தான் கலீம்..
இதை கேட்ட ராஜாவின் உள்ளம் கனிந்து அந்த இடத்திலேயே அப்படி வாழ்ந்த சமுதாயத்திற்காக மனமுறுகி துஆ செய்தான்…

நமதூரில் இப்படி இன்று நிகழ்காலத்தில் வாழ்ந்தால், 50 ஆண்டுகள் கழித்து  எதில்காலத்தில் எப்படிப்பட்ட சமுதாயம் உருவாகும் என்று நம்முடைய வரலாறுகளில் படிப்பினை வைத்து இக்கட்டுரை எழுதப்பட்டது.

அப்படி இல்லாமல் தன்னுடைய அகந்தையை வளர்த்துக்கொண்டு மறுமையின் அச்சம் இல்லாமல் நீ பெரியவனா நான் பெரியவனா என்ற ஆனவ குரோத மனப்பான்மையில் மூழ்குவேமேயானால், நம்மை கண்ணியப்படுத்தும் வருங்காளத்தின் அதே தலைமுறையினர், மானம் இழந்தவர்கள் மரியாதை இழந்தவர்கள், என்றும், எருமை மாடுகள் போல சூடு சொரனை இழந்து வாழ்ந்தார்கள் என்ற அவப்பெயரை அவர்கள் நமக்கு சூட்டி விடும் முன், நம் தவறை நாம் திருத்திக் கொண்டு வாழ்வோமாக! இன்ஷா அல்லாஹ்….,
நமது நிருபர்.

2 கருத்துகள்:

  1. அஹமது சுல்தான்23 ஏப்ரல், 2013 அன்று 12:11 PM

    இன்ஷா அல்லாஹ்,,,,

    பதிலளிநீக்கு
  2. IN THE NAME OF ALLAH...
    ASSLAMU ALAIKKUM (VARAH...)
    ஏன்? 50 வருடம் இன்ஷால்லாஹ் (அல்லஹ் நாடினால் ) நமதூர் இளைங்கர்கள் மாற்க்கத்தை சரியான முரையில் பின் பற்றினால் மிக விரைவில் நாளைய நமது ஊர் தலைமுறை மிகனல்ல தலைமுறையாக உருவெடுக்கம் ......

    "நாளை நமதே! வரும் நாளும் நமதே!!"

    இன்ஷால்லாஹ்

    by
    ABU SAALIHA

    பதிலளிநீக்கு