Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 8 ஏப்ரல், 2013

என்ஜினீயர் பணிகளுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வு



என்ஜினீயர் பணிகளுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வு

என்ஜினீயரிங் சர்வீசஸ் பணிகளுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.6–5–13 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:–

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் யு.பி.எஸ்.சி. எனப்படுகிறது. மத்திய அரசின் உயரதிகாரி பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு நடத்தி தெரிவு செய்து வருகிறது. தற்போது ‘என்ஜினீயரிங் சர்வீசஸ் எக்ஸாமினேசன் 2013’ தேர்வை அறிவித்துள்ளது. இதன்மூலம் தகுதியான என்ஜினீயர்கள் மத்திய அரசுத் துறைகளில் உள்ள என்ஜினீயரிங் பணிகளில் வாய்ப்பு பெறலாம். மொத்தம் (உத்தேசமாக) 763 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

தேர்வின் பெயர் : என்ஜினீயரிங் சர்வீசஸ் எக்ஸாம் –2013

நிரப்பப்படும் பணியிடங்கள் : 763

வயது வரம்பு:

விண்ணப்பதாரர் இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும். 1.1.13 தேதியில் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும்30 வயதைக் கடக்காதவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித் தகுதி:
அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் என்ஜினீயரிங் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

உடற்தகுதி:

என்ஜினீயரிங் சர்வீசுக்கு ஏற்ற உடற்தகுதியை விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.200 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், ஊனமுற்றோர் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. கட்டணத்தைஸ்டேட் வங்கி கிளைகளிலும், அதன் துணை வங்கிகளிலும் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் யு.பி.எஸ்.சி. இணையதளத்திற்குச் சென்று ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். அனுப்பிய பின்னர் நகல் விண்ணப்பம் எதுவும் தபாலில் அனுப்ப வேண்டியதில்லை.

முக்கிய தேதிகள்:

ஆன்லைன் பதிவு ஆரம்பமான நாள் : 6–4–13

விண்ணப்பிக்க கடைசி நாள் : 6–5–13

எழுத்து தேர்வு நடைபெறும் நாள் : 28–6–13

மேலும் விரிவான விவரங்களை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பங்களை அனுப்பwww.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக