Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 18 ஏப்ரல், 2013

ஜமாத்துல் உலமாவின் கருத்தும் இணைய தளத்தின் விளக்கமும்.

ஜமாத்துல் உலமாவின் கருத்தும் இணைய தளத்தின் விளக்கமும்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நமது இணையதளத்தில் நுல் முடி ஹஜரத் தேவை என்று வெளியிட்டு இருந்தோம்.
இதனை ஜமாத்துல் உலமாவில் இருந்து ஒரு மறுப்பும் கருத்தாக கிழக்கு பள்ளி இமாம் வெளியிட்டு இருந்தார்.

அஸ்ஸலாமு அலைக்கும்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

கட்டுரை வெளியிட்ட அபு ஹசனுக்கு,நடைபெறாத ஒரு சம்பவத்தை நடந்ததாகவும் அதற்கு உருவம் கொடுத்து சிறந்த ஒரு கற்பனை செய்து அழகான கதையையும் எழுதி இருக்கிறீர்கள். உங்களுடைய கற்பனை வளத்தை பாராட்டுகிறோம். (நீங்கள் சார்ந்த கூட்டமும் இப்படித்தான் கற்பனைகளை பரப்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை விளங்கிக் கொண்டோம்.)

இந்த சம்பவம் உண்மையாக இருப்பின் நேரில் வந்து நிரூப்பிகத் தயாரா?

அப்படி நிரூப்பிக்காத பட்சத்தில் நீயும், இதை வெளியிட்ட இந்த தளமும் பொய்யானவர்கள் என்பதை இதன் மூலம் அறிகிறோம்.

இணையத்தில் வெளியிட்ட ஆசிரியருக்கு,

எந்தச் செய்தியாக இருப்பினும் அந்த செய்தி உண்மையானது தானா? என தீர விசாரித்தப்பின் உண்மையை மட்டும் வெளியிடவும்.

திருக் குர்ஆனும், ஹதீஸும் கூறும் அறிவுரை:-

பாவிகள் உங்களிடம் ஏதேனும் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் (அதை உடனே அங்கீகரித்து) அறியாமையால் (குற்றமற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கிழைத்து விடாதிருப்பதற்காக (அதன் உண்மையை அறிவதற்காக அதனை தீர்க்க விசாரணை செய்து) தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள் (அவ்வாறு நீங்கள் செய்யவில்லையெனில்) பின்னர் நீங்கள் செய்தவைகளை பற்றி நீங்கள் கைசேதப்படக்கூடியவர்களாக ஆகி விடுவீர்கள். (அல்-குர்ஆன் 49:6)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :-

கேட்ட செய்தியெல்லாம் (ஆராயாமல்) அறிவித்து விடுவதே அவன் பொய்யன் என்பதற்கு போதுமானதாகும். அறிவிப்பாளர் :அபூஹுரைரா (ரலி) நூல்:முஸ்லீம்.

கற்பனையான தகவலை ஆராயாமல் செய்தி வெளியிட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த சம்பவம்(நடக்கவில்லை என்று) மறுப்பு செய்தி வெளியிடவும்.

கருத்து தெரிவிப்பவர்கள் கவனத்திற்கு:-

கருத்து தெரிவிக்கும் முன் அத்தகவல் உண்மை தானா? என்பதை ஆராய்ந்து பின் இஸ்லாமிய முறைப்படி நாகரீகமான் முறையில் கருத்து தெரிவியுங்கள்.

இப்படிக்கு
நகர ஜமாஅத்துல் உலமா
லெப்பைக்குடிக்காடு.

இந்த கருத்தை கண்டு நமது ஆசிரியர் குழுமம் மனம் வருந்தி கட்டுரை எழுதிய நபருக்கு விளக்கம் கேட்டு பதில் இடப்பட்டது இதன் நகளை கீழே இணைத்துள்ளோம்.
சரியான பதில், விளக்கம் கொடுக்கப்படவில்லை என்றால் முழு பொருப்பு இணைய தளத்தை சார்ந்ததே.

மறுப்பு கூற கடமைப்பட்டுள்ளோம்.
கட்டுரை எழுதிய நபருக்கு விளக்கம் கேட்டு அனுப்பிய கடிதத்தின் நகல் கீழே இனைத்துள்ளோம்.


6 கருத்துகள்:

  1. அல்லாஹ் உங்களுடைய இந்த முயற்ச்சிற்கு என்றும் உறுதுனையாக இருப்பானாக. உங்களுடைய பணி இன்னும் நமதூருக்கு தேவை.

    பதிலளிநீக்கு
  2. கோஷ்டி மூதலுக்கு உங்களுடைய பணி இன்னும் நமதூருக்கு தேவை.

    பதிலளிநீக்கு
  3. கரைடாஹா சொன்னிங்க கோஷ்டி மோதலுக்கு உங்களுடைய பணி இன்னும் நமதூருக்கு தேவை.

    பதிலளிநீக்கு
  4. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பான வேண்டுதல்
    எல்லாம் வல்ல இறைவன் பெயரால் துவங்குகிறேன் என்று
    உண்மைக்கு மாறாக எழுதுவது, அல்லது குறை கூறி எழுதுவது, அதுவும்ஆன்லைனில் சொல்வது (புறம் பேசுவது போன்றாகும்)

    அதை போல எல்லா புகழும் இறைவனுக்கே என்று எழுதும் போதும் ஒன்றை கவனத்தில் வைக்க வேண்டும் உங்களை குறை கூறும் பொழுதும் நீங்கள் அதை பயன் படுத்துகிறீர்கள்
    எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் நல் அருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யாரப்பில்
    ஆலமீன்.
    இப்படிக்கு
    பொதுவானவன்.

    பதிலளிநீக்கு
  5. அஸ்லாமு அலைக்கும் .

    அன்பு சகோதர்களே .ஒருவர் உடைய தவறை சுட்டி காண்பிக்கும் பொழுது அவர்களுக்கு வலி இருக்கத்தான் செய்யும் .இருந்தாலும் தம் தவறை சரி செய்து கொள்வதே மனிதனின் இயல்பு .அதை நாம் புரிந்து கொண்டால் சரி அல்லாஹ் நம் அனைவருக்கும் நல் அருள் புரிவனாக .அமீன் ஹமீது .

    பதிலளிநீக்கு
  6. அஸ்லாமு அலைக்கும் .

    அன்பு சகோதர்களே .ஒருவர் உடைய தவறை சுட்டி காண்பிக்கும் பொழுது அவர்களுக்கு வலி இருக்கத்தான் செய்யும் .இருந்தாலும் தம் தவறை சரி செய்து கொள்வதே மனிதனின் இயல்பு .அதை நாம் புரிந்து கொண்டால் சரி அல்லாஹ் நம் அனைவருக்கும் நல் அருள் புரிவனாக .அமீன்

    பதிலளிநீக்கு