Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 3 ஏப்ரல், 2013

மாநில சிறுபான்மையினர் ஆணைய குழுவினர் ஏப். 9-ல் பெரம்பலூர் வருகை


பெரம்பலூர் மாவட்டத்திற்கு மாநில சிறுபான்மையினர் ஆணையக் குழுவினர் ஏப். 9-ம் தேதி வர உள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையக் குழுவினர், அதன் தலைவர் பேராயர் எம். பிரகாஷ் தலைமையில் வருகின்றனர்.
ஆட்சியரக அரங்கில் 9-ம் தேதி காலை 10.30-க்கு சிறுபான்மையின சமுதாயத் தலைவர்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளைச் சந்தித்து, சிறுபான்மையினருக்கென தமிழக அரசு செயல்படுத்தும் நலத் திட்டங்கள் குறித்து குழுவினர் ஆலோசித்து, கருத்து கேட்க உள்ளனர்.
எனவே பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினப் பொதுமக்களின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்று, தங்களது கோரிக்கைகள், நலத் திட்டங்கள் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டிற்கான கருத்துகளைத் தெரிவிக்கலாம்.

நன்றி தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக