குன்னம் வட்டத்தில் 1,422 ஆம் பசலி ஆண்டு வருவாய் கிராமங்களுக்கான தீர்வாயம் (ஜமாபந்தி) வருகின்ற 2-ந் தேதி தொடங்குகிறது.
ஜமாபந்தி
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்ரமணியன் தலைமையில் நடைபெறும்.
2-ந் தேதி
இந்த வருவாய் தீர்வாயம் 2-ந் தேதி முதல் தினந்தோறும் காலை 9 மணிக்கு ஆரம்ப மாகும். 2-ந் தேதி வடக்கலூர் பிர்காவிற்கு உட்பட்ட திருமாந்துறை,பெண்ணகோணம்(வடக்கு)(அட நமதூருங்க தான் ), பெண்ண கோணம்(தெற்கு), வடக்கலூர், ஒகளூர்(மேற்கு), ஒகளூர் (கிழக்கு), சு.ஆடுதுறை, அத்தி யூர்(வடக்கு), அத்தியூர்(தெற்கு), கிழுமத்தூர்(வடக்கு), கிழுமத் தூர்(தெற்கு), அகரம்சிகூர், வசிஸ்டபுரம், கீழப்பெரம்ப லூர், வயலப்பாடி ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், நடைபெறும்.
3-ந் தேதி
3-ந் தேதி கீழப்புலியூர் பிர்கா விற்கு உட்பட்ட நன்னை (கிழக்கு), நன்னை (மேற்கு), பெருமத்தூர் (வடக்கு), பெருமத்தூர் (தெற்கு), சிறுமத்தூர், கீழப்புலியூர் (வடக்கு), கீழப் புலியூர் (தெற்கு), எழுமூர் (மேற்கு), மழவராயநல்லூர், எழுமூர் (கிழக்கு), ஆண்டிக் குரும்பலூர், அசூர், சித்தளி (கிழக்கு), சித்தளி (மேற்கு), பேரளி (வடக்கு), பேரளி (தெற்கு), ஒதியம் ஆகிய வரு வாய் கிராமங்களுக்கும், நடை பெறும்.
9-ந் தேதி
9-ந் தேதி வரகூர் பிர்காவிற்கு உட்பட்ட ஓலைப்பாடி (கிழக்கு), ஓலைப்பாடி (மேற்கு), பரவாய் (மேற்கு), பரவாய் (கிழக்கு), புது வேட்டக்குடி, துங்கபுரம் (வடக்கு), துங்கபுரம் (தெற்கு), காடூர் (வடக்கு), காடூர் (தெற்கு), கொளப்பாடி, வர கூர், குன்னம், பெரியம்மா பாளையம், பெரிய வெண்மணி (மேற்கு), பெரிய வெண்மணி (கிழக்கு) ஆகிய வருவாய் கிராமங்களுக்கும் நடை பெறுகிறது.
விவசாயிகள் மாநாடு
ஜமாபந்தி இறுதிநாளான 9-ந் தேதி அன்று குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மாநாடு மாவட்ட வருவாய் அலுவலர் சுப்ர மணியன் தலைமையில் நடைபெறும்.
ஜமாபந்தியில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்வார்கள். எனவே பொது மக்கள் ஜமாபந்தியில் பட்டா, பட்டா மாறுதல், பெயர் மாறுதல், நில அளவை, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட தனிப்பட்ட கோரிக்கை மற்றும் பொதுவான கோரிக்கை மனுக்களை அளித்து உடனடித்தீர்வு காணலாம்.
மேற்கண்ட தகவலை தாசில்தார் செல்வம் தெரிவித்துள்ளார்.
நன்றி தினத் தந்தி
SDPI karan kusu vittal kooda podreenga
பதிலளிநீக்கு