இன்னும் மூஸா நாம் குறிப்பிட்ட நேரத்தில் (தூர் மலையில்) நம்மைச் சந்திப்பதற்காக, தம் சமூகத்தாரிலிருந்து எழுபது ஆண்களைத் தேர்ந்தெடுத்தார்; அவர்களைப்பூகம்பம் பற்றிக்கொண்டபோது, அவர், “என் இறைவனே! நீ கருதியிருந்தால், இதற்கு முன்னரே அவர்களையும் என்னையும் நீ அழித்திருக்கலாமே! எங்களிலுள்ள அறிவிலிகள் செய்த (குற்றத்)திற்காக, எங்கள் யாவரையும் நீ அழித்துவிடுகிறாயா? இது உன்னுடைய சோதனையேயன்றி வேறில்லை; இதைக்கொண்டு நீ நாடியவர்களை வழிதவற விடுகிறாய்; இன்னும் நீ நாடியவர்களை நேர் வழியில் நடத்துகிறாய். நீ தான் எங்களுடைய பாதுகாவலன். ஆகவே எங்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக! எங்களுக்கு கிருபை செய்வாயாக. மன்னிப்பவர்களிலெல்லாம் நீ தான் மிக்க மேன்மையானவன்” என்று பிரார்த்தித்தார்.
(Al Quran:7:155)
அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அமீரகத்தில் பூமி அதிர்வு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் தப்பித்தது.
நாளுக்கு நாள் அநியாயங்களும் அகிரம்மங்களும் மிகைத்து வரும் அமீரகம்
என்று பெயர் தாங்கிய இந்த நாடு, ரப்புல் ஆலமீன் தன்னை இந்த மக்களுக்கு நினைவு கூறும் (தண்டனையில் இருந்து பாதுகாத்து கொள்ளும்) வண்ணமாகவும், பாவங்களில் இருந்து விலகி மீண்டு நேரான வழியில் நடக்கவும், ஏற்படுத்தியதுதான் இந்த பூகம்பம்.
என்று பெயர் தாங்கிய இந்த நாடு, ரப்புல் ஆலமீன் தன்னை இந்த மக்களுக்கு நினைவு கூறும் (தண்டனையில் இருந்து பாதுகாத்து கொள்ளும்) வண்ணமாகவும், பாவங்களில் இருந்து விலகி மீண்டு நேரான வழியில் நடக்கவும், ஏற்படுத்தியதுதான் இந்த பூகம்பம்.
இதை அலட்சியப்படுத்தி தொடர்ச்சியான பாவங்களில் இந்த தேசம் மூழ்கி இருக்குமேயானால்? புருஜ் கலீபா என்று சொல்லக்கூடிய உலகத்தின் மிகப்பெரிய கட்டிடம், எங்களிடம் தான் உள்ளது என்று சொல்லி பெருமை அடித்துகொள்ளும் மக்கள் மத்தியில், அடுத்த தலைமுறையினர் அப்படி ஒன்று இங்கு இருந்ததா? என்று கேள்வி கேட்கும் வண்ணம் ஆகிவிடும்! அல்லாஹ் நம் அனைவரையும் பாது காப்பானாக!
எங்கள் இறைவா.. முமீனாக பிறந்த நாங்கள், முமீனாக எங்களை மரணிக்க வைப்பாயாக!
பேர் ஆபத்துகளில் இருந்து எங்களை பாதுகாப்பாயாக! நீயே எங்களுக்கு பாதுகாப்பும் உணவும் அளிக்கிறாய்.....
அமீரகத்தில் இருந்து நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக